முகலாய பேரரசு TNPSC பொது அறிவு வினா விடைகள்..!| Mugalaya Empire TNPSC Gk Question Answer in Tamil

mughal empire questions and answers in tamil

முகலாய பேரரசின் வரலாற்று பொது அறிவு வினா விடைகள்..!

ஹாய் ஃப்ரண்ட்ஸ்..! இன்றைய பதிவில் நாம் பார்க்க இருப்பது முகலாய பேரரசின் வரலாற்று பொது அறிவு வினா விடைகளை பற்றி தான். முகலாய பேரரசு என்பது நமது இந்திய வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு அரசமைப்பு. அப்படிப்பட்ட சிறப்புமிக்க முகலாய பேரரசின் வரலாற்றில் இருந்து இன்றைய பொது தேர்வுகளில் கேட்கப்படும் சில முக்கியமான பொது அறிவு வினா விடைகளை இன்றைய பதிவில் விரிவாக பார்க்க இருக்கின்றோம். அதனால் பொது தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் நண்பர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக அமையும். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்.

Mugalaya Empire Gk Question Answer in Tamil :

  1. இந்தியாவில் முகலாயப் பேரரசை நிறுவியவர் யார்.?

விடை : பாபர்  

2. பாபர் பிறந்த ஆண்டு.?

விடை : கி.பி.1483

3. யாருடைய வேண்டுகோளை ஏற்று பாபர் இந்தியாவின் மீது படையெடுத்தார்.?

விடை : தெளலத்கான் லோடி

4. முதலாம் பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு.?

விடை : கி.பி.1526

5. முதலாம் பானிபட் போர் யார் யாருக்கு இடையில்  நடைபெற்றது.?

விடை : பாபர் Vs இப்ராஹிம் லோடி

6. ஜாகிருதின் முகம்மது பாபர் இறந்த ஆண்டு.?

விடை : கி.பி 1530

7. பாபர் தனது சுயசரிதையான “துசுக் கி பாபரி” யை எந்த மொழியில் எழுதினார்.?

விடை : துருக்கிய மொழியில் 

8. பாபரின் மரணத்திற்கு பிறகு முகலாய மன்னராக பொறுப்பேற்றவர் யார்.?

விடை : ஹுமாயூன்

9. ஹுமாயூன் என்றால் என்ன பொருள்.?

விடை : அதிர்ஷ்டசாலி

10. 1539- ல் செளசா போரில் ஹூமாயூனைத் தோற்க்கடித்தவர் யார்.?

விடை : ஷெர்ஷா

11. ஹுமாயூன் எந்த ஆண்டு மீண்டும் டெல்லியை கைப்பற்றினார்.?

விடை : கி.பி.1555

12. ஜஹாங்கீரால் மரண விதிக்கப்பட்ட சீக்கிய குரு யார் .?

விடை : அர்ஜுன் சிங் 

13. ஷெர்ஷாவின் ஆட்சி காலம்.?

விடை : 1540-1545

14. கப்பலின் ஒட்டகம் எனச் சொல்லப்படும் தொழில் நுட்பத்தை, உலகத்திலேயே முதல் முறை கண்டறிந்த முகலாய அரசர் யார்.?

விடை : அக்பர்

15. அக்பர் பிறந்த ஆண்டு.?

விடை : 1542

16. அக்பர் எங்கு பிறந்தார்.?

விடை : அமரக் கோட்டை

17. அக்பரின் ஆசிரியர் என அறியப்படுபவர் யார்.?

விடை : ஷேக் முபாரக் 

18. அக்பரின் பாதுகாவலர் யார்.?

விடை : பைராம்கான் 

19. இரண்டாம் பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு.?

விடை : 1556

20. ஹால்டிகாட் போர் நடைபெற்ற ஆண்டு.?

விடை : 1576

21. ஹால்டிகாட் போரில் அக்பர் யாரை வெற்றி கொண்டார்.?

விடை : ராணா பிரதாப் 

22. அக்பர் இயற்கை எய்திய ஆண்டு.?

விடை : 1605

23. நவீன நாணய முறையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்.?

விடை : ஷெர்ஷா சூர் 

24. யாருடைய ஆட்சி காலம் “அந்தப்புர அரசாங்க காலம்” என்றழைக்கப்படுகிறது.?

விடை : மாகம் அனாக

25. ஜஹாங்கீரின் இயற்பெயர் என்ன.?

விடை : சலீம் 

இதையும் படியுங்கள் => 1900 முதல் 1950 வரை நடந்த முக்கியமான வரலாற்று நிகழ்வுகள்

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>GK  in Tamil