குடியரசு தினம் பற்றிய வினா விடைகள்..!

Advertisement

Republic Day Quiz Question And Answers In Tamil

குடியரசு தினம் 26 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். குடியரசு தினத்தை பற்றி நமக்கு தெரியாத விஷயங்களும் இருக்கின்றன. அவை எல்லாம் உங்களுக்கு கேள்வியாக உங்கள் மனதில் எழும். உதாரணத்திற்கு குடியரசு தினத்தன்று யார் தேசிய கொடியை ஏற்றுவர்? குடியரசு தினத்தின் அணிவகுப்பு எங்கு நடைபெறும் போன்ற கேள்விகள் தோன்றும். இது போல ஏராளமான கேள்விகளுக்கான பதில்களை பற்றி தான் நாம் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

குடியரசு தின அணிவகுப்பின் முதல் தலைமை விருந்தினர்..!

குடியரசு தின வினா விடைகள்:

1.இந்தியாவில் எப்போது முதல் குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது?

விடை : ஜனவரி 26, 1950

2. டெல்லி குடியரசு தின விழாவில் கொடியேற்றுபவர் யார்?

விடை : குடியரசு தலைவர்

3. குடியரசு தினம் ஏன் கொண்டாடப்படுகிறது?

விடை : இந்திய அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த தினம்

4. இந்திய அரசியலமைப்பு எப்போது ஏற்றுக்கொள்ளப்பட்டது?

விடை : நவம்பர் 26, 1949

5. இந்திய அரசியலமைப்பின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்? 

விடை : B. R. அம்பேத்கர் 

6. குடியரசு தின அணிவகுப்பு நடைபெறும் இடம் எது? 

விடை : டெல்லி ராஜபாதை

7. குடியரசு தின அணிவகுப்பு தொடங்கும் இடம் எது? 

விடை : ராஷ்ட்ரபதி பவன்

8. குடியரசு தின அணிவகுப்பு முடியும் இடம் எது?

விடை : இந்தியா கேட்

9. குடியரசு தின விழா நிறைவு பெறுவதை குறிக்கும் நிகழ்வு எது? 

விடை : பாசறை திரும்புதல்

10. பாசறை திரும்புதல் நிகழ்வு எப்போது நடைபெறும்?

விடை : ஜனவரி 29

11. பாசறை திரும்புதல் நிகழ்வு எங்கு நடைபெறும்? 

விடை : விஜய் சவுக்

12. குடியரசு தின விழாவில் எத்தனை குண்டுகள் முழங்கப்படும்? 

விடை : 21 குண்டுகள்

13. குடியரசு தின அணிவகுப்பின் மரியாதையை ஏற்றுக்கொள்பவர் யார்?

விடை : குடியரசு தலைவர்

14. இந்தியாவின் முதல் குடியரசு தலைவர் யார்? 

விடை : ராஜேந்திர பிரசாத்

15. இந்தியாவின் தற்போதைய குடியரசு தலைவர் யார்? 

விடை : திரௌபதி முர்மு

16. குடியரசு தினத்தன்று மாநில தலைநகரங்களில் தேசியக் கொடியை ஏற்றுபவர் யார்? 

விடை : ஆளுநர்

17. குடியரசு தின விழாவில் வழங்கப்படும் விருதுகள் எது? 

விடை : வீர தீர விருதுகள்

18. குடியரசு தலைவர் தேர்தலுக்கு தகுதியான வயது எது? 

விடை : 35 வயது

19. குடியரசு தலைவரின் அதிகபட்ச வயது வரம்பு எது?

விடை : வயது வரம்பு கிடையாது

20. குடியரசு தலைவரின் பதவிக் காலம் எத்தனை ஆண்டுகள்? 

விடை : 5 ஆண்டுகள்

21. இந்தியாவின் முதல் துணைக் குடியரசு தலைவர் யார்? 

விடை : சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்

22. இந்தியாவின் முதல் உயரிய விருதான பாரத ரதனாவை பெற்ற முதல் பெண் யார்? 

விடை : இந்திரா காந்தி

23. குடியரசு தின விழாவில் பாடப்படும் புகழ்பெற்ற பாடல் எது?

விடை : ஜன கண மன

24. இந்திய அரசியலமைப்பில் முதலில் எத்தனை அடிப்படை உரிமைகள் சேர்க்கப்பட்டன?

விடை : 7

25. இந்தியாவில் ஜனநாயகத்தின் நான்கு தூண்கள் யாவை?

விடை : சட்டமன்றம், நிர்வாகம், நீதித்துறை மற்றும் ஊடகம்

26. 2025 குடியரசு தினத்தின் கருப்பொருள் என்ன?

விடை : ஸ்வர்ணிம் பாரத்: விரசத் ஆர் விக்காஸ்

27. உலகிலேயே மிக நீண்ட எழுதப்பட்ட அரசியலமைப்பு எது?

விடை : இந்தியா

28. குடியரசு தினத்தன்று எந்த இராணுவப் பிரிவு அணிவகுப்பை வழிநடத்துகிறது?

விடை : காலாட்படை

29. குடியரசு தின அணிவகுப்பில் நிகழ்த்தும் விமானக் காட்சிக் குழுவின் பெயர் என்ன?

விடை : சூர்யா கிரண்

30. குடியரசு தினத்தன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய முதல் பிரதமர் யார்?

விடை : ஜவஹர் லால் நேரு

குடியரசு தின வாழ்த்துக்கள் 2025

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil
Advertisement