Most Miserable Countries In The World in Tamil
நண்பர்களுக்கு வணக்கம்..! இன்று நாம் காணப்போகும் பதிவு என்ன பதிவாக இருக்கும் என்று யோசிக்கிறீர்களா..? அதை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன் இந்த உலகில் இருக்கும் அனைத்து நாடுகளும் வசதியாக இருக்கிறதா என்று உங்களுக்கு தெரியுமா..? நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், அனைத்து நாடுகளும் பணத்தட்டுபாடு இல்லாமலும், வேலைகள் இல்லாமலும் இருக்கிறதா என்று கேட்கின்றேன். பொதுவாக பணத்தட்டுப்பாடு என்பது அனைத்து நாடுகளிலும் இருக்கிறது. அப்படி பணத்தட்டுப்பாடு உள்ள நாடுகளின் பட்டியலில் நம் இந்தியா எந்த இடத்தில் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
உலகின் பரிதாபமான நாடுகளின் பட்டியல்:
பரிதாபமான நாடுகள் என்பது, பணத்தட்டுபாடு, பணவீக்கம், அதிக கடன் பிரச்சனை, வேலைவாய்ப்பின்மை போன்றவற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளை தான் பரிதமான நாடுகள் என்று சொல்கின்றோம்.
பிரபல பொருளாதார நிபுணரான ஸ்டீவ் ஹான்கே வருடாந்திர துயரக் குறியீட்டை வெளியிட்டுள்ளார். உலக நாடுகளின் பொருளாதார சூழலின் அடிப்படையில் இந்த குறியீடு வெளியிடப்படுகிறது. அதன் படி இந்த ஆண்டின் மிகவும் பரிதாபகரமான நாடுகளின் பட்டியலை இங்கு காண்போம்.
👉 இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் எது தெரியுமா
உலகின் மிகவும் பரிதாபமான நாடுகளின் பட்டியலில் ஜிம்பாப்வே முதலிடத்தை பிடித்துள்ளது. உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன், சிரியா மற்றும் சூடான் நாடுகளை விட ஜிம்பாப்வே முதலிடத்தில் உள்ளது.
ஜிம்பாப்வே நாட்டின் பணவீக்க விகிதம் கடந்த ஆண்டு 243 சதவிகித்தை கடந்தது. வேலைவாய்ப்பின்மை, அதிகப்படியான கடன் வட்டி, பொருளாதார மந்த நிலை ஆகியவற்றின் காரணமாக ஜிம்பாப்வே பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளதாக ஸ்டீவ் ஹான்கே நிபுணர் கூறியுள்ளார்.
இந்திய நகரங்களின் சிறப்பு பெயர்கள் பட்டியல் |
இதனை தொடர்ந்து வெனிசுலா, சிரியா, லெபனான், சூடான், அர்ஜென்டினா, ஏமன், உக்ரைன், கியூபா, துருக்கி, இலங்கை, ஹைட்டி, அங்கோலா, டோங்கா மற்றும் கானா போன்ற நாடுகள் பரிதாபமான நாடுகளின் பட்டியலில் முதல் 15 இடங்களை பிடித்துள்ளன.
அதுபோல 157 நாடுகளின் வரிசையில் இந்தியா 103 -வது இடத்தில் உள்ளது. அதாவது வேலைவாய்ப்பின்மை காரணமாக நம் இந்தியா 103 -வது இடத்தை பிடித்துள்ளது. அதேபோல அமெரிக்கா 134 -வது இடத்தில் உள்ளதாக ஸ்டீவ் ஹான்கே கூறியுள்ளார்.
இந்தியாவில் அதிவேகமாக செல்லும் ரயில் எது தெரியுமா..?
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |