பல்லுயிர் மையப்புள்ளி பற்றி உங்களுக்கு தெரியுமா?

பல்லுயிர் மையப்புள்ளி

பல்லுயிர் மையப்புள்ளி குறிப்பு வரைக

வணக்கம் பொதுநலம்.பதிவின் அன்பான நேயர்களே. இன்று இந்த பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் ஒன்றை பற்றி பார்க்கப்போகிறோம். அப்படி என்ன தகவலாக இருக்கும் என்று தானே யோசிக்கிறீர்கள். பல்லுயிர் பாதுகாப்பு பற்றியும் பல்லுயிர் என்றால் என்ன என்பதை பற்றியும் நம்மில் பலருக்கு பல கேள்விகள் எழுந்திருக்கும். வாங்க நண்பர்களே அதற்கான விடையை இந்த பதிவை படித்து தெரிந்து கொள்ளலாம்.

பல்லுயிர் என்றால் என்ன?

உலகில் வாழும் உயிரினங்களின் வேறுபாடுகளை பல்லுயிர் என்று கூறப்படுகிறது. மனிதர்கள் மற்றும் விலங்குகளிடம் உள்ள வித்தியாசத்தை பல்லுயிர் என்று கூறுகிறார்கள். அதாவது, “மனிதர்கள் மட்டுமல்லாது பறவைகள், விலங்குகள், பூச்சிகள், என பல்வேறுபட்ட உயிரினங்களின் வேறுபாடுகளை பல்லுயிர் என்று கூறலாம். பல்லுயிர் பன்முகத்தன்மை அல்லது உயிரியல் பன்முகத்தன்மை என்று அழைக்கப்படுகிறது. இது பூமியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் காணப்படும் பல்வேறு வகையான அல்லது உலகில் உள்ள மொத்த வகையான உயிரினங்களின் வாழ்க்கை ஆகும். இது ஒரு பகுதியில் உள்ள உயிரினங்களின் எண்ணிக்கை அல்லது வளம் எனப்படும் இனங்களின் பொதுவான அளவீடு ஆகும். பல்லுயிர் இனங்கள் உருவாக்கும் பல்வேறு வகையான சுற்றுசூழல் அமைப்புகளையும் அல்லது ஒவ்வொரு இனத்திலும் உள்ள மரபணு வகைகளையும் உள்ளடக்கியுள்ளது.

தமிழ்விடு தூது எந்த இலக்கிய வகை

பல்லுயிர் பாதுகாப்பு என்றால் என்ன?

பல்லுயிர் பாதுகாப்பு

உலகில் உள்ள பல்வேறு வகையான உயிரினங்கள் நாளுக்கு நாள் மனிதர்கள் செய்யும் தகாத செயல்களினாலும் சுற்றுசூழல் பாதுகாப்பில்லாமல் உயிரினங்கள் அழிவினை சந்திக்கின்றன. இன்றைய சூழலில் உயிரினங்கள் முன்பை விட வேகமான அழிவினை சந்தித்து வருகின்றன. பரிமாண வளர்ச்சியில் தோன்றிய உயிரினங்கள் சுற்றுசூழல் சீர்கேட்டினால் அழிந்துவருகிறது. இந்த சூழலில் தான் உயிரினங்களை பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடையமையாகும்.

பல்லுயிர் வளம் என்பது என்ன?

பல்லுயிர் வளம்

பல்லுயிர் வளம் என்பது உயிரினங்களில் காணப்படும் வேறுபாடுகளை குறிக்கின்றது. பல்லுயிர் வளம் என்பதை உயிரின பன்மயம் என்றும் கூறலாம். ஒரு குறிப்பிட்ட இடத்தில் காணப்படும் உயிரின பன்மயம் அந்த இடத்தில வாழும் உயிரினங்களின் வளத்தினை குறிக்கிறது. பல்லுயிர் வளம் பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் உயிரினங்களை உள்ளடக்கியுள்ளது.

பல்லுயிர் வளங்கள் 3 வகைப்படுகிறது:

  1. சிற்றின வளம்
  2. சூழல் தொகுப்பு வளம்
  3. மரபியல் அல்லது மரபணு வளம்
உலக சுற்றுச்சூழல் தினம் உறுதிமொழி

பல்லுயிர் பெருக்கம் என்றால் என்ன?

பல்லுயிர் பெருக்கம்

தாவரங்கள், விலங்குகள், பறவைகள், மற்றும் நுண்ணுயிர்கள், கடலுயிர்கள் பெருகி பரவலாகக் காணப்படும் சுற்றுசூழல் அமைப்பையே “பல்லுயிர் பெருக்கம்” என்று கூறுகிறோம். பல்லுயிர் பெருக்கம் அதிகரித்துள்ள காலத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். காரணம், பூமியில் வாழும் கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிர்கள் முதல் திமிங்கலம் வரை கோடிக்கணக்கான உயிரினங்களோடு சேர்ந்தே தான் வாழ்ந்து வருகிறோம். பல்லுயிர் பெருக்கம் இயற்கையாக கண்ணுக்கு தெரியாமல் நடைபெறும் பல பணிகளை செய்கின்றது. வளிமண்டலத்தில் நடைபெறும் வேதியியல் மற்றும் நீர் சுழற்சிகளை சமமாக வைக்கிறது. நீர் நிலைகளை தூய்மைபடுத்துகிறது. மண்ணின் சத்துக்களை மறுசுழற்சி செய்து வளமான நிலத்தை கொடுக்கிறது. இவற்றின் உயிர் சமநிலையை பாதுகாப்பதே மனித இன சிக்கல்கள் இல்லாமல் வாழ வழிவகுக்கும்.

உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினம் எந்த ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது

 

பல்லுயிர் 3 வகைகளை கொண்டுள்ளது:

  1. தாவரப் பல்லுயிர் பெருக்கம்
  2. விலங்குகள் பல்லுயிர் பெருக்கம்
  3. நுண்ணுயிர் பல்லுயிர் பெருக்கம்

பல்லுயிர் தன்மை என்பது என்ன?

பூமியில் வாழும் பல வகையான உயிரினங்களிடையே பல வேறுபாடுகள் காணப்படுகின்றன. காரணம், அவற்றின் அமைப்பு, அவை வளரும் இயல்பு, வாழும் இடம், உணவு ஊட்டமுறை மற்றும் அவற்றின் செயல்கள் ஆகியவற்றின் பண்புகளால் அவை வேறுபடுகின்றன. பல்வேறு வேறுபாடுகளை கொண்டிருக்கும் உயிரினங்கள் ஒத்த தன்மைகளையும் பொதுவான சில பண்புகளையும் கொண்டிருக்கின்றன. இதனால் இவற்றை பல குழுக்களாக பிரிக்கப்படுகின்றன. இவற்றையே பல்லுயிர் தன்மை என்று கூறுகின்றன.

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>GK in Tamil