மாமல்லபுரம் கோவிலை கட்டியவர் யார்? | Mahabalipuram Kovilai Kattiyavar in Tamil

Mahabalipuram Kovilai Kattiyavar in Tamil

மகாபலிபுரம் கோவிலை கட்டியவர் யார்? | Who Built The Mahabalipuram Temple in Tamil 

வணக்கம் நண்பர்களே இன்றைய பொது அறிவு சார்ந்த பகுதியில் தமிழகத்தின் சுற்றுலா தளங்களில் முதன்மையானதாக இருக்கும் மாமல்லபுரம் கோவிலை கட்டியவர் யார் என்று பாரக்கலாம். தமிழ்நாட்டில் முதன் முதலில் அமைக்கப்பட்ட கட்டுமானக் கோயில் மாமல்லபுரம் கோயில் ஆகும். இதில் உள்ள ஒவ்வொரு சிற்பங்களும் தனித்தன்மையானதாக இருக்கும். சரி வாங்க மாமல்லபுரம் கோவிலை கட்டியவர் யார் என்று தெரிந்து கொள்வோம்.

மாமல்லபுரம் கோவிலை கட்டியவர் யார்?

விடை: நரசிம்ம பல்லவனால் மாமல்லபுரம் கோவில் கட்டப்பட்டது.

மகாபலிபுரம் கோவிலை கட்டியவர் யார்?

Mahabalipuram Kovilai Kattiyavar in Tamil: காஞ்சிபுர மாவட்டத்தில் முக்கிய நகரமாகவும், தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலாத்தளமாகவும் உள்ளது. இந்த கோவில் மாமல்லபுரத்தில் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளதால் இதனை மாமல்லபுரம் கடற்கரை கோவில் என்று அழைக்கிறார்கள். ஏழாம் நூற்றாண்டில் பல்லவ நாட்டின் முக்கிய நகரமாக விளங்கியது.

440 புராதன சின்னங்களுள் ஒன்றான மாமல்லபுரம் கோவில் 45 அடி உயரத்தை கொண்டுள்ளது. இந்த கோவிலை கட்டுவதற்கு முன் இந்த இடம் துறைமுகமாக இருந்தது. சோழர் காலத்தில் உள்ள சிற்பங்கள் பல்லவர் காலத்தில் உள்ள சிற்பங்களை விட எளிமையானவையாக அமைக்கப்பட்டுள்ளது.

மாமல்லபுரம் கோவிலை உலக பாரம்பரிய களங்களில் ஒன்று என்று 1984-ல் யுனெஸ்கோ நிறுவனம் அறிவித்தது. கற்களால் செய்யப்பட்ட கோவில்களில் இது மிகவும் சிறப்பு வாய்ந்தது.

மாமல்லபுரத்தை உருவாக்கியவர் யார்?

இந்த கோவிலில் இருக்கும் தேர் சிலைகள், குகைக்கோவில்கள் நல்ல கட்டுமானத்துடன் கட்டப்பட்டுள்ளது. பெரியபுராணம், கலிங்கத்துப் பரணி, நந்திக் கலம்பகம் உள்ளிட்ட தமிழ் இலக்கிய நூல்களில் மகாபலிபுரம் குறித்த தகவல்கள் கூறப்பட்டுள்ளன.

இந்த கோவிலில் உள்ள கற்களில் புராண கதைகள், காவிய போர்கள், பேய்கள், கடவுள்கள், விலங்கினங்கள் என அனைத்தும் நளினமாகவும் மக்களுக்கு புரியும் வகையில் தெளிவாக செதுக்கப்பட்டுள்ளது. பாறைகளை குடைந்து கோவில்கள் கட்டப்படுவது மற்ற நாட்டவர்களுக்கு சவால்விடும் வகையில் அமைந்துள்ளது.

மாமல்லபுரத்தில் உள்ள பெரும்பாலான கோவில்கள் முதலாம் நரசிம்ம பல்லவர் மற்றும் இரண்டாம் நரசிம்ம பல்லவர் காலத்தில் கட்டி முடிக்கப்பட்டது.

இங்கு ஒன்பது குகைக் கோவில்கள் அமைந்துள்ளது. இந்த குகை கோவில்கள் புராணத்தில் உள்ள உண்மை சம்பவங்களை எடுத்து கூறுவதாக அமைந்துள்ளது. இந்த கோவில் பெரும் சுனாமி வந்த போது கூட பெரிய அளவிற்கு பாதிப்படையவில்லை. ஏனெனில் மகாபலிபுரம் கோவிலின் அடித்தளம் வலிமையான கருங்கற்களால் கட்டப்பட்டுள்ளது.

மாமல்லபுரம் வேறு பெயர்கள்:

 1. கடல் மல்லை
 2. மாமல்லை
 3. மாமல்லபுரம்
 4. மஹாபலிபுரம் போன்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது.

மாமல்லபுரம் பார்க்க வேண்டிய இடங்கள்:

 1. கடற்கரைக் கோயில்
 2. குகைக் கோயில்கள்
 3. கிருஷ்ணனின் வெண்ணை உருண்டை
 4. அர்ஜுனன் தபசு
 5. பஞ்ச ரதங்கள்
 6. கிருஷ்ண மண்டபம்
 7. சிற்பக் கல்லூரி
 8. வராக குகை
 9. திறந்தவெளி அருங்காட்சியகம்
 10. மாமல்லபுரம் லைட் ஹவுஸ்
 11. கடல்சார் பாரம்பரிய அருங்காட்சியகம்
 12. சீஷெல் அருங்காட்சியகம்
மாமல்லபுரம் சிற்பங்களின் பட்டியல்

 

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>GK  in Tamil