முதல் எழுத்துக்களை சார்ந்து வரும் எழுத்துக்கள்

Advertisement

Muthal Eluthukalai Sarnthu Varum Eluthukal

ஹாய் பிரண்ட்ஸ்.. தினமும் தமிழ் பற்றிய பொது அறிவு விஷயங்களை நாம் தெரிந்து வைத்து கொள்வது மிகவும் நல்ல விஷயம். ஏனென்றால் நாம் அரசு நடந்து போது தேர்வுகளில் கலந்துகொள்ளும் போது தமிழ் பாடத்தில் தான் அதிகளவு வினா விடைகள் கேட்கப்படுகிறது. ஆக நாம் தினமும் தமிழ் பற்றிய பொது அறிவு வினா விடைகளை தெரிந்து கொள்வது மிகவும் நல்ல செயலாகும். அந்த வகையில் இந்த பதிவில் முதல் எழுத்துக்களை சார்ந்து வரும் எழுத்துக்கள் யாவை மற்றும் முதல் எழுத்து மற்றும் சார்பெழுத்து பற்றிய வினா விடைக்கையும் படித்தறியலாம் வாங்க.

எழுத்துக்கள் இரண்டு வகைப்படும்:

  1. முதல் எழுத்து
  2. சார்பெழுத்து

முதல் எழுத்துக்கள்:

தமிழில் உள்ள உயிரெழுத்து 12, மெய்யெழுத்து 18, ஆக மொத்தம் 30 எழுத்துகளைத் தமிழ் இலக்கணம் என்னும் மொழியியல் முதலெழுத்து எனக் குறிப்பிடுகிறது.

பிற எழுத்துக்கள் தோன்றுவதற்கும், இயங்குவதற்கும் முதல் காரணமாக இவை இருக்கின்றன. எனவே இவை முதல் எழுத்து என்று அழைக்கப்படுகிறது.

சார்பெழுத்து:

முதல் எழுத்துக்களை சார்ந்து வரும் எழுத்துக்கள் சார்பெழுத்துக்கள் எனப்படும். இந்த சார்பெழுத்துக்கள் பத்து வகைப்படும் அவை..

  1. உயிர்மெய்
  2. ஆய்தம்
  3. உயிரளபெடை
  4. ஒற்றளபெடை
  5. குற்றியலிகரம்
  6. குற்றியலுகரம்
  7. ஐகாரக் குறுக்கம்
  8. ஔகாரக் குறுக்கம்
  9. மகரக் குறுக்கம்
  10. ஆய்தக் குறுக்கம்


பொது அறிவு வினா விடை:

1 எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?

விடை: இரண்டு 

2 முதல் எழுத்துக்கள் எத்தனை?

விடை: 30

3 முதல் எழுத்துக்களைச் சார்ந்து வரும் எழுத்துக்கள் சார்பெழுத்துக்கள் எனப்படும். இவை எத்தனை வகைப்படும்?

விடை: 10

4 மெய் எழுத்துகளும் உயிர் எழுத்துகளும் ஒன்றுடன் ஒன்று சேர்வதால் ———- எழுத்துகள் தோன்றுகின்றன?

விடை: உயிர்மெய்

5 மூன்று புள்ளிகளை உடைய தனித்த வடிவம் பெற்றது?

விடை: ஆயுதம்

6 கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆயுத எழுத்தின் வேறு பெயர்களில் தவறானவற்றை சுட்டுக?

விடை: தொடர்நிலை

தமிழ் எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?

 

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil
Advertisement