மும்மூர்த்திகள் யார்..? | Sangeetha Mummoorthigal Name in Tamil
வணக்கம் நண்பர்களே இன்று இந்த பதிவில் சங்கீத மும்மூர்த்திகள் யார் என்பதை பற்றி பார்க்க போகிறோம். இசை என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி கேட்பார்கள். இந்த காலத்தில் இசையில் உலகம் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது அதிகளவு விருதுகளையும் பெற்றுவருகிறோம். ஒவ்வொரு விருதுக்களுக்கு பெயர்களுக்கும் தனி தனி பெயர்கள் இருந்தாலும் அதனை யார் பெற்றிருந்தாலும் இந்த பெயரில் தனி அடையாளம் இருக்கிறது. அந்த பெயர்களில் யாரை சொல்லி அழைத்தாலும் மிகையாகாது. அந்த பெயருக்கு சொந்தக்காரர்கள் தான் சங்கீத மும்மூர்த்திகள். இந்த பெயருக்கென்று தனி சிறப்பு இருக்கிறது, இந்த பெயருக்கு சொந்தக்காரர்களை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
இசை மும்மூர்த்திகள்:
- தமிழிசை மூவர் என்றும் சொல்லலாம் அல்லது ஆதி மும்மூர்த்திகள் என்றும் சொல்லலாம். இவர்கள் மூவரும் தமிழில் பாட்டெழுதி தமிலேயே பாடி தமிழிசையை வளர்த்தவர்கள். இவர்களில் பெயர்கள் அருணாசலக் கவிராயர், முத்துத்தாண்டவர், மாரிமுத்தாப் பிள்ளை என்பவர்களை இசையில் மும்மூர்த்திகள் என்பர்.
அருணாசலக் கவிராயர்:
- இவர் தில்லையாடி என்னும் ஊரில் கி, பி 1711 ஆம் ஆண்டு கார்காத்த வேளாளர் குலத்தில் நல்லத் தம்பி- வள்ளியம்மை ஆகியோருக்கு நான்காவது மகனாக பிறந்தார்.
- மேலும் இவர் இளம் வயதிலேயே இசையின் மீது கொண்ட ஆர்வம் தமிழிசையை வளர்க்க ஆரம்பித்தது.
- இவர் சீர்காழியில் வாழ்ந்ததால் சீர்காழி அருணாசலக் கவிராயர் என்று அழைக்கப்பெற்றார். இவர் எழுதிய நூல்கள் இருந்தாலும் இராம நாடகக் கீர்த்தனை என்ற நூல் இவருக்கு அழியாத புகழை பெற்றுத் தந்தது.
- அசோகமுகி நாடகம், சீர்காழி தலபுராணம், சீர்காழிக் கோவை, சீர்காழி கலம்பகம், சீர்காழி அந்தாதி, தியாகராசர் வண்ணம், சம்பந்தர்ப்பிள்ளைத் தமிழ் அநுமார் பிள்ளைத் தமிழ், இராம நாடகக் கீர்த்தனை போன்ற நூல்கள் கவிராயர் படைப்புகள் ஆகும்.
முத்துத்தாண்டவர்:
- முத்துத்தாண்டவர் அந்த காலத்தில் கருநாடக இசையில் பல பாட்டுக்களை இயற்றியும், பாடியும் பெரும் புகழை பரப்பிய இசை முன்னோடி என்றும் சொல்லாம். இப்பொழுது உள்ள இசை முன்னேற்றத்திருக்கும் இவரின் பங்கு உள்ளது என்பதில் பெருமைகொள்கிறோம்.
- இவரின் பாடல்கள் பதம் வகையினைச் சாரும். இதனை பெரும்பாலும் நாடகத்திற்காக பயன்படுத்துவார்கள்.
மாரிமுத்தாப் பிள்ளை:
- மாரிமுத்தாப் பிள்ளை 1717-1787 -லில் சீர்காழியில் பிறந்து கருநாடக இசையில் பாடியும், இயற்றியும் பெரும் புகழ் இவரையே சாரும், இவரின் பாடல்கள் சிதம்பரம் நடராஜர் என்னும் பாடல்களை இயற்றியுள்ளார் மற்றும் தில்லை சிதம்பரமே அல்லால் வேறில்லை தந்திரமே, தெரிசித்தபேரைப் பரிசுதராகச் சிதம்பரமின்றி யுண்டோ, போன்ற பாடங்களை இயற்றியுள்ளார்.
- இவர் மூவர்களுக்கேற்று தமிழிசை மணிமண்டபம் உள்ளது. அது நாகப்பட்டினம் மாவட்டம் உள்ள சீர்காழியிலில் கட்டப்பட்டுள்ளது. அருணாசலக் கவிராயர், முத்துத்தாண்டவர், மாரிமுத்தாப் பிள்ளை இவர்களின் நினைவு பிப்ரவரி 20 தேதி அன்று 2013– லில் தமிழ்நாட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் காணொலி மூலம் திறக்கப்பட்டது.
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> |
GK in Tamil |