இந்தியாவின் மிக நீளமான கடற்கரை கொண்ட மாநிலம்

Advertisement

மிக நீளமான கடற்கரை கொண்ட மாநிலம் | Miga Nilamana kadarkarai Ulla Manilam

பொதுநலம் வாசகர்களுக்கு வணக்கம். பொது அறிவு தொடர்பான பலவிதமான வினா விடைகளை எங்களது பதிவுகளில் பதிவு செய்து வருகின்றோம். அந்த வகையில் இந்த பதிவில் இந்தியாவின் மிக நீளமான கடற்கரை கொண்ட மாநிலம் எது என்பதை பற்றி நாம் தெரிந்து கொள்வோமா? இது கல்வி கற்கும் மாணவர்கள் முதல் போட்டி தேர்வுக்கு தயாராகும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க இந்தியாவின் மிக நீளமான கடற்கரை கொண்ட மாநிலம் எது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

இந்தியாவின் மிக நீளமான கடற்கரை கொண்ட மாநிலம் எது?

விடை: ஆந்திரப் பிரதேசம்

சிறு குறிப்பு:

இந்தியாவில் பலவகையான கடற்கரை இருக்கிறது என்றாலும். மிகப் பெரிய கடற்கரையை கொண்ட மாநிலமாக அழைக்கப்படுவது ஆந்திரப் பிரதேசம் ஆகும். இந்த மாநிலத்தின் கடற்கரை நீளம் 974 கிலோமீட்டர்கள் (605 mi) ஆகும்.

ஆந்திரப் பிரதேசம் இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களில் ஒன்று ஆகும்.

இந்த மாநிலம் இந்தியாவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. இந்த மாநிலம் பரப்பளவின் படி இந்திய நாட்டின் 8-வது பெரிய மாநிலம் ஆகும்.

ஆந்திர பிரதேசத்தில் உள்ள நகரங்களில் மிகப்பெரிய நகரம் விசாகப்பட்டினம் ஆகும்.

ஜூன் 2, 2014 நாளன்று ஆந்திரப் பிரதேசத்தின் வடகிழக்குப் பகுதி பிரிக்கப்பட்டு தெலுங்கானா என்ற புதிய மாநிலம் உருவாக்கப்பட்டது.

இந்தியாவின் செம்மொழிகளில் ஒன்றான தெலுங்கு இம்மாநிலத்தின் அலுவல்முறை மொழியாகவும் பெரும்பான்மை மக்கள் பேசும் மொழியாகவும் உள்ளது.

இந்தியாவின் இரண்டாவது பெரிய உப்பு நீர் ஏரி எது?

 

 

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil
Advertisement