இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி என்பது உண்மையா..?

Advertisement

இந்தியாவின் தேசிய விளையாட்டு | India Thesiya Vilayattu

பொதுநலம் பதிவின் வாசகர்களுக்கு வணக்கம்..! தினமும் பொது அறிவு சார்ந்த விஷயங்களை நாம் தெரிந்து கொள்வது நம்முடைய மூளையின் செயல்திறனை அதிகரிப்பதற்கு மட்டுமல்ல. நம்முடைய எதிர்கால வாழ்க்கை சிறப்பாக அமைவதற்கும் ஒரு காரணமாக இருக்கிறது. அதனால் தான் நம் பதிவின் வாயிலாக தினமும் ஒரு பொது பயனுள்ள தகவல்களை தெரிந்து கொண்டு வருகின்றோம்.

அதுபோல ஒரு சில பொது அறிவு வினாக்கள் நம்மை சிந்திக்கவும், ஆச்சரியப்படவும் வைக்கும். அப்படி ஆச்சரியப்படும் கேள்விகளில் ஒன்று தான் இந்தியாவின் தேசிய விளையாட்டு எது என்பது. நம்மில் பலருக்கும் இந்தியாவின் தேசிய விளையாட்டு எது என்று அவ்வளவாக தெரியாது. அதனால் இந்த பதிவின் வாயிலாக இந்தியாவின் தேசிய விளையாட்டு எது என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க.

இந்தியாவின் தேசிய விளையாட்டு எது?

விடை: ஹாக்கி இந்தியாவின் தேசிய விளையாட்டு ஆகும்.

India Desiya Vilayattu – இந்தியாவின் தேசிய விளையாட்டு என்ன..?

  • தேசிய விளையாட்டு தினம் ஆகஸ்ட் 29 கொண்டாடப்படுகிறது. குழுவாக சேர்ந்து விளையாடும் விளையாட்டு ஹாக்கி. இரண்டு அணிகள் இந்த விளையாட்டில் போட்டி இடுவார்கள். ஒவ்வொரு அணியிலும் மொத்தம் 11 பேர் இருப்பார்கள்.
  • ஹாக்கி விளையாடும் இடம் செவ்வக வடிவில் இருக்கும். விளையாடும் இடத்தின் நீளம் 100 கெஜம், அகலம் 60 கெஜம் ஆகும்.
  • வெற்றி கொடி கட்டியிருக்கும் கம்பத்தின் அகலம் 12 அடி உயரம் 7 ஆகும். பந்தின் எடை 156 கிராம் முதல் 163 கிராம் இருக்கும். 22.4 செ.மீ முதல் 23.5 செ.மீ வரை ஹாக்கி விளையாட்டில் பயன்படுத்தப்படும் பந்தின் சுற்றளவு இருக்கலாம்.
  • இந்த விளையாட்டு இரண்டு பகுதியாக பிரிக்கப்பட்டு விளையாடப்படுகிறது. முதல் பகுதி 30 நிமிடம், இரண்டாம் பகுதி 30 நிமிடம். இடைவெளி ஒரு 5 நிமிடம்.

மேலும் ஹாக்கி விளையாட்டானது, நம் இந்தியாவில் பல தங்கப்பதக்கங்களை வென்றுள்ளது. ஹாக்கி இந்தியாவின் தேசிய விளையாட்டாக இருப்பதற்கு முக்கிய காரணம் இந்தியா 1928 ஆம் ஆண்டு முதல் 1956 ஆம் ஆண்டு வரை ஹாக்கி விளையாட்டில் உலகளவில் சிறந்து விளங்கி வந்தது.

இந்தியா தொடர்ந்து 6 ஒலிம்பிக் தங்கபதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது. இந்தியா விளையாடிய 21 போட்டிகளில் 18 போட்டிகளில் வெற்றி பெற்றது. மேலும் இந்தியாவில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளிலும் தங்கப்பதக்கங்களை வென்று சாதனை படைத்தது. இப்படி ஹாக்கி விளையாட்டானது இந்தியாவில் கொடிகட்டி பறந்ததால், இந்தியாவின் தேசிய விளையாட்டாக போற்றப்பட்டது.

ஆனால் இந்தியாவில் தேசிய விளையாட்டு ஹாக்கி இல்லை என்றால் உங்களால் நம்பமுடிகிறதா..? அதை பற்றி விரிவாக கீழே காண்போம்.

இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி இல்லை..?

இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி என்று நாம் தான் சொல்லிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் நம் இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கியும் இல்லை. இந்திய தேசிய விளையாட்டு எது என கேட்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஐஸ்வர்யா பரேசார் என்பவரால் கேள்வி எழுப்பப்பட்டது.

இதனை தொடர்ந்து கடந்த 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் தேதி, ஹாக்கி நமது தேசிய விளையாட்டு இல்லை என தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரியவந்தது. அதுமட்டுமில்லாமல் இந்தியாவுக்கு என்று எந்த ஒரு தேசிய போட்டியும் இல்லை என தகவல் அறியும் உரிமை சட்டம் கூறியுள்ளது.

இந்தியாவின் தேசிய மரம் எது?

உலக நாடுகளின் தேசிய விளையாட்டுகள்:

  1. இலங்கையின் தேசிய விளையாட்டு எது?

விடை: கைப்பந்து (Volleyball) இலங்கை நாட்டின் தேசிய விளையாட்டாகும்.

2. ஸ்பெயின் நாட்டின் தேசிய விளையாட்டு எது?

விடை: காளை அடக்குதல்

3. ரஷ்யா நாட்டின் தேசிய விளையாட்டு

விடை: செஸ், கால்பந்து

4. பிரேசில் நாட்டின் தேசிய விளையாட்டு

விடை: கால்பந்து

5. இங்கிலாந்து நாட்டின் தேசிய விளையாட்டு

விடை: கிரிக்கெட்

6. துருக்கி நாட்டின் தேசிய விளையாட்டு

விடை: மல்யுத்தம்

7. ஸ்காட்லாந்து நாட்டின் தேசிய விளையாட்டு

விடை: ரக்பீ, கால்பந்து

8. சீன நாட்டின் தேசிய விளையாட்டு

விடை: டேபிள் டென்னிஸ்

9. மலேசிய நாட்டின் தேசிய விளையாட்டு

விடை: பேட்மிட்டன்

10. அமெரிக்காவின் தேசிய விளையாட்டு

விடை: பேஸ்பால்

11. ஜப்பான் நாட்டின் தேசிய விளையாட்டு

விடை: ஜுடோ அல்லது ஜீட்சு

12. இந்தோனேசியா நாட்டின் தேசிய விளையாட்டு

விடை: பேட்மிட்டன்

13. கனடா நாட்டின் தேசிய விளையாட்டு

விடை: ஐஸ் ஹாக்கி

14. ஆஸ்திரேலியா நாட்டின் தேசிய விளையாட்டு

விடை: கிரிக்கெட்

இந்தியாவின் தேசிய நதி எது?
இவரது பிறந்த தினம் தேசிய விளையாட்டு

 

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil
Advertisement