Advertisement
பென்குயின் வாழ்விடம் | Penguin in Tamil
வணக்கம் நண்பர்களே…! இன்று பென்குயின் பற்றிய தகவல்களை பார்க்க போகிறோம். இந்த பென்குயின் இனம் மட்டுமே துடுப்பு போன்ற இறகுகளை வைத்து கடலில் நீந்தும். பென்குயின் அதனுடைய வாழ்வை பாதியை நிலத்திலும், மீதியை கடலிலும் கழிக்கின்றது. இன்னும் சுவாரசியமான தகவல்களை தெரிந்துகொள்ள இந்த பதிவை முழுவதையும் படித்து தெரிந்து கொள்ளவும்.
மிக நீண்ட தொலைவு பறக்கும் பறவை எது? |
பென்குயின் வாழ்விடம்:
- பென்குயின் அதன் வாழ்விடத்தையும், அதன் கூட்டு வாழ்க்கை மூலம் அனைவரையும் கவர்கிறது.
- இது பாதி வாழ்க்கையை நிலத்திலும் மீதி வாழ்கையை கடலிலும் கழிக்கிறது.
- இந்த பென்குயின் கடல் சார்ந்த பறவை எனவும் கூறுகின்றன. இறக்கை இருந்தாலும் இதனால் பறக்க முடியாது.
- அதன் மாறுபட்ட தோற்றம் அனைவரையும் கவர வைக்கிறது. ஏனெனில் அதன் அழகான வண்ணம் அனைவரையும் ஈர்க்கிறது.
- இந்த பென்குயின்கள் தெற்கு அறைகோணத்தில் வாழ்கின்றன.
- பென்குயின்கள் அன்டார்டிகாவில் மட்டும் வாழும். அதனால் குளிர்காலத்தில் மட்டும் வாழ முடியும் என்பதும் பொய்யான கருத்து.
- பென்குயின்கள் பூமத்தியரேகைப் வெப்ப மண்டல தீவுகளிலும் வாழ்கின்றன. ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, நியூசிலாந்து, கலாபகசுத் தீவுகளிலும் இவைகள் இயற்கை வாழ்விடமாக கொண்டுள்ளது.
பென்குயின் பற்றிய தகவல்கள்:
- 17 வகையான பென்குயின்கள் உள்ளது. அதில் பேரரசு பென்குயின் மிக பெரியதாக இருக்கும்.
- பென்குயின் வளர்ச்சி 4 அடி வரை வளரக்கூடியது. இதன் உடல் எடை 35 கிலோ வரை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
- பென்குயின் வகைகளில் மிகவும் சிறியதாக உள்ளது நீல பென்குயின்கள் அல்லது தேவதை பென்குயின். இது சாதரணமாக 35 செ.மீட்டர் முதல் 40 செ.மீட்டர் வரை வளரக்கூடியது. இது 1 கிலோ எடையையும் கொண்டிருக்கும்.
- ஒவ்வொரு வகை பென்குயின்களையும் அதன் தலை முடி, அதன் நிறத்தையும் வைத்து அதனை வேறுபடுத்தலாம்.
- பேரரசு பென்குயின்கள் மற்றும் கிங் பென்குயின்கள் சற்று உயரமாக வளரும். மற்ற பென்குயின்கள் உயரும் குறைவாக வளரும்.
- இவை சாப்பிடும் உணவுகள் மீன், இறால், சில ஆக்டோபஸ் வகை உயிரினங்களை உணவாக உண்ணும்.
உலகின் மிகப்பெரிய பாலைவனம் எது? |
- சிறை பிடிக்கப்பட்ட பென்குயின்கள் நீண்ட நாட்கள் உணவுகள் இல்லாமலும் வாழ்கின்றன.
- மேலும் பென்குயின்கள் கடல் நீரை மட்டும் குடிக்கின்றன அதனால் இதற்கு எந்த வித பாதிப்புகளும் வராமல் இருக்கும்.
- பென்குயின்களுக்கு பற்கள் கிடையாது.
- பென்குயின்கள் மணிக்கு 6 கிலோ மீட்டர் வேகத்திலிருந்து அதிகபட்சமாக 25 கிலோ மீட்டர் வேகத்தில் நீந்த முடியும். மேலும் 20 நிமிடம் வரை தண்ணீருக்குள் இருக்க முடியும்.
- இவைகளால் பறக்க முடியவில்லை என்றாலும் தரையில் நன்றாக நடக்க முடியும்.
- பென்குயின்கள் சக்தியை சேமிப்பதற்க்காகவும் வேகமாக நகர்ந்து செல்வதற்காகவும் பனிக்கட்டி மீது வயிற்றை வைத்து வழுக்கி செல்கின்றன.
- பென்குயின் உடலிருந்து எண்ணெய் சுரப்பதால் குளிரோ தண்ணீரோ அதனை எளிதில் தாக்காது.
- பென்குயின்கள் கூடமாக வாழ்வதன் மூலம் இவைகள் குளிரிலிருந்து தப்பித்து கொள்கின்றன.
- ஒரு பெண் பென்குயின் ஒரு முறைதான் முட்டை இடுகின்றன. அதன் பின் உணவை தேடி கடலுக்கு சென்று விடுகின்றன. ஆண் பென்குயின் தான் முட்டையை அடைகாக்கும்.
பென்குயின் பறவையின் வாழ்விடம்:
- 9 வாரங்களுக்கு பிறகு முட்டையிலிருந்து குஞ்சி வெளிவரும். ஆண் பென்குயின் முட்டையை உணவு இல்லாமல் அடைகாத்தால் அதன் உடல் எடை குறைந்து காணப்படும்.
- பேரரசு பென்குயின் வயிற்று பகுதி வெள்ளையாகவும், முகுது பகுதி கருப்பாகவும் இருக்கும். கழுத்து, தலை அடிபகுதியில் மஞ்சள் நிறமாக இருக்கும். இவைகள் 20 ஆண்டுகள் உயிர் வாழக்கூடியவைகள்.
- தற்போது நிகழ்ந்து வரும் இயற்கை மாற்றத்தால் பென்குயின்கள் வேகமாக அழிந்து வருகின்றன.
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |
Advertisement