மிக குறுகிய கால தமிழ்நாட்டின் முதலமைச்சர் | Miga Kurukiya Kala Muthalamaichchar Yaar

Miga Kurukiya Kala Muthalamaichchar Yaar

மிகக் குறுகிய கால தமிழ்நாட்டின் முதலமைச்சர் பெயர் என்ன?

அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் பொது அறிவு சார்ந்த கேள்வியான தமிழ்நாட்டில் மிக குறுகிய கால அளவில் முதலமைச்சர் பதவியை ஆட்சி செய்தவர் யார் என்று தெரிந்துக்கொள்ளுவோம். முதலமைச்சர் என்பவர் நம்முடைய நாட்டினை முழுவதும் கட்டிக்காக்க கூடியவர். நாட்டு மக்களுக்கு ஏற்படக்கூடிய சிறு சிறு பிரச்சனைகளை அவர்களிடம் மனு மூலம் பெற்று குறைகளை தீர்க்க கூடியவர். 5 வருடத்திற்கு ஒருமுறை வரும் தேர்தலில் முதலமைச்சர் பதவிக்கு நிற்கக்கூடியவர் மாற்றம் பெறுவார்கள். சில நேரம் மாற்றம் அடையாமலும் இருக்கும். அந்த வகையில் இந்த பதிவில் மிகக் குறுகிய கால தமிழ்நாட்டின் முதலமைச்சர் பெயர் என்ன? என்பதைப் பற்றி தெரிந்துக்கொள்ளுவோம். இது பொது அறிவு சார்ந்த விஷயம் என்பதினால் போட்டி தேர்வுக்கு தயாராகும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

நாட்டின் முதல் பெண் கவர்னர் யார்?

மிகக் குறுகிய கால தமிழ்நாட்டின் முதலமைச்சர் பெயர் என்ன?

விடை: வி. என். ஜானகி 

வி. என். ஜானகி :

வி. என். ஜானகி என்பவர் தமிழ்நாட்டில் மிக குறுகிய காலம் முதலமைச்சர் பதவியில் அதாவது (23 நாட்கள்) மட்டுமே முதலமைச்சராக இருந்துள்ளார்.

வைக்கம் நாராயணி ஜானகி, முன்னாள் திரைப்பட நடிகை. முன்னாள் தமிழ்நாட்டின்  முதல்வரும் பிரபல நடிகருமான MGR என்று அழைக்கப்படும் ம. கோ. இராமச்சந்திரனின் மனைவியும் ஆவார்.

இந்தியாவின் முதல் தலைமை தேர்தல் அதிகாரி

பதவியேற்ற காலம்:

MGR, 1987 டிசம்பர் 24 ஆம் நாள் மரணமடைந்த பின்னர், வி. என். ஜானகி 1988 சனவரி 7 தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சராக பதவியேற்றார்.

ஆனால் சட்டமன்றத்தில் தனது தலைமை மீதான நம்பிக்கையில்லாத தீர்மானத்திற்கு தேவையான வாக்குகள் பெற முடியாததால், 1988 ஜனவரி 30 ஆம் நாள் ஆட்சிப்பொறுப்பை இழந்தார்.

வி. என். ஜானகி மொத்தமாக வெறும் 23 நாட்கள் மட்டுமே ஆட்சி பொறுப்பில் இருந்துள்ளார்.

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil