Inventor of Mobile Phone in Tamil
நகர்ந்து கொண்டே பேசக் கூடிய வசதி அளிக்கும் தொலைபேசிகள் நகர்பேசி என்று அழைக்கப்படுகின்றன. இவை கம்பியில்லாத் தொலைதொடர்புக்கு உதவுபவை. வழக்கம் தொட்டே சாதாரண தொலைபேசிகள் இயங்க அவற்றிற்கு அருகிலுள்ள தொலைபேசி இணைப்பகத்தின் முனையத்துடன் கம்பித் தொடர்பு தேவை. நகர்பேசிகளுக்கு இத்தகைய இணைப்புகள் வானலைகள் மூலம் ஏற்படுத்தப்படுவதால் அவற்றுக்குக் கம்பித் தொடர்பு தேவையில்லை. நகர்பேசியின் இன்னொரு பெயர் செல்பேசி. தற்பொழுது தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக இந்த செல்போனில் பல மாற்றங்கள் வந்துவிட்டது.
தொலைப்பேசியை கண்டுபிடித்தவர் யார் என்று பெரும்பாலனவர்களுக்கு தெரிந்திருக்கும். அலெக்சாண்டர் கிரகாம் பெல் 1876 இல் தொலைபேசியைக் கண்டுபிடித்தார் என்று ஆனால் இப்பொழுது நாம் பயன்படுத்தி கொண்டிருக்கும் செல்போனை கண்டு பிடித்தவர் யார் என்று உங்களுக்கு தெரியுமா? அப்படி செய்தியை என்றால் இந்த பதிவது முழுமையாக படித்து பயன்பெறுங்கள்.
செல்போன் கண்டுபிடித்தவர் யார்? – Mobile Phone Kandupidithavar:
விடை: மார்ட்டின் கூப்பர்
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கடிகாரத்தை கண்டுபிடித்தவர்கள் யார்?
மார்ட்டின் கூப்பர் பற்றிய சில தகவல்கள்:
மார்ட்டின் கூப்பர் டிசம்பர் 26, 1928-ஆம் ஆண்டு பிறந்தவர், இவர் ஒரு அமெரிக்கப் பொறியியலாளர் ஆவார்.
இவர் கம்பியற்ற தகவல்தொடர்புத் துறையில் ஒரு முன்னோடியாகவும் தொலைநோக்குத் தன்மையுடனும் இருக்கிறார்.
இத்துறையில் பதினொரு காப்புரிமைகள் இருப்பதால், அவர் ரேடியோ ஸ்பெக்ட்ரம் நிர்வாகத்தில் ஒரு கண்டுபிடிப்பாளராக அங்கீகரிக்கப்படுகிறார்.
மோட்டோரோலா நிறுவனத்தில் 1970 களில் பணியாற்றியபோது, கூப்பர் முதல் கையடக்க செல்லிடத் தொலைபேசியை 1973-இல் கண்டுபிடித்து 1983-ஆம் ஆண்டில் சந்தைக்கு கொண்டு வந்தார்.
அப்போது வடிவமைக்கப்பட்ட போன் சுமார் 1 கிலோ எடையை கொண்டிருந்துள்ளது. 25 நிமிடங்கள் மட்டுமே பேட்டரி லைப் கொண்ட அந்த போனை பிடித்து பேசுவது கடினம் என அவரே தெரிவித்துள்ளார். மேலும், முதல் முறையாக சந்தையில் விற்பனை தொடங்கிய போது அதன் விலை சுமார் 5,000 டாலர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மார்ட்டின் கூப்பர் “செல்லிடத் தொலைபேசியின் தந்தை” என்று போற்றப்படுகிறார்.
மேலும் ஒரு கையடக்க செல்லுலார் தொலைபேசி அழைப்பை பொதுமக்கள் முன்னிலையில் ஏற்படுத்திய வரலாற்றில் முதல் நபராகவும் இவர் கருதப்படுகிறார்.
உக்ரைனிய யூதக் குடியேறியவர்களுக்கு மார்ட்டின் பிறந்தார். இவர் 1950-ஆம் ஆண்டு இலினாய்ஸ் தொழில்நுட்பக் கழக்த்தில் பட்டம் பெற்றார்.
பின்னர் அவர் அமெரிக்க கடற்படை சேர்க்கப்பட்டார், அங்கு அவர் கொரியப் போரின்போது ஒரு நீர்மூழ்கிக் கப்பல் அதிகாரியாக பணியாற்றினார்.
1957-ஆம் ஆண்டு கூப்பர் ஐ.ஐ.டி.யில் இருந்து மின் பொறியியலில் பட்டம் பெற்றார், 2004 இல் ஐ.ஐ.டி.க்கு கெளரவ முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. அவர் பல்கலைக்கழகத்தின் அறங்காவலர் குழுவில் பணியாற்றுகிறார்.
செல்போன் என்று செல்போனிற்கு எப்படி பெயர் வந்தது?
டெலிபோன்கள் கம்பிகளால் இணைக்கப்பட்டது, ஆனால் செல்போன்கள் அதற்கு முற்றிலும் மாறானது அதாவது கம்பிகள் இல்லாமல் மின்காந்த அலைகள் மூலம் செயல்படுபவை தான் இந்த செல்போன்கள்.
செல்போனில் நாம் பேசும் போது நம் குரல்கள் என்ன ஆகும் அன்றால் மின்காந்த வலைகள் மூலம் உங்கள் எல்லை பரப்பில் இருக்கும் டவருக்கு செல்லும் அந்த டவரில் இருந்து இன்னொரு டவருக்கு மின்காந்த அலைகள் மூலம் தகவல்கள் கடத்தப்படும். அந்த டவரில் இருந்து நீங்கள் யாரிடம் பேச நினைக்கிறீர்களோ அவர்களுக்கு மின்காந்த அலைகள் மூலமாக அவர்களுடைய செல்போனிற்கு தகவல்கள் கடத்தப்படும். இதே முறைகள் அவர்கள் பேசப்படும் தகவல்களும் கடத்தப்பட்டு உங்கள் செல்போனிற்கு தகவல்கள் வந்து சேரும். இது தான் செல்போன் இயங்கும் விதம்.
செல்போன்கள் இயங்குவதற்கு முக்கியமாக செல்போன் டவர்கள் மிகவும் முக்கியம். செல்போன் டவர் வடிவமைக்கும் போது அதனுடைய மின்காந்த அலைகளையுடைய எல்லை பரப்பு வட்ட வடிவத்தில் ஆரம்பத்தில் வடிமைச்சிருக்காங்க.
அவ்வாறு அமைக்கும் போது ஒவ்வொரு வட்டத்திற்கும் இடையிலும் இடைவெளி இருந்துள்ளது. இந்த இடைவெளியில் வசிப்பவர்களுக்கு செல்போன் டவர் கிடைக்காமல் இருந்துள்ளது. ஆக அதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்து அறுங்கோண வடிவமைக்கலாம் என்று முடிவு எடுத்து. அதன் பிறகு மின்காந்த அலைகளின் எல்லைகளின் பரப்பை அறுங்கோண வடிவத்தில் வடிவமைத்துள்ளனர். அதன் பிறகு அனைவருக்கும் செல்போன் டவர் தனக்கு தண்டி இன்றி கிடைத்துள்ளது.
செல்போன் டவர்கள் அலைவரிசைகளை நீங்கள் பார்த்தீர்கள் என்றால் அது செல் வடிவத்தில் இருக்கும். அதன் காரணமாக தான் அதற்கு செல்போன் என்று பெயர் வைக்கப்பட்டது.
செல்போனை முதல் முதலில் பயன்படுத்திய நாடு எது?
என்னதான் செல்போனை அமெரிக்கர்கள் கண்டுபிடித்திருந்தாலும், அதனை முதல் முதலில் செல்போன் சேவையை பயன்படுத்தியது ஜப்பானியர்கள் தான். 1979-யில் நிப்பான் டெலிகிராப் மற்றும் டெலிபோன் கார்ப்பரேஷன் நிறுவனம் தான் முதல் முதலாக அந்த நாட்டில் செல்போன் சேவையை ஆரம்பித்தது. அதன் பிறகு தான் மற்ற நாடுகள் எல்லாம் செல்போன் சேவையை பயன்படுத்த ஆரம்பித்தது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஒற்றைக் காலோடு எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் பெண் யார் தெரியுமா..?
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |