முதல் உலக தமிழ் மாநாடு நடைபெற்ற இடம் | Muthal Ulaga Tamil Manadu Engu Nadaipetrathu

Muthal Ulaga Tamil Manadu Engu Nadaipetrathu

முதல் உலக மாநாடு எங்கு நடைபெற்றது? | First World Tamil Conference Place in Tamil

உலகத் தமிழ் மாநாடு என்பது உலகத்தில் உள்ள அனைத்து தமிழர்களையும் ஒன்று சேர்ப்பதற்காக நடைபெறும் ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்த மாநாடு தமிழையும், தமிழரின் பெருமையையும் உலகோர் அறியச் செய்ய கருப்பொருளாக விளங்குகிறது. இம்மாநாட்டில் பங்காற்றுவது ஒவ்வொரு தமிழனின் மொழி காக்கும் செயலாகும். நாம் இன்றைய பொது அறிவு பகுதியில் முதல் உலக மாநாடு நடைபெற்ற இடம் எது என்று தெரிந்துக்கொள்ளலாம். இது மாதிரியான உலக மாநாடுகள் பற்றிய கேள்விகள் போட்டி தேர்வுகளில் அதிகமாக கேட்கப்படுகிறது. வாங்க முதல் உலக மாநாடு நடைப்பெற்ற இடத்தை தெரிந்துக்கொள்ளலாம்.

உலக தமிழ் மாநாடு பட்டியல்

முதல் உலக தமிழ் மாநாடு எங்கு நடைபெற்றது:

விடை: முதல் உலக தமிழ் மாநாடு கோலாலம்பூரில் 1966-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16-23 தேதிகளில் பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. 

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு:

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 2010-ம் ஆண்டு ஜூன் 23 முதல் 27 வரையிலான 5 நாட்கள் கோயம்புத்தூரில் கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது.

2010-ல் கோயம்புத்தூரில் நடைபெற இருந்த உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுக்கு ஈடாகத் தமிழக முதல்வர் மு. கருணாநிதி இந்த மாநாட்டை ஒருங்கிணைத்து இருக்கிறார். தமிழ் இணைய மாநாடும் இந்த மாநாட்டுடன் சேர்த்து நடத்தப்பட்டது.

இந்திய மாநிலங்கள் மற்றும் மொழிகள்

உலக தமிழ் மாநாடு நடைபெற்ற இடங்கள்:

உலக தமிழ் மாநாடுகள்  நடைப்பெற்ற இடங்கள் 
இரண்டாவது உலக தமிழ் மாநாடு சென்னை (1968)
மூன்றாவது உலக தமிழ் மாநாடு பாரிஸ் (1970)
நான்காவது உலக தமிழ் மாநாடு யாழ்ப்பாணம் (1974)
ஐந்தாவது உலக தமிழ் மாநாடு மதுரை (1981)
ஆறாவது உலக தமிழ் மாநாடு மலேசியா 1987
ஏழாவது உலக தமிழ் மாநாடு மொரிசியஸ் (1989)
எட்டாவது உலக தமிழ் மாநாடு  தஞ்சாவூர் (1995)
ஒன்பதாம் மாநாடு  மலேசியா 2015
பத்தாவது உலக மாநாடு  சிகாகோ (2019)

11 உலக தமிழ் மாநாடு:

11-வது உலகத் தமிழ் மாநாடு நடத்துவதன் மூலம் தமிழக மக்களுடன் இணக்கமான சூழலை உருவாக்க முடியும் என்பது மத்திய பா.ஜ.க. அரசின் வியூகம். அதே நேரத்தில் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆட்சியில் அமர்ந்துள்ள திமுக அரசு, உலகத் தமிழ் மாநாட்டை நடத்தி கருணாநிதியின் ஏக்கத்தை நிறைவேற்ற வேண்டும்.

அறிஞர் அண்ணாவுக்கு அடுத்ததாக முதல்வர் மு.க.ஸ்டாலின் உலகத் தமிழ் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்தி சரித்திரம் படைக்க வேண்டும் என்பது மூத்த திமுக தலைவர்களின் எண்ணமாக இருக்கிறது .

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil