ஒரிசாவின் மிக முக்கியமான நதி எது?

Advertisement

ஒரிசாவின் மிக முக்கியமான நதி எது? | Orissa Important River Name in Tamil | ஒடிசாவின் மிக முக்கியமான நதி

இந்த உலகம் ஐம்பூதங்களால் ஆனது அவை நீர், நிலம், ஆகாயம், காற்று மற்றும் நெருப்பு என்று நம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். இந்த ஐம்பூதங்களில் ஒன்று நீர். இயற்கையின் வரமாக கிடைக்கும் நீரானது மனிதனுக்கு மட்டுமின்றி, பிற உயிர்கள், தாவரங்கள் என அனைத்திற்கும் அத்தியாவசிய தேவை ஆகும். இந்த நீரினை ஆறு, குளம், ஏரி போன்றவற்றில் இருந்து நாம் பயன்படுத்திக் கொள்கிறோம். இந்த நீரினை வைத்தும் பலவகையான பொது அறிவு வினாக்கள் போட்டி தேர்வுகளில் கேட்கப்படுகிறது. அந்த வகையில் இந்த தொகுப்பில் ஒரிசாவின் மிக முக்கியமான நதி எது? என்பதை பற்றி படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

ஒரிசாவின் மிக முக்கியமான நதியின் பெயர் என்ன?

விடை: மகாநதி

மகாநதி பற்றிய சிறு குறிப்புகள்:

ஒடிசா இந்தியாவின் கிழக்கு பகுதியில் அமைத்துள்ளது. இதன் பழைய பெயர் ஒரிசா ஆகும். ஒடிசாவில் மிக முக்கிய நதியாக அழைக்கப்படுவது மகாநதியாகும்.  அதாவது  சாத்புரா மலைத்தொடர்களில் தொடங்கி கிழக்குத்திசையில் பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

இவ்வாறு சத்தீஸ்கர் மற்றும் ஒரிசா மாநிலங்களின் வழியாகப் பாய்கிறது. சத்தீஸ்கரின் கங்கை என்று அழைக்கப்படும் நதி இது. மகாநதியின் மொத்த நீளம் 851 கிமீ. அதில், 286 கிமீ பாய்வது இம்மாநிலத்தில்தான்.

சிவநாத், அர்பா, ஜோங்க், ஹஸ்தேவ் போன்றவை மகாநதியின் கிளை நதிகள். மகாநதியும் அதன் கிளை நதிகளும் சத்தீஸ்கர் மாநிலத்தின் நீராதாரத்தில் 53.48% பங்கு வகிக்கின்றன.

ஆசியாவின் மிக உயரமான கோபுரம் எது?

இந்திய நதிகளைப் போலவே, மகாநதியும் பல மலை ஓடைகளின் கலவையாகும், எனவே அதன் துல்லியமான நதிமூலத்தைச் சுட்டிக்காட்ட இயலாது. இருப்பினும் அதன் தொலைதூர நீர்நிலைகள் பார்சியா கிராமத்திலிருந்து 6 கிலோமீட்டர்கள் (3.7 mi) சத்தீசுகரின் தம்தாரி மாவட்டத்தில் சிஹாவா நகரின் தெற்கே 442 மீட்டர்கள் (1,450 ft)) கடல் மட்டத்திலிருந்து மேலே உருவாகிறது.

இங்குள்ள மலைகள் கிழக்குத் தொடர்ச்சி மலையின் விரிவாக்கமாகும், மேலும் பல நீரோடைகளின் மூலமாகவும் இந்நதி உள்ளன, பின்னர் அவை மகாநதியுடன் இணைகின்றன.

உலகின் மிகப்பெரிய தீவு

 

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil
Advertisement