பதவியை ராஜினாமா செய்த முதல் இந்திய பிரதமர் யார்?

Pathaviyai Rajinama Seitha Muthal India Pirathamar in Tamil

தனது பதவியை ராஜினாமா செய்த முதல் இந்திய பிரதமர் யார் | Pathaviyai Rajinama Seitha Muthal India Pirathamar in Tamil

பொதுநலம்.காம் வாசகர்களுக்கு வணக்கம்.. பிரதமர் என்ற பதவி இந்திய நாட்டின் மிக முக்கியமான மற்றும் மிக உயர்ந்த பதவியாகும். பிரதமர் என்பவர் இந்திய அரசின் செயலாக்கத் தலைவர் ஆவார். இவர் இந்தியக் குடியரசுத் தலைவரின் தலைமை ஆலோசகரும் மத்திய அமைச்சரவையின் தலைவரும் ஆவார். இந்தியாவில் பிரதமர் பதவி என்பது மிக உயர்ந்த, அதிக அதிகாரங்கள் உள்ள பதவியாகும். இந்திய பாராளுமன்றத்தின் மக்களவை உறுப்பினர்களால் இந்தியப் பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார். இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆவார் சரி இன்றைய பதிவில் பதவியை ராஜினாமா செய்த முதல் இந்திய பிரதமர் யார்? என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

பதவியை ராஜினாமா செய்த முதல் இந்திய பிரதமர் யார்​?

தனது பதவியை ராஜினாமா செய்த முதல் இந்திய பிரதமர் மொரார்ஜி தேசாய் ஆவார். இவர் ஆட்சி செய்த காலம்: 24 மார்ச் 1977 – 28 ஜூலை 1979 ஆகும்.

மொரார்ஜி தேசாய் வாழ்க்கை வரலாறு:

திரு. மொரார்ஜி தேசாய் 1896 பிப்ரவரி 29 அன்று குஜராத் மாநிலத்தின் பல்சார் மாவட்டத்தில் உள்ள பதேலி கிராமத்தில் பிறந்தார்.

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram, Youtube" சேனல Join" பண்ணுங்க: Pothunalam Telegram Pothunalam Youtube

1918-ல் மும்பை மாகாணத்தில் வில்சன் சிவில் சேவையில் தனது பட்டப்படிப்பை முடித்து, 12 ஆண்டு காலம் துணை ஆட்சியராகப் பணிப்புரிந்தார்.

1930-ல், மகாத்மா காந்தி சுதந்திர போராட்டத்தை அறிவித்தபோது, திரு. தேசாய் ஆங்கிலேயர்களின் நீதி மீது நம்பிக்கை இழந்த அவர் தனது வேலையை இராஜினாமா செய்து, சுதந்திர போராட்டத்தில் இணைத்துக் கொண்டார்.

சுதந்திர போராட்டத்தின் போது திரு. மொரார்ஜி தேசாய் மூன்று முறை சிறையில் அடைக்கப்பட்டார். 1931-ல் அகில இந்திய காங்கிரஸ் குழுவில் அவர் உறுப்பினராக இணைந்தார். 1937 வரை குஜராத் காங்கிரஸ் குழுவின் செயலராக செயல்பட்டார்.

1937ல் முதல் முறை காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது மும்பை மாகானத்தில் திரு. பி.ஜி. கேர் தலைமையிலான வருவாய், வேளாண்மை, வனம் மற்றும் கூட்டுறவு அமைச்சகத்தில் இணை அமைச்சராக பணிபுரிந்தார்.

மக்களின் ஒப்புதல் இல்லாமல் உலக போரில் இந்தியாவின் பங்கேற்பை கண்டித்து காங்கிரஸ் அமைச்சகர்கள் 1939-ம் ஆண்டு சபையிலிருந்து விலகினார்.

மகாத்மா காந்தியால் துவக்கப்பட்ட சத்யாகிரகத்தில் பங்கேற்றத்திற்கு திரு. தேசாய் சிறையில் அடைக்கப்பட்டு அக்டோபர் 1941 விடுதலைப்பட்டார். ஆகஸ்ட் 1942, இந்தியாவிலிருந்து வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றதற்காகவும் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். 1946-ல் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு அவர் மும்பையில் உள்துறை மற்றும் வருவாய் துறை அமைச்சராகப் பதவியேற்றார்.

பிறகு 1952-ல் அவர் பம்பாயின் முதல் அமைச்சராகப் பதவியேற்றார்.

மாநிலங்களின் மறு அமைப்புக்குப் பிறகு 1956, நவம்பர் 14-அன்று திரு. தேசாய் மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சராகப் பதவியேற்றார். அதன்பிறகு மார்ச் 22, 1958 ஆம் ஆண்டு நிதி அமைச்சராகப் பதவியேற்றார்.

1963-ஆம் ஆண்டு காமராஜர் திட்டத்தின் கீழ் அவர் தனது அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார்.

1967-ஆம் ஆண்டு திரு. தேசாய், திருமதி. இந்திராகாந்தியின் அமைச்சரவையில் துணைப் பிரதமராகவும், நிதித்துறையின் இணை அமைச்சராகவும் பணி புரிந்தார். 1969-ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருமதி. காந்தி அவரை நிதித்துறையிலிருந்து நீக்கினார். பிரதம மந்திரிக்கு அவருடன் பணிபுரியும் அமைச்சர்களின் துறைகளை மாற்ற தனியுரிமை இருந்ததை ஒப்புக்கொண்ட திரு. தேசாய், திருமதி. காந்தி பெயரளவில்கூட தன்னிடம் இந்த மாற்றம் குறித்து ஆலோசிக்காதது தனது சுயமரியாதையை காயப்படுத்துவது போல் உணர்ந்தார். ஆதலால், வேறு வழியின்றி தனது துணைப்பிரதம மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

பல இடையூறுகளையும், போராட்டங்களையும், எதிர்ப்புகளை சந்தித்த பிறகு மொரார்ஜி தேசாய் நாடாளுமன்றத்தில் ஜனதா கட்சியின் தலைவராக ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு 1977 மார்ச் 24-ஆம் தேதி இந்தியாவின் பிரதம மந்திரியாக பதவியேற்றார்.

இவர் இந்தியாவின் பிரதம மந்திரியாக இரண்டு ஆண்டுகள் மட்டுமே பணியாற்றினார். பிறகு தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். காரணம் கட்சியில் ஏற்பட்ட சில பிரச்சனைகள் தான் அவரது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வைத்ததற்கு மிக முக்கிய காரணமாகும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் –> இந்தியா பற்றிய பொது அறிவு வினா விடை?

 

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>GK  in Tamil