தேசிய நூலக தினம் எப்போது? | National Library Day in Tamil

National Library Day in Tamil

தேசிய நூலக நாள் எது? | Thesiya Noolaga Naal

நம்முடைய கல்வி வளர்ச்சிக்கும், அறிவை மேம்படுத்துவதற்கும் பெரிதும் உதவியாக இருப்பது நூலகம். ஏழை மக்கள், பணக்கார மக்கள் என்று எவ்வித பாகுபாடும் பாராமல் அனைவரும் ஒன்றாக படிக்கக்கூடிய இடமாக சிறந்து விளங்குவது நம் ஊரில் இருக்கும் நூலகங்கள். இப்படி அறிவுக்கும், ஆற்றலுக்கும் பயன்படும் நூலகத்தை போற்றும் விதமாக நூலக தினம் கொண்டாடப்படுகிறது. நாம் இந்த தொகுப்பில் தேசிய நூலக தினம் எப்போது கொண்டாடப்படுகிறது என்று தெரிந்து கொள்வோம் வாங்க.!

தேசிய நூலக தினம் எப்போது?

 • ஆகஸ்ட் 12-ம் தேதி தேசிய நூலக தினம் கொண்டாடப்படுகிறது.

தேசிய நூலகர் தினம் உருவானது எப்படி?

 • Thesiya Noolaga Naal: இந்திய நூலக அறிவியலின் தந்தை என போற்றப்படும் எஸ்.ஆர். ரங்கநாதன் அவர்களின் பிறந்த தினத்தை தான் தேசிய நூலக தினமாக கொண்டாடுகிறோம். ஏன் இவர் பிறந்த தினத்தை நூலக தினமாக கொண்டாட வேண்டும் என்று கேள்வி எழுகிறதா? வாங்க அதற்கான விடையை படித்தறியலாம்.

இந்திய நூலக தந்தை எனப் போற்றப்படுபவர்

தேசிய நூலக தினம் எப்போது

 • ரங்கநாதன் அவர்கள் ஆகஸ்ட் 12-ம் தேதி 1892-ம் ஆண்டு தஞ்சாவூரில் உள்ள சீர்காழியில் பிறந்தார். தந்தை பெயர் ராமாமிருதம், தாயார் பெயர் சீதாலட்சுமி. ரங்கநாதனுக்கு ஆறு வயது இருக்கும் போது அவர் தந்தை இவ்வுலகை விட்டு மறைந்தார்.

கல்வி:

 • இந்திய நூலகத்தின் தந்தை: தந்தை மறைவிற்கு பிறகு தாயார் ரங்கநாதரை அவரது சகோதரர் வீட்டிற்க்கு அழைத்து சென்றார். அங்கு தனது கல்வியை தொடங்கினார். கல்லூரி படிப்பிற்காக சென்னை சென்று அங்கு இளங்கலை பட்டமும், கணிதத்தில் முதுகலை பட்டமும் பெற்றார். பின் அவருக்கு சென்னையிலையே ஒரு ஆசிரியர் வேலை கிடைத்தது.

திருமணம்:

 • Thesiya Noolaga Naal: ரங்கநாதன் அவர்களுக்கு இளமையாக (15 வயதில்) இருக்கும் போதே ருக்மணி எனும் பெண்ணை திருமணம் செய்து வைத்தனர். மனைவி ருக்மணி ஒரு விபத்தில் இறந்துவிட்டார், பின் சாரதா எனும் பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

பணி:

 • இந்திய நூலகத்தின் தந்தை: தனது கல்வியை முடித்த பின்பு மங்களூர், கோயம்புத்தூர் அரசு பள்ளிகளிலும், மதராஸ் பிரெசிடென்சி கல்லூரியில் ஆசிரியராகவும் பணியாற்றினார்.
 • ஆசிரியர் பணியில் இவருக்கு குறைவான வருமானமே கிடைத்தது. தன்னுடைய பொருளாதார நிலையை உயர்த்துவதற்காக சென்னை பல்கலைகழகத்தில் நூலக பணிக்கு விண்ணப்பித்தார், பின் நூலகராக வேலைக்கு சேர்ந்தார்.
 • ஆரம்பத்தில் அவருக்கு நூலக பணி பிடிக்கவில்லை, ஆனால் பிரெசிடென்சி கல்லூரியின் அதிபரின் வேண்டுகோளால் நூலகர் பணியில் இருக்க முடிவு செய்தார். நூலக பயிற்சிக்காக இவர் லண்டன் சென்று ஒன்பது மாதங்கள் பயிற்சி பெற்றார்.

நூலகத்தில் சேவை:

 • National Library Day in Tamil: நூலக பயிற்சியை முடித்து விட்டு 1925-ம் ஆண்டு சென்னை திரும்பினார். அப்பொழுது சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ள நூலகத்தில் வேலையாட்கள், வடிவமைப்பு எதுவும் சரியாக இல்லை. புத்தகம் வாசிப்பவர்களின் எண்ணிக்கையும் குறைவாகவே இருந்தது.
 • நூலகத்தை சீரமைப்பதற்காக புத்தகத்தை எந்த வித சிரமும் இல்லாமல் எடுப்பதற்காக கோலன் பகுப்பு முறை ஒன்றை தோற்றுவித்தார். புத்தகங்கள் தான் மனிதரின் குண நலன்களை மாற்றியுள்ளது என்பதை அறிந்து ஐந்து விதிகளை அறிமுகம் செய்தார்.
 1. புத்தகங்கள் பயன்படுத்தும் முறை
 2. வாசகரின் நேரத்தை பாதுகாத்தல்
 3. நூலகம் ஒரு வளரும் அமைப்பு
 4. ஒவ்வொரு வாசகருக்கும் புத்தகம்
 5. ஒவ்வொரு புத்தகத்திற்கும் வாசகர்
 • இது போன்ற பல நல்ல செயல்களை செயல்படுத்தியதால் இவருக்கு இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கியது. அதனால் தான் இவரை இந்திய நூலகவியலின் தந்தை என்றும், அவரது பிறந்த தினத்தை தேசிய நூலக தினமாகவும் கொண்டாடுகிறோம்.

மறைவு:

 • National Library Day in Tamil: நூலகத்திற்கு பல செயல்களை செய்த ரங்கநாதன் அவர்கள் செப்டம்பர் மாதம் 27-ம் தேதி 1972-ம் ஆண்டு இவ்வுலகை விட்டு விண்ணுலகை அடைந்தார்.
இந்திய தேசிய நூலகம் அமைந்துள்ள இடம்

 

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>GK  in Tamil