Nadagathin Thanthai
நமது வீட்டில் உள்ள ஆண்கள் முதல் பெண்கள் வரை என அனைவரும் அன்றாடம் டிவியில் ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களை பார்க்கும் பழக்கம் என்பது இருக்கும். அதிலும் குறிப்பாக பெண்களுக்கு சீரியல் பார்க்கவில்லை என்றால் அன்றைய நாளானது முழுமை அடைந்தது போன்ற உணர்வே இருக்காது. அந்த வகையில் பார்த்தால் நம் முன்னோர்களின் காலத்தில் எந்த ஒரு டிவியும் கிடையாது. ஆனாலும் கூட அவர்கள் நாடகத்தினை கண்டு களித்தார்கள். நாடகம் என்றால் நீங்கள் இப்போது பார்ப்பது போல் கிடையாது. அந்த காலத்தில் போடப்பட்ட நாடகம் என்பது டிவி இல்லாமல் நேரில் பார்க்கக்கூடும் ஒரு முறையாக இருந்தது. ஆகவே இவ்வளவு தூரம் வரை நாடகத்தினை பற்றி மட்டுமே பேசி கொண்டிருந்தோம். எனவே இந்த நாடகம் என்ற தலைப்பிற்கு ஏற்ற மாதிரியான ஒரு பொது அறிவு வினாவை பார்க்கலாம் வாங்க. அதாவது தமிழ் நாடகத்தின் தந்தை யார் என்று தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
நாடகத்தின் தந்தை யார்..?
தமிழ் நாடகத்தின் தந்தை என்று அனைவராலும் அழைக்கப்படுபவர் பம்மல் சம்மந்த முதலியார் அவரே ஆவார்.
பிறப்பு:
இவர் 1873-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9-ஆம் தேதி அன்று விஜயரங்க முதலியாருக்கும், மாணிக்கவேலு அம்மாளுக்கும் மகனாய் பிறந்தார்.
பம்மல் சமந்தனாரின் தந்தை தமிழ் ஆசிரியராகவும், பள்ளிக் கல்வித் துறையில் ஆய்வாளராகவும் பணியாற்றிய காரணத்தினால் அவரது வீட்டில் சுமார் 2000-ற்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் ஆங்கிலம் புத்தகங்கள் இடம் பெற்றிருக்கிறது.
இத்தகைய புத்தங்கள் அனைத்தினையும் சமந்தனார் ஒன்று ஒன்றாக படித்து வரும் காரணத்தினால் அவருக்கு நாடகத்தின் மீது இருந்த ஆர்வம் ஆனது அதிகரித்து கொண்டே போனது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மின்சார விளக்கில் நிரப்பப்படும் வாயு எது தெரியுமா
நாடகத்தின் மீதான ஆர்வம்:
பின்பு 1891-ஆம் ஆண்டு வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், பட்டதாரிகள் என இவர்கள் அனைவரும் பெல்லாரியில் இருந்து வந்திருந்த ஒரு நாடகக் குழுவில் இருப்பதை கண்டு ஆச்சரியமடைந்த சமந்தனாருக்கு நாடகத்தின் மீது இருந்த பற்று ஆனது அதிகரிக்க செய்தது.
இவற்றின் அடிப்படையாக வைத்து சமந்தனார் அவர்கள் லீலாவதி-சுலோசனா என்ற முதல் நாடகத்தினை வெளியிட்டார். மேலும் தெருக்கூத்து மட்டுமே நாடகமாக இருந்த நிலையினை மாற்றி நகரங்கள் முழுவதும் மேடையினை அமைத்து நாடகங்கள் போடும் அளவிற்கு கொண்டு வந்தார்.
அதேபோல் வடமொழி மற்றும் ஆங்கிலத்தில் இருந்த நாடகங்களையும் தமிழ் மொழிக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்து சிறப்பான ஒன்றாக மாற்றினார். இவரது எழுதுபணியானது உலகெங்கிலும் பேசக்கூடிய ஒன்றாக மாறிவிட்டது.
விருதுகள் மற்றும் புகழ்:
சமந்தனார் எண்ணற்ற நாடகங்ளை எழுதி வல்லமை கொண்ட ஒருவராகவும் மாறிவிட்டார். அதுபோல் இவரின் படைப்புகளுக்காகவும், சிறப்புகளுக்காகவும் சங்கீத நாடக அகாதமி விருது, நாடகப் பேராசிரியர், பத்ம பூஷன் என பல விருதுகளையும் பெற்றார்.
மேலும் இவர் உரைநடை எழுத்தாளர், வழக்கறிஞர், நாடகாசிரியர், மேடை நாடக நடிகர், எழுத்தாளர், நீதியரசர் மற்றும் நாடக இயக்குனர் பல பண்புகளை அடக்கிய ஒரு மனிதராகவும் இருந்தார்.
இறப்பு:
பம்மல் சமந்தனார் 1964-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24-ஆம் தேதி இயற்கை எழுதினார்.
கணிதம் கண்டுபிடித்தவர் யார் தெரியுமா
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |