வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

வடகிழக்கு இந்தியாவின் நீண்ட நதி எது.?

Updated On: May 16, 2024 1:50 PM
Follow Us:
Longest river of Northeast India in Tamil
---Advertisement---
Advertisement

வடகிழக்கு இந்தியாவின் நீண்ட நதி

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் வடகிழக்கு இந்தியாவின் நீண்ட நதி (Longest river of Northeast India in Tamil) எது என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். பொதுவாக, நாம் அனைவருமே பொது அறிவு வினா விடைகளை தெரிந்து கொள்வது அவசியம். அந்த வகையில் பார்த்தால் இந்தியாவை பற்றிய பொது அறிவு வினா விடைகளை தான் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் பலவகையான ஆறுகள் இருக்கிறது. அவற்றில் எது நீளமான ஆறு, அகலமான ஆறு என அறிந்து கொள்வது அவசியம்.

இதுபோன்ற நதிகள் பற்றிய கேள்விகள் தேர்வுகளில் கேட்கப்படும். ஆகையால், நதிகள் பற்றிய விவரங்களை தெரிந்துகொள்வது அவசியமான ஒன்றாக இருக்கிறது. எனவே, அந்த வகையில் இப்பதிவில் உங்களுக்கு பயனுள்ள வகையில், வடகிழக்கு இந்தியாவின் நீண்ட நதி எது என்பதை கொடுத்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

நதி என்பதற்கான வேறு பெயர்கள்..!

Longest river of Northeast India in Tamil:

வடகிழக்கு இந்தியாவின் நீண்ட நதி

 வடகிழக்கு இந்தியாவின் நீண்ட நதி பிரம்மபுத்திரா ஆறு ஆகும். இந்தியாவின் மிக நீளமான ஆறுகளில் பிரம்மபுத்திரா, சிந்து மற்றும் கங்கை ஆகியவை அடங்கும். அந்த வகையில் பார்த்தல் வடகிழக்கு இந்தியாவின் மிகப்பெரிய ஆறு பிரம்மபுத்திரா ஆறு ஆகும். பிரம்மபுத்திரா ஆறு ஆனது, ஆசியாவின் பெரிய வற்றாத ஜீவநதிகளில் ஒன்றாக இருக்கிறது. இந்நதி திபெத்திலுள்ள கயிலாய மலையில் தொடங்கி கிழக்கு நோக்கி செல்கிறது. அதன் பிறகு, சமவெளிப் பகுதியை அடைகிறது. மவெளிப் பகுதிகளில் திகாங் என்றும் அழைக்கப்படுகிறது. சமவெளிப் பகுதியில் 35 கிமீ தொலைவு கடந்தபின், திபங் மற்றும் லோகித் என்ற ஆறுகளுடன் இணைந்துஅகன்ற ஆறாக மாறி, பிரம்மபுத்திரா என்று பெயர் மாற்றமடைந்து அசாம் மாநிலத்தில் நுழைகிறது.

வங்காளதேசத்தில் பிரம்மபுத்திரா ஆறு ஜமுனா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. அசாம் மாநிலத்தின் முதன்மை ஆறாகவும் திகழ்கிறது. இந்நதி இந்தியா மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகளில் பாய்ந்து வங்காள விரிகுடாக் கடலில கலக்கின்றது. இந்நதி மொத்தம் 2800 கிமீ நீளமுடையது ஆகும்.  பிரம்மபுத்திரா ஆற்றின் வடிநிலம் 661 334 சதுர கிமீ ஆகும்.

கடலில் கலக்காத நதிகள் எது தெரியுமா..?

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now