புதுக்கவிதை பற்றிய குறிப்புகள்

Advertisement

புதுக்கவிதை – Puthu Kavithai

அரசு நடத்தும் பொது தேர்வுகளுக்கு முயற்சிக்கும் அனைவருக்கும் வணக்கம்.. இன்று நாம் புதுக்கவிதை பற்றிய முக்கியமான பொது தமிழ் குறிப்புகளை பற்றி தெரிந்துகொள்ள போகிறோம். புதுக்கவிதையின் ஆசிரியர்களான ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா மற்றும் தருமு சிவராமு ஆகியவர்களின் சிறப்பு பெயர்கள், அவர்களுடைய படைப்புகள் பற்றி இப்பொழுது நாம் படித்திரியலாம். இது TNPSC போட்டி தேர்வுக்கு மிகவும் பயன்படும். போட்டி தேர்வாளர்கள் கீழ்கண்ட தொகுதிகளை படித்து பயன்பெறுங்கள்.

ந. பிச்சமூர்த்தி:

ந.பிச்சமூர்த்தியின் பெற்றோர் நடேசன் தீடசிதர், காமாட்சியமையால் ஆகியவருக்கு 4-வது மகனாக பிறந்தவர்.

பிறப்பு: ஆகஸ்ட் 15, 1900-ஆம் ஆண்டு கும்பகோணத்தில் பிறந்தவர்.

பணி: கவிஞர், எழுத்தாளர்.

இயற்பெயர்: வேங்கட மகாலிங்கம்.

ந. பிச்சமூர்த்தி புதுக்கவிதையின் தந்தை என்று அழைக்கப்படுபவர்.

தத்துவார்த்தம் பிணைந்த கதை சொல்லும் பாணியினைத் தமிழுக்கு அறிமுகம் செய்தவர் இவரே.

ந. பிச்சமூர்த்தி வழக்கறிஞர் பட்டம் பெற்றவர்.

1925 முதல் 1638 வரை வழக்கறிஞராகப் பணிபுரிந்தவர்.

1939 முதல் 1959 வரை இந்து அறநிலையத்துறை அதிகாரியாக பணிபுரிந்தவர்.

ந. பிச்சமூர்த்தி அவர்கள் நவ இந்தியா பத்திரிகையில் சிறிது காலம் பணியில் இருந்தார்.

இவரின் கட்டுரைகள் சுதேசமித்திரன், சுதந்திரச் சங்கு, தினமணி, மணிக்கொடி போன்ற பத்திரைகையில் வெளிவரத் தொடங்கின.

ந. பிச்சமூர்த்தி சிறுகதைகள்:

  • பதினெட்டாம்பெருக்கு (1944)
  • ஜம்பரும் வேஷ்டியும் (1947)
  • மோஹினி (1951)
  • குடும்ப இரகசியம் (1959) – குறும்புதினம்
  • பிச்சமூர்த்தியின் கதைகள் (1960)
  • மாங்காய் தலை (1961)
  • இரட்டை விளக்கு (1967)
  • காக்கைகளும் கிளிகளும் (1977)

இவை அனைத்தும் சிறுவர் கதைகள்.

சிறுகதைகள்:

  • நல்ல வீடு
  • அவனும் அவளும்
  • மாயமான்
  • ஈஸ்வர் லீலை
  • மோகினி
  • முள்ளும் ரேசாவும்
  • கொலுப்பொம்மை
  • ஒரு நாள்
  • இரும்பும் புரட்சியும்
  • பாம்பின் கோபம்

கவிதை தொகுப்புகள்:

  • காட்டு வாத்து (1962)
  • வழித்துணை (1964)
  • குயிலின் சுருதி (1970)

கட்டுரை தொகுதி:

  • மனநிழல் (1977)

சிறப்பு பெயர்கள்:

  • சிறுகதையின் சாதனை
  • புதுக்கவிதையின் முதல்வர்
  • புதுக்கவிதையின் முன்னோடி
  • புதுக்கவிதையின் இயக்கத்தின் விடிவெள்ளி
  • புதுக்கவிதையின் பிதாமகன்

புனை பெயர்கள்:

  • ரேவதி
  • பிச்சு
  • ந.பி

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

புதுக்கவிதைகள்:

  • கிளிக்குஞ்சு
  • பூக்காரி
  • வழித்துணை
  • கிளிக்கூண்டு
  • காட்டுவாத்து
  • காதல்
  • உயிர்மகள்
  • ஆத்தூரான்
  • புதுக்குரல்கள்

ந. பிச்சமூர்த்தியின் முதல் தமிழ்ச்சிறுகதை – சயன்ஸ்க்கு பலி (கலைமகள்)

ந. பிச்சமூர்த்தியின் முதல் கவிதை – நடுத்தெரு நாராயணன்

முதல் வசனகவிதை – காதல்

பிச்சமூர்த்தி அவர்கள் ஆளவந்தார் வேடமேற்று நடித்த திரைப்படம் – ஸ்ரீராமானுஜர்.

ந. பிச்சமூர்த்தியின் இறப்பு டிசம்பர் 4, 1976.



சி.சு.செல்லப்பா
(சின்னமன்னூர் சுப்பிரமணியன் செல்லப்பா)

பிறப்பு: செப்டம்பர் 29, 1912

இவருடைய வாழ்க்கைத்துணை – மீனாட்சி

இவருடைய பணி இதழாளர், எழுத்தாளர், கவிஞர், நாடக ஆசிரியர், திறனாய்வாளர்

குறிப்பிடத்தக்க படைப்புகள்:

  • வாடிவாசல்
  • ஜீவனாம்சம்
  • சுதந்திர தாகம்
  • எழுத்து – இதழ்

குறுங்காப்பியம்:

  • இன்று நீ இருந்தால்

சிறுகதை தொகுதிகள்:

  • சரசாவின் பொம்மை
  • மணல்வீடு
  • அறுபது
  • சத்தியாகிரகி
  • வெள்ளை

கவிதைத் தொகுதி:

  • மாற்று இதயம்

நாடகம்:

  • முறைப்பெண்

புனிதம்:

  • ஜீவனாம்சம்
  • சுதந்திர தாகம்

திறனாய்வு நூல்கள்:

  • ந. பிச்சமூர்த்தியின் கதையைப் பற்றி கருத்து
  • பி.எஸ்.இராமையாவின் சிறுகதைப் பாணி
  • எனது சிறுகதைகள்
  • இலக்கியத் திறனாய்வு
  • மணிக்கொடி எழுத்தாளர்கள்

இவருக்கு சிறந்த எழுத்தாளர் என்ற தகுதியை அளித்த சிறுகைதியின் பெயர் – சரசாவின் பொம்மை.

விருதுகள்:

சுதந்திர தாகம் என்ற புதினத்திற்கு 2001-ம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது கிடைத்தது.

இறப்பு: 1998-டிசம்பர்-18



தருமு சிவராமு

பெற்றோர்: அறியப்படவில்லை

இயற்பெயர்: சிவராமலிங்கம்

புனைபெயர்: பானுசந்திரன் அரூப் சீவராம் பிரமிள்

பிறப்பு: இலங்கையில் ஏப்ரல் 20, 1939-ஆம் ஆண்டு பிறந்தவர்.

இவருடைய மற்ற பெயர்கள்:

லஷ்மி ஜோதி, இலக்குமி, இளங்கோ, கௌரி, பூம்பொழில் வேலவன், பிரமின், பூம்பொற்கொடி, டி.சி இராமலிங்கம், பிரமிள் பானு, ஜீவராம், சந்திரன்.

பணிகள்:

  • ஈழத்து எழுத்தாளர்
  • கவிஞர்
  • விமர்சகர்
  • சிறுகதையாசிரியர்
  • ஓவியர்

கவிதைத் தொகைதிகள்:

  • கண்ணாடியுள்ளிருந்து
  • கைப்பிடியளவு கடல்
  • மேல்நிக்கிய பயணம்
  • பிரமிள் கவிதைகள்

உரைநடை நூல்:

  • மார்க்சும் மார்க்ஸியமும்.

சிறுகதை தொகுப்பு:

  • லங்காபுரி ராஜா
  • பிரமிள் படைப்புகள்

குறுநாவல்:

  • ஆயி
  • பிரசன்னம்
  • லங்காபுரி ராஜா

நாடகம்:

  • நட்சத்திரவாசி

சிறுகவிதைகள்:

  • காடன் கண்டது
  • கிசுகிசு
  • அங்குலிமாலா
  • சாமுண்டி
  • அசரீரி
  • சந்திப்பு
  • பாறை
  • நீலம்
  • கருடனூர் ரிப்போர்ட

தமிழின் மாமேதை என்று யாரால் பாராட்டப்பெற்றார்? – தி.ஜானகிராமன்

உரைநடையின் அதிகபட்ச சாத்தியத்தை நிறைவேற்றியவர் என்று யாரால் பாராட்டப்பெற்றார்? – சி.சு.செல்லப்பா

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பதினெண் மேற்கணக்கு நூல்கள்

விருதுகள்:

நியூயார்க் விளக்கு அமைப்பு இவருக்கு புதுமைப்பித்தன் விருது வழங்கியது.

கும்பகோணம் சிலிக்குயில் புதுமைப்பித்தன் வீறு என்று விருது வழங்கியது.

தருமு சிவராமு அவர்கள் 1997-ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil

 

Advertisement