பூவின் ஏழு நிலைகள் என்னென்ன தெரியுமா..?

Advertisement

செம்மல் என்ற சொல் பூவின் எந்த நிலையை குறிக்கும் | 7 Stages of Flower in Tamil | மலரின் ஏழு நிலைகள்

வணக்கம் நண்பர்களே இன்று நம் பதிவில் பூவின் ஏழு நிலைகளை பற்றித் தான் தெரிந்து கொள்ளப்போகிறோம். பூக்கள் என்றாலே எல்லாருக்கும் பிடித்தமான ஒன்றாகும். பொதுவாக நாம் பூக்களை பார்க்கும் பொழுது எப்படி சொல்லுவோம் பூப்பதற்கு முன்னாடி அது முட்டு, பூத்ததற்கு பிறகு அது மலர், அந்த பூ விழுந்தவுடன் அது வாடிப்போன பூ என்று சொல்லுவோம்.

நம் பார்த்து ரசிக்கும் பூக்களுக்கு நமது முன்னோர்கள் தமிழில் அதன் பருவநிலைகளையும் அதன் படிநிலைகளையும் காரண பெயர்களுடன் குறிப்பிட்டிருக்கிறார்கள்  அவை என்னெவென்று நம் பதிவின் மூலம் படித்து அறியலாம் வாங்க.

பூக்கள் பெயர்கள்

பூவின் ஏழு படி நிலைகள் | பூவின் 7 நிலைகள் யாவை:

பூவின் படி நிலைகளை நம் தமிழ் மொழியில் ஏழு வகையாக குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனால் சங்க காலத்தில் இந்த ஏழு பருவங்களையும் இன்னும் ஆராய்ந்து அதை பன்னிரெண்டு பருவங்களாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவை என்னவென்று பார்க்கலாம்.

  1. அரும்பும் நிலையில் அரும்பு
  2. மொக்கு விடும் நிலை மொட்டு
  3. முகிழ்க்கும் நிலை முகை
  4.  மலரும் நிலை மலர்
  5. மலர்ந்த நிலை அலர்
  6.  வாடும் நிலை வீ
  7.  வதங்கும் நிலை செம்மல்

1.அரும்பு – பூக்கும் பருவத்தின் முதல் நிலையை தான் அரும்பு என்று சொல்லப்படுகிறது.

  • அரும்பு என்ற பருவத்தை மூன்று உட்ப்பிரிவுகளாக பிரித்திருக்கிறார்கள். அவை
  • நனை – உள் புறத்தில் ஈரப்பதம் மற்றும் தேன் நினைப்புடன் காணப்படும் நிலை
  • முகை – தலைகாட்டிய நனை முத்தாக மாறும் நிலை ஆகும்.
  • மொக்குள்– பூவுக்குள் பருவமாற்றமான மணம் பெறும் நிலையாகும்.

2.மொட்டு –அந்த அரும்பு மொக்கு  விடும் நிலையை தான் மொட்டு என்று இரண்டாம் பருவமாக சொல்லப்படுகிறது.

3.முகை – பூ கொஞ்சம் விரிந்திருக்கும் நிலையை தான் முகிழ்க்கும் நிலை என்று மூன்றாவது பருவமாக  சொல்லப்படுகிறது.

முகையை இரண்டு உட்பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது அவை

  • மகிழ்- மணம் கொண்டு முகிழ்தல் அதாவது விரிந்தும் விரியாமலும் இருக்கும் நிலை.
  • போது – மொட்டு மலரும் போது ஏற்படும் புடைப்பு நிலை.

4.மலர்- பூ பூக்கும் நிலையை தான் பூவாகும் நிலை என்று நான்காவது பருவமாக சொல்லப்படுகிறது.

5.அலர்- மலர்கள் இன்னும் விரிந்து காணப்படும் நிலையை தான் மலர்ந்த இதழ் விரிந்த நிலை என்று ஐந்தாவது பருவமாக சொல்லப்படுகிறது.

6.வீ – பூ நன்கு விரிந்து வாடும் நிலையை தான் வீ என்றும் சொல்லப்படுகிறது. வீ என்பது அழிவு, நீக்கம், மடிவு என்று அர்த்தம் அதாவது பூ வாடி கீழ் விழும் நிலையை தான் ஆறாவது பருவமாக சொல்லப்படுகிறது.

7.செம்மல் – பூ வதங்கிக் கிடக்கும் நிலையை தான் செம்மல் என்று சொல்லப்படுகிறது. செம்மல் என்பது அந்த பூ வதங்கி சிவப்பு நிறத்தில் போகிவிடும் அதைத்தான்  ஏழாவது பருவமாக சொல்லப்படுகிறது.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement