ராஜாஜி உப்பு காய்ச்சிய இடம்? | Rajaji Uppu Satyagraha Place Tamil
Rajaji Uppu Kachiya Edam:- நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த இந்தியாவிற்கு, பல தலைவர்கள் போராடி விடுதலையை பெற்று கொடுத்தனர். அந்த விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒருவர் தான் ராஜாஜி. ராஜாஜி இந்திய வழக்கறிஞர், விடுதலைப் போராட்ட வீரர், அரசியல்வாதி, மற்றும் எழுத்தாளர் ஆவார். சரி இந்த பதிவில் ராஜாஜி உப்பு காய்ச்சிய இடம் எது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். பொது அறிவு (GK in Tamil) சார்ந்த விஷயங்களை பற்றி தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ராஜாஜி உப்பு காய்ச்சிய இடம் எது?
விடை: வேதாரண்யம்.
காரணம்:
பிரித்தானிய இந்திய அரசு இந்தியர்கள் மீது விதித்த உப்பு உற்பத்தி வரியை எதிர்த்து, மகாத்மா காந்தி தண்டியில் நடத்திய உப்புச் சத்தியாகிரகம் போன்று, தமிழ்நாட்டின் வேதாரண்யக் கடலில் உப்பு அள்ளும் போராட்டமாக 13 ஏப்ரல் 1930 அன்று வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகம் நடைபெற்றது.
இராஜாஜி தலைமையில் வேதாரண்யத்தில், நடைபெற்ற உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஏ. என். சிவராமன், ஜி. ராமசந்திரன், துரைசாமி, கல்கி சதாசிவம், கோயம்புத்தூர் இராஜூ, ஜி. கே. சுந்தரம், ஓ. வி. அழகேசன், ரா. வெங்கட்ராமன், மட்டப்பாறை வெங்கட்ட ராமையா முதலிய தலைவர்கள் கலந்து கொண்டனர். சர்தார் வேதரத்தினம் பிள்ளை போராட்டக் குழுவினர்களுக்கு அனைத்து வகைகளிலும் உதவினார். இப்போராட்டத்தின் விளைவாக சர்தார் வேதரத்தினம் பிள்ளை, ராஜாஜி உட்பட பலர் கைதாகி ஆறுமாத சிறைத்தண்டனை அனுபவித்தனர்.
இந்த உப்புச் சத்தியாகிரகப் பிரச்சாரம் காந்தியின் கோட்பாடான வன்முறையற்ற அறப்போர் என்ற அறநெறியை அடிப்படையாகக் கொண்டது, அதை அவர் உண்மைச்-சக்தி என வரையறுத்தார். சத்தியாகிரகம் என்ற சமற்கிருதச் சொல்லில் சத்யம் என்பது உண்மையையும் கிரகம் என்பது சக்தியையும் குறித்தது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள்–> பதவியை ராஜினாமா செய்த முதல் இந்திய பிரதமர் யார்? |
வேதாரண்யம் வடக்கு வீதியில் உப்பு சத்தியாகிரக நினைவுக் கட்டிடம், வேதாரண்யம் மேலவீதியில் இராஜாஜி தலைமையில் போராட்ட குழுவினர் தங்கியிருந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ள இராஜாஜி நினைவுப் பூங்கா, இராஜாஜி சிறை வைக்கப்பட்டிருந்த உப்புத்துறைக்கு சொந்தமான கட்டிடத்தில் உள்ள சிறை ஆகியவைகள் வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களாக உள்ளது. இராஜாஜி உப்பு அள்ளிய இடத்தில் நினைவுத் தூண் அமைக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, திருச்சியில் ராஜாஜி தலைமையில் 100 பேர் கலந்துகொண்ட, உப்பு சத்தியாகிரக யாத்திரையை நினைவுகூறும் விதமாக, முதல் முதலில் திருச்சியிலிருந்து ராஜாஜி தலைமையிலான உப்பு சத்தியாக்கிரக குழு சென்ற இடத்தில் இன்று நினைவுத் தூண்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
இத்தூண் 1973 ஆம் ஆண்டு அன்றைய மாநகர தலைவர் டாக்டர் வி. கே. ரங்கநாதன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள்–> லோக்சபாவிற்கு செல்லாத இந்திய பிரதமர் யார்? |
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |