நெடுந்தொகை என்று அழைக்கப்படும் நூல் எது?

Advertisement

நெடுந்தொகை என அழைக்கப்படும் நூல் எது?

Nedunthogai Nool : நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் பொதுங்கலாம்.காம் பதிவின் அன்பான வணக்கங்கள்.. தினமும் பலவகையான பொது அறிவு சார்ந்த விடைகளை பதிவு செய்து வருகின்றோம். அந்த வகையில் நாம் இன்று தெரிந்துகொள்ள இருக்கும் வினா விடை எதுவென்றால் நெடுந்தொகை என்று அழைக்கப்படும் நூல் எது?, அதற்கு ஏன் நெடுந்தொகை என்று பெயர் வைக்கப்பட்டது போன்ற தகவல்களை நாம் பார்க்கலாம். அதற்கு முன் ததங்களிடம் கேட்க வேண்டிய ஒரு வேண்டுகோள் என்னவென்றால். நீங்கள் ஒரு மாணவ மாணவிகளாக இருந்தால் தினமும் ஒரு பொது அறிவு விஷயங்களை பற்றி படித்து தெரிந்து கொள்ளுங்கள். அது உங்கள் எதிர்காலத்திற்கு மிகவும் பயன்படும். சரி வாங்க நெடுந்தொகை நெடுந்தொகை என அழைக்கப்படும் நூல் எது? என்று பார்ப்போம்.

நெடுந்தொகை என்று அழைக்கப்படும் நூல் எது?

விடை: அகநானுறு.

அகநானூறு எட்டுத்தொகை எனப்படும் சங்ககாலத்தமிழ் நூல் தொகுப்பில் உள்ள ஒரு நூலாகும். இந்த நூலில் 13 அடி சிற்றெல்லையும் 31 அடி பேரெல்லையும் கொண்ட நீண்ட பாடல்களைக் கொண்டிருப்பதால் இதனை, ‘நெடுந்தொகை’ நூல் என்று அழைக்கப்படுகிறது.

அகநானுறு – Nedunthogai Nool:

ஆசிரியப்பாவால் அமைந்த அகப்பொருள் பாடல்கள் நானூறு தொகுக்கப்பட்டு அகநானூறு என்ற பெயரால் குறிக்கப்பட்டன.

பாண்டியன் உக்கிரப்பெருவழுதி என்ற மன்னனின் வேண்டுகோளுக்கு இணங்க, உப்பூரிகுடிகிழார் மகனார் உருத்திரசன்மன் என்ற புலவர் இந்நூலைத் தொகுத்துள்ளார்.

145 புலவர் பெருமக்கள் இந்நானூறு பாடல்களையும் பாடியுள்ளனர். இந்நூலுக்கு நெடுந்தொகை என்ற வேறு பெயரும் உண்டு. இது அருகிய வழக்காகவே உள்ளது.

களிற்றியானை நிரை, மணிமிடைபவளம், நித்திலக்கோவை என்ற மூன்று பிரிவுகளைக் கொண்டது இந்த நூல்.

களவு, கற்பு என்ற இரு கைகோளிலும் (ஒழுக்கத்திலும்) அமைந்த முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல் ஆகிய திணைப்பாடல்களைக் கொண்டது, இலக்கியத் தரம் மிக்கது.

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil
Advertisement