நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் யார்?

Advertisement

நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் – Nobel Parisu Petra First Indian Name

வணக்கம் நண்பர்களே..! ஆண்டு தோறும் இலக்கியம், உலக அமைதி, மற்றும் அறிவியல் தொழில்நுட்பங்களில் பெரும் பங்காற்றியவர்களுக்கு 1901 ஆம் ஆண்டு முதல் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இதுவரை 13 இந்தியர்கள் இந்த பரிசைப் பெற்றுள்ளனர். அவர்களில் சிலர் இந்தியக் குடியுரிமை உள்ளவர்கள் அல்லது இந்தியாவில் பிறந்த வெளிநாட்டவர் ஆவர்.

முதல் முதலில் இந்த நோபல் பரிசை பெற்ற முதல் இந்தியர் யார் என்று உங்களுக்கு தெரியுமா..? தெரியவில்லை என்றாகிலும் பரவாயில்லை. ஏனென்றால், இன்றைய பதிவின் வாயிலாக நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் யார் என்பதை பற்றியும் அவரை பற்றிய சில தகவல்களையும் இந்த பதிவின் வாயிலாக படித்தறியலாம் வாங்க.

நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் யார்?

விடை: ரவீந்திரநாத் தாகூர்

ரவீந்திரநாத் தாகூர் நோபல் பரிசு:

  1. ஆங்கிலத்தில் புலமை கொண்டவரான ரவீந்திரநாத் தாகூர் 1861 ஆம் ஆண்டு மே 7 ஆம் தேதி தேவேந்திரநாத் தாகூர், சாரதா தம்பதிகளுக்கு கொல்கத்தாவில் பிறந்தார்.
  2. இவருடன் பிறந்தவர்கள் 13 பேர். வீட்டின் கடைசிப் பிள்ளையாக பிறந்திருந்தாலும் உலகமே வியக்கும் கவிஞராக இருந்தார்.
  3. ரவீந்திரநாத் தாகூர் அவர்கள், இந்திய கலாச்சாரத்தின் அடையாளமாகத் திகழ்ந்தவர். அவர் ஒரு கவிஞர், தத்துவஞானி, இசையமைப்பாளர், எழுத்தாளர், மற்றும் ஒரு கல்வியாளரும் கூட.
  4. ரவீந்திரநாத் தாகூர் பாரிஸ்டர் பட்டம் பெறுவதற்காக 1878 ஆம் ஆண்டு இங்கிலாந்திற்கு சென்றவர் அங்குள்ள கல்வி முறையை அறிந்துகொண்டார். அதன்படி கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்த “சாந்தி நிகேதன்” பள்ளியைத் துவங்கினார்.
  5. உலகின் கல்வியாளர்கள் இன்றும் இப்பள்ளியை பாராட்டுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு படித்தவர்தான் புகழ்பெற்ற இந்திய இயக்குநர் சத்யஜித்ரே ஆவர்.
  6. 1913 இல், அவரது கவிதைத் தொகுப்பான ‘கீதாஞ்சலி’ என்ற படைப்புக்காக, நோபல் பரிசு வென்று, ஆசியாவின் முதல் நோபல் பரிசுக்கான வெற்றி வாகை சூட்டப்பட்டவர் என்ற பெருமையைத் தட்டிச் சென்றவர்.
  7. ஆங்கிலேய அரசரான கிங் ஜார்ஜ். V அவர்களால் ‘வீரத்திருமகன்’ என்ற பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது.
  8. விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தை நிறுவிய ரவீந்திரநாத் தாகூர் அவர்கள், பிரபலமாக ‘குருதேவ்’ என்றும் அழைக்கப்பட்டார்.
  9. அவரது பிரபலமான இசைதட்டுகள் அனைத்தும் ‘ரவீந்திரசங்கீத்’ என்ற பேரில் அழைக்கப்பட்டன.
  10. இவர் இயற்றிய ரவீந்திரசங்கீத் நியதியிலுள்ள இரண்டு பாடல்களான “ஜன கண மன” மற்றும் “அமர் சோனார்”, இந்தியா மற்றும் வங்காளத்தின் தேசிய கீதங்களாக உள்ளது.
  11. நம் நாட்டின் தேசிய கீதத்தை உருவாக்கிய அத்தகைய சிறப்பு வாய்ந்த கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் ஆவர்.
  12. தனது 80 வது வயதில் உடல்நலக்குறைவால் கொல்கத்தா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தவர், கடந்த 1941 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி மரணம் அடைந்தார்.
  13. காலங்கள் கடந்தாலும் ’ஜன கண மன’ மூலம் ஒவ்வொரு இந்தியரின் இதயத்திலும் வாழ்ந்து வருகிறார்.
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil
Advertisement