No Mosquito Country in Tamil
இன்றைய பதிவில் நாம் அனைவருக்கும் மிகவும் பயனுள்ள மற்றும் சுவாரசியமான ஒரு தகவலை பற்றி தான் அறிந்துகொள்ள போகின்றோம். அப்படி என்ன தகவல் என்றால் உலகில் கொசுவே இல்லாத நாடு எது என்பதை பற்றி தான் அறிந்துகொள்ள போகிறோம். என்னது கொசுக்களே இல்லாத நாடு அப்படி ஒரு நாடு இருக்கிறதா..? என்று நீங்கள் சிந்திப்பது புரிகின்றது. ஆம் நண்பர்களே அப்படி ஒரு நாடு உலகில் உள்ளது. அது எந்த நாடு அந்த நாடு எங்கு உள்ளது போன்ற தகவல்களை தான் இன்றைய பதிவில் காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அது எந்த நாடு அங்கு ஏன் கொசுக்களே இல்லை என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
இதையும் படித்துப்பாருங்கள்=> நீண்ட நாட்கள் உயிர்வாழும் 5 உயிரினங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா
Which Country has No Mosquitoes in Tamil:
பொதுவாக கொசுக்கடி வாங்கியவர்களுக்குத்தான் தெரியும் கொசு எவ்வளவு கொடூரமான பூச்சு என. இந்த கொசுக்களின் கடியினால் பலரின் இரவு தூக்கம் பறிபோயிருக்கும்.
அந்த சமயத்தில் எல்லாம் அவர்களின் மனதில் தோன்றும் ஒரு எண்ணம் என்னவென்றால் கொசுவே இல்லாத நாட்டுக்கு போய்விட்டால் எப்படி இருக்கும்..?அப்படி ஒரு நாடு இருந்தால் நான் தான் அங்கு முதலில் செல்வேன் என்பது தான்.
உங்களின் எண்ணம்போல் அப்படி ஒரு நாடு உள்ளது என்றால் நம்புவீர்களா..? ஆம் நண்பர்களே அப்படி ஒரு நாடு உள்ளது. அது என்ன நாடு என்றால் வடக்கு அட்லாண்டிக் பகுதியில் உள்ள ஐஸ்லாந்து தான்..! இதுதான் உலகில் கொசுவே இல்லாத ஒரே நாடு.
இதையும் படித்துப்பாருங்கள்=> கரப்பான் பூச்சிக்கு எத்தனை இதயம் உள்ளன தெரியுமா
இந்த நாட்டில் மனித உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் எந்த ஒரு உயிரினமும் இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இங்கு இருக்கும் மற்றொரு சிறப்பு என்னவென்றால் இந்த நாட்டில் பாம்புகளும் கூட கிடையாதாம்.
இங்கு ஏன் கொசுக்கள் வாழமுடியவில்லை:
பொதுவாக கொசுக்களினால் அனைத்து காலநிலைகளிலும் உயிர்வாழ்ந்து இனப்பெருக்கம் செய்யமுடியும். அதிலும் குறிப்பாக குளிர்காலத்திலும் இவற்றால் வாழ்ந்து இனப்பெருக்கம் செய்யமுடியும் என்றாலும் ஐஸ்லாந்தில் மட்டும் இவற்றால் வாழ முடியவில்லை என்பது ஆராச்சியாளர்களுக்கு மிக பெரிய குழப்பமாக இருந்தது.
அதனை பற்றி ஆராய்ந்த போது பொதுவாக கொசுக்கள் தண்ணீரில் தான் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கின்றன. ஆனால் ஐஸ்லாந்தில் மூன்று முறை மிகப்பெரிய உறைபனி காலம் வருகிறது. அதனால் அங்கு கொசுக்கள் வாழவோ, முட்டையிடவோ முடியாது. அதனால் தான் ஐஸ்லாந்தில் கொசுக்கள் இல்லை என்று ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர்.இதையும் படியுங்கள்⇒ வித்தியாசமாக தூங்கும் விலங்கு எது தெரியுமா
மேலும் ஐஸ்லாந்தில் உள்ள மண் மற்றும் தண்ணீரில் உள்ள இரசாயன கலவையினால் கூட கொசுக்களினால் இங்கு இனப்பெருக்கம் செய்ய முடியவில்லை என்று ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர்.
உலகில் மாறிவரும் பருவநிலை மாற்றங்களால் விரைவில் கொசுக்கள் அங்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறுகின்றனர்.
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |