மக்களின் மகிழ்ச்சியை அளவிடும் நாடு எது?

Advertisement

உலகின் மகிழ்ச்சியை அளவிடும் ஒரே நாடு | Makkalin Magilchiyai Alavidum Ore Nadu

போட்டி தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருக்கும் மாணவி/ மாணவ செல்வங்களுக்கு பயன்படும் வகையில், இந்த பதிவில் தேர்வில் கேட்கப்படும் ஒரு முக்கியமான கேள்விக்கான பதிலை இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்ளலாம். அப்படி என்ன கேள்வி என்று தானே யோசிக்கிறீர்கள்? மக்களின் மகிழ்ச்சியை அளவிடும் நாடு எது என்பது தான் கேள்வி அதற்கான விடையை கீழே விரிவாக படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

மக்களின் மகிழ்ச்சியை அளவிடும் நாடு:

  • உலகில் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளார்களா என்பதை ஐக்கிய நாடுகள் சபை கணக்கிட்டு அதற்கான அறிக்கையை வெளியிடும்.
  • உலக மகிழ்ச்சி தினம் மார்ச் 20-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.
  • மக்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளார்கள் மற்றும் சமூக ஒற்றுமை, உடல்நலம், சுதந்திரம், ஊழல் போன்றவைகளை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படுகிறது. உலகின் மகிழ்ச்சியாக மக்கள் வாழும் நாடு குறித்து ஐ.நா நடத்திய ஆய்வில் பின்லாந்து முதலிடம் பிடித்துள்ளது. 

உலகின் மகிழ்ச்சியான நாடு:

  • ஒவ்வொரு நாட்டிலும் புலம்பெயர்ந்தோரின் மகிழ்ச்சி குறித்தும் முதன்முறையாக ஐ.நா. ஆய்வு நடத்தியது. அதிலும் பின்லாந்து தான் முதலிடம் பிடித்துள்ளது.
  • பின்லாந்தில் இருக்கும் சுவாரசிய கதைகள் மற்றும் இடங்கள் மக்களை சந்தோஷமாக வைத்து கொள்ள உதவுகின்றன. இந்த நாட்டில் வாழும் மக்கள் மட்டும் இன்றி, அகதிகளாக இருக்கும் மக்களும் மகிழ்ச்சியாக உள்ளார்களாம்.
  • இந்த நாடு முதலிடத்தில் இருப்பதற்கான முக்கிய காரணமே அங்கு உள்ள இளைஞர்கள் சமூக முன்னேற்றம் மற்றும் இயலாத மக்களுக்கு ஆதரவு காட்டுவதில் கவனம் செலுத்துகின்றனர்.
  • இந்த ஆய்வு 156 நாடுகளில் நடத்தப்பட்டது. பின்லாந்து தொடர்ந்து நான்காவது முறை இந்த நாடு முதல் பத்து இடங்களில் உள்ளது.

உலகின் மகிழ்ச்சியை அளவிடும் ஒரே நாடு:

  • ஐந்து இடங்களில் நார்வே, டென்மார்க், ஐஸ்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்து போன்ற நாடுகள் உள்ளது. இதில் இந்தியா 133-வது இடத்தை பெற்றுள்ளது.
  • பொருளாதார வளர்ச்சியில் அமெரிக்கா முதலிடத்தில் இருந்தாலும் அங்குள்ள மக்கள் மன அழுத்தம் மற்றும் உடல் நல பிரச்சனையில் அவதிப்படுகிறார்கள். அமெரிக்கா மகிழ்ச்சியாக உள்ள நாடுகளின் பட்டியலில் 16-வது இடத்தை பெற்றுள்ளது. விலைவாசி உயர்வு, எரிபொருள் தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் இலங்கைக்கு 127-வது இடம் தரப்பட்டுள்ளது.
  • பிரிட்டன் நாடு 17-வது இடத்தையும், பிரான்ஸ் 20-வது இடத்தையும், சீனா 84-வது இடத்தையும், பாகிஸ்தான் 105-வது இடத்தையும், வங்கதேசம் 101-வது இடத்தையும் பிடித்துள்ளது.

உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல்:

  1. ஃபின்லாந்து
  2. நார்வே
  3. டென்மார்க்
  4. ஐஸ்லாந்து
  5. சுவிஸர்லாந்து
  6. நெதர்லாந்து
  7. கனடா
  8. நியூசிலாந்து
  9. சுவீடன்
  10. ஆஸ்திரேலியா
  11. ஆஸ்திரியா

மகிழ்ச்சி குறைவான நாடுகள்:

  1. ஆப்கானிஸ்தான்
  2. லெபனான்
  3. ஜிம்பாப்வே
  4. ருவாண்டா
  5. போட்ஸ்வானா
  • மகிழ்ச்சி குறைவாக உள்ள நாடுகளில் பெரும்பாலானவை ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்தவை.
  • மகிழ்ச்சியில் குறைவாக இருக்கும் நாடுகள் இந்த பட்டியலை வைத்து மக்களின் பிரச்சனையை சரி செய்து, அவர்கள் நிம்மதியாகவும், சந்தோசமாகவும் வாழ வழி செய்ய வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
உலகின் மிகச்சிறிய நாடு எது தெரியுமா?

 

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil
Advertisement