பதினெண் மேற்கணக்கு நூல்கள் | Pathinen Mel Kanakku Noolgal in Tamil

padhinen merkanakku noolgal in tamil

பதினெண் மேற்கணக்கு நூல்கள் மற்றும் ஆசிரியர்கள் | Pathinen Mel Kanakku Noolgal Authors in Tamil

பதினெண் மேற்கணக்கு நூல்கள்: சங்ககாலத்தில் பதினெண் மேற்கணக்கு நூல்கள் மற்றும் பதினெண் கீழ்கணக்கு நூல்கள் என இரண்டு நூல்கள் இயற்றப்பட்டன. குறைந்த அடிகளை கொண்ட பாடல்களுக்கு பதினெண் கீழ்கணக்கு நூல்கள் என்றும் அதிக அடிகளை உடைய பாடல்களுக்கு பதினெண் மேற்கணக்கு நூல்கள் என்றும் பெயர் சூட்டப்பட்டன. இதனை தொகை நூல்கள் என்றும் அழைப்பர்.

நாம் பதினெண் மேற்கணக்கு நூல்கள் பற்றி பார்க்க போகிறோம். அந்த வகையில் நாம் எவையெல்லாம் பதினெண் மேற்கணக்கு நூல்கள் மற்றும் அதனை இயற்றிய ஆசிரியர் யார். இந்த நூலிற்கான பெயர்க்காரணம் என்ன என்பதை பற்றியெல்லாம் இந்த பதிவில் நாம் படித்தறியலாம் வாங்க.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்
நன்னூல் விளக்கம்

பதினெண் மேற்கணக்கு நூல்கள் யாவை? பெயர்க்காரணம்:

  • கடைசங்ககாலத்தில் இயற்றப்பட்ட எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும் பதினெண் மேற்கணக்கு நூல்கள் என்று அழைக்கப்படுகின்றன.
  • எட்டுத்தொகையில் 8 நூல்களும், பத்துப்பாட்டில் 10 நூல்களும் இயற்றப்பட்டதே இதற்காண பெயர்க்காரணம். இந்நூல் பல்வேறு காலங்களில் பல்வேறு புலவர்களால் பாடப்பட்டுள்ளது.
Pathinen Mel Kanakku Noolgal in Tamil
எட்டுத்தொகை நூல்கள்ஆசிரியர் பெயர்
நற்றிணை192 பெயர்கள் கிடைக்கப்பட்டுள்ளது. இதனை தொகுப்பித்தவர் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி. தொகுத்தவர் யாரென அறியப்படவில்லை
குறுந்தொகைபூரிக்கோ 
ஐங்குறுநூறுகபிலர்
பதிற்றுப்பத்துகுமட்டூர்க் கண்ணனார், பாலைக் கௌதமனார், காப்பியாற்றுக் காப்பியனார், பரணர், காக்கைபாடினியார், கபிலர், அரிசில் கிழார், பெருங்குன்றூர் கிழார் என பலராலும் இந்த நூல் பாடப்பட்டுள்ளது.
பரிபாடல்13 புலவர்கள் இப்பாடலை பாடியுள்ளனர்.
கலித்தொகை நல்லாண்டுவனார்
அகநானூறுதொகுத்தவர் உருத்திரசன்மர், தொகுப்பித்தவன் பாண்டியன் உக்கிரப்பெருவழுதி
புறநானூறுஇதன் ஆசிரியர் பெயர் கிடைக்கவில்லை எனினும் பலரும் இப்பாடலை பாடியுள்ளனர்.

பதினெண் மேற்கணக்கு நூல்கள் மற்றும் ஆசிரியர்கள்:

Pathinen Mel Kanakku Noolgal Authors in Tamil
பத்துப்பாட்டு நூல்கள் தொகுப்பித்தவர் 
திருமுருகாற்றுப்படை நக்கீரர்
பொருநராற்றுப்படைமுடத்தாமக்கண்ணியார்
சிறுபாணாற்றுப்படைநற்றாத்தனார்
பெரும்பாணாற்றுப்படை கடியலூர் உருத்திரங்கண்ணனார்
நெடுநல்வாடை நக்கீரர்
குறிஞ்சிப்பாட்டுகபிலர்
முல்லைப்பாட்டுநப்பூதனார்
மதுரைக்காஞ்சி மாங்குடி மருதனார்
பட்டினப்பாலை கடியலுர் உருத்திரங் கண்ணனார்
மலைபடுகடாம்பெருங்குன்றப் பெருங்கௌசிகனார்
  • இவையெல்லாம் தான் பதினெண் மேற்கணக்கு நூல்கள் மற்றும் அதன் ஆசிரியர்கள் ஆவார்கள்.
பத்துப்பாட்டு நூல்கள் மற்றும் ஆசிரியர்கள்

 

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>GK  in Tamil