உலகின் மிக பழமையான மொழி எது.?

Advertisement

Oldest Language in the World in Tamil | பழமையான மொழி எது

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். உலகின் மிக பழமையான மொழி எது.? என்பதை இப்பதிவின் வாயிலாக தெரிந்துகொள்ளலாம் வாங்க. பல வரலாற்று ஆராச்சிகளின்படி உலகின் மிக பழமையான மொழியாக தமிழ் அல்லது சமஸ்கிருதம் இருந்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. தமிழ் என்பது, திராவிட மொழி ஆகும். சமஸ்கிருதம் என்பது ஒரு பண்டைய இந்தோ-ஆரிய மொழியாகும்.

சமஸ்கிருதம் இந்து மத நூல்கள், பண்டைய இந்திய இலக்கியங்கள் மற்றும் தத்துவ நூல்களில் பயன்படுத்தப்படுகிறது. இந்த இரண்டு மொழிகளும் பழங்காலத்தில் இருந்தே பயன்பாட்டில் இருந்து வருகிறது. இவற்றில் எது பழைமையான மொழி என்ற குழப்பம் அனைவருக்கும் இருந்து வருகிறது. சமஸ்கிருதம் மற்றும் தமிழ் இவை இரண்டுமே பழமையான மொழி தான். ஆனால் இவற்றுள் எது முதலில் தோன்றிய பழமையான மொழி என்பதை அனைவரும் அறிந்து கொள்ள விரும்புகிறார்கள். எனவே, Oldest Language in the World Tamil or Sanskrit என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

பழமையான தமிழரின் அளவீட்டு முறைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

Oldest Language in the World Tamil or Sanskrit | உலகின் மிக பழமையான மொழி எது.?

உலகின் மிக பழமையான மொழியாக தமிழ் அல்லது சமஸ்கிருதம் இருந்திருக்க வேண்டும். இவற்றில் எது மிகவும் பழமையான மொழி என்பதை தீர்மானிப்பது கடினமாக உள்ளது. இருந்தாலும், பல ஆராய்ச்சிகளின்படி  தமிழ் சமஸ்கிருதத்தை விட பழமையான மொழி என்று கூறப்படுகிறது.

ஏனென்றால் தமிழ்மொழியின் பதிவுகள் கிமு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கிறது. மறுபுறம், சமஸ்கிருத மொழியின் பதிவுகள் கிமு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கிறது. தமிழ்மொழி அன்று முதல் இன்று வரை பயன்பாட்டில் இருந்து வருகிறது. ஆனால், சமஸ்கிருதம் கிமு 600 -ல் அழிந்தது. ஆனால், இன்று முக்கியமாக மத மற்றும் இலக்கிய நோக்கங்களுக்காக சமஸ்கிருதம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அமெரிக்கன் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியன் ஸ்டடீஸ் (AIIS) நடத்திய ஆய்வின்படி, உலகில் பேசப்படும் மொழிகளில் தமிழ் மிகவும் பழமையானது, ஆனால் சமஸ்கிருதம் மிகவும் பழமையான எழுத்து மொழியாகும் என்றும் கூறப்படுகிறது. மேலும், தமிழில் இலக்கியம் மற்றும் வரலாற்று நூல்கள் ஏராளமாக இருப்பது அதன் பண்டைய தோற்றத்தை மேலும் நிறுவுகிறது.

இன்னும் பல ஆராய்ச்சிகளின்படி, சமஸ்கிருதம் முதன்முதலில் பேசப்படும் மொழியாக இருந்தது என்று கூறப்படுகிறது. எனவே, சமஸ்கிருதம் மற்றும் தமிழ் இரண்டுமே செம்மையான வரலாற்றை கொண்ட பழமையான மொழிகள் ஆகும். இதனை கண்டறிவது மிகவும் கடினமான ஒன்றாகும்.

இருந்தாலும், பெரும்பாலான ஆராய்ச்சிகளில் தமிழ்மொழி தான் உலகின் மிக பழமையான மொழியாக இருந்திருக்ககூடும் என்று கணிக்கப்படுகிறது.

உலகில் அதிகம் பேசப்படும் மொழி எது என்று தெரியுமா..?

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil
Advertisement