பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எத்தனை | Pathinenkilkanakku Noolgal
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். தமிழ் பாடங்களில் நாம் தெரிந்துகொள்ள விஷயங்களில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களும் ஒன்று. பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், எட்டுத்தொகை நூல்கள் பற்றி கேட்கப்படாதா தேர்வுகளே கிடையாது. ஆகையால், நம் அனைவருமே பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் பற்றி தெரிந்துகொள்வது அவசியம்.
சங்க மருவிய காலத்தில் தோன்றிய பதினெட்டு நூல்களைச் சேர்த்து பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என்று அழைக்கப்படுகிறது. இவை ஒவ்வொன்றும் தனித்தனியான மற்றும் வெவ்வேறு புலவர்களால் பாடப்பட்டவை ஆகும். இந்த பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் பற்றிய முக்கியமான பொது தமிழ் குறிப்புகள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன. இது பொது அறிவு (GK in Tamil) சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள நினைப்பவர்களுக்கும், TNPSC போட்டி தேர்வுக்கு தயாராகுபவர்களும் மிகவும் பயன்படும். போட்டி தேர்வாளர்கள் கீழ்கண்ட பகுதிகளை படித்து பயன்பெறுங்கள்.
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்:
- நாலடியார்
- நான்மணிக்கடிகை
- இன்னா நாற்பது
- இனியவை நாற்பது
- கார் நாற்பது
- களவழி நாற்பது
- ஐந்திணை ஐம்பது
- ஐந்திணை எழுபது
- திணைமொழி ஐம்பது
- திணைமாலை நூற்றைம்பது
- திருக்குறள்
- திரிகடுகம்
- ஆசாரக்கோவை
- பழமொழி
- சிறுபஞ்சமூலம்
- முதுமொழிக்காஞ்சி
- ஏலாதி
- கைநிலை
இவற்றில் நீதி நூல்கள், அகத்திணை நூல்கள், புறத்திணை நூல்கள் என்று பிரிக்கப்பட்டுள்ளது. சரி இவற்றில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் ஆசிரியர்கள் யார்? நீதி நூல்கள், அக நூல்கள், புறநூல்கள் என்று எத்தனை பிரித்துள்ளனர் என்பதை பற்றி கீழ் அட்டணவனையில் பார்க்கலாம் வாங்க.
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் மற்றும் ஆசிரியர்கள்:
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் பெயர் | பாடல் எண்ணிக்கை | வகை | ஆசிரியர் |
நாலடியார் | 400 | அறம்/நீதி நூல்கள் | சமண முனிவர்கள் |
நான்மணிக்கடிகை | 101 | விளம்பி நாகனார் | |
இன்னா நாற்பது | 40+1 | கபிலர் | |
இனியவை நாற்பது | 40+1 | பூதஞ்சேந்தனார் | |
திருக்குறள் | 1330 | திருவள்ளுவர் | |
திரிகடுகம் | 100 | நல்லாதனார் | |
ஏலாதி | 80 | கணிமேதாவியார் | |
பழமொழி நானூறு | 400 | முன்றுரை அரையனார் | |
ஆசாரக்கோவை | 100+1 | பெருவாயின் முள்ளியார் | |
சிறுபஞ்சமூலம் | 104 | காரியாசான் | |
முதுமொழிக்காஞ்சி | 10*10 | கூடலூர்க்கிழார் | |
ஐந்திணை ஐம்பது | 50 | அக நூல்கள் | பொறையனார் |
ஐந்திணை எழுபது | 70 | மூவாதியார் | |
திணைமொழி ஐம்பது | 50 | கண்ணன் சேந்தனார் | |
திணைமாலை நூற்றைம்பது | 150 | கணிமேதையார் | |
கைந்நிலை | 60 | புல்லங்காடனார் | |
கார்நாற்பது | 40 | கண்ணங் கூத்தனார் | |
களவழி நாற்பது | 40+1 | புறநூல்கள் | பொய்கையார் |
பதினெண் மேற்கணக்கு நூல்கள் |
ஔவையார் எழுதிய நூல்கள் |
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |