அறிவியல் பொது அறிவு வினா விடை | Science General Knowledge Questions in Tamil
வணக்கம் நண்பர்களே இன்றைய பொது அறிவு சார்ந்த பகுதியில் அறிவியல் சார்ந்த கேள்வி பதில்களை தெரிந்து கொள்ளலாம். பொது அறிவு வினா விடைகளை படிப்பதனால் அவை நம் எதிர்காலத்திற்கு உதவுவது மட்டும் இன்றி நம்முடைய மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கவும் பயன்படுகிறது. சரி வாங்க tnpsc தேர்வுகளில் கேட்கப்படும் பொது அறிவியல் – பொது அறிவு குவியல்களை இந்த தொகுப்பில் படித்தறியலாம்.
Science General Knowledge in Tamil:
- பிரகாசமான ஒளியுடன் எரியும் தனிமம் எது?
விடை: மக்னீசியம்
2. ஆரஞ்சுப்பழத்தில் அதிக அளவு உள்ள வைட்டமின் எது?
விடை: வைட்டமின் சி
3. கோழி தனது குஞ்சுகளை பொறிக்க எத்தனை நாட்கள் எடுத்து கொள்ளும்?
விடை: 21 நாட்கள்
4. பயோரியா வியாதியால் உடலின் எந்த பகுதி பாதிக்கப்படும்.
விடை: பற்கள்
5. நைட்ரஜன் வாயுவை கண்டுப்பிடித்தவர் யார்?
விடை: டேனியல் ரூதர்போர்டு
அறிவியல் பொது அறிவு வினா விடைகள்:
6. போலியோ சொட்டு மருந்தினை கண்டுப்பிடித்த விஞ்ஞானி யார்?
விடை: ஜோனல் சால்க்
7. பென்சிலின் என்பது எதனை குறிப்பிடுகிறது?
விடை: உயிர் எதிரி
8. திட கார்பன் டை ஆக்சைடு என்பது என்ன?
விடை: உலர் பனிக்கட்டி
9. பாலில் இருக்கும் கலப்படத்தை கண்டறிய உதவும் கருவி எது?
விடை: பால்மானி
10. x கதிர்களை பயன்படுத்தி எந்த நோயை குணப்படுத்த முடியும்
விடை: புற்றுநோய்
அறிவியல் பொது அறிவு வினா விடை:
11. பாறைகளில் புதை உயிர் படிவங்கள் உருவாவதற்கு என்ன பெயர்?
விடை: படிவமாதல்
12. இந்திய தொல் தாவரவியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
விடை: பீர்பால் சஹானி
13. வைட்டமின் B7 குறைபாட்டால் ஏற்படும் நோய் எது?
விடை: தோல் அழற்சி, குடல் அழற்சி
14. துண்டிக்கப்பட்ட DNA துண்டுகளை இணைக்க பயன்படும் நொதியின் பெயர் என்ன?
விடை: லைகோஸ் நொதி
15. தலைமை சுரப்பி என்றழைக்கப்படும் சுரப்பி எது?
விடை: பிட்யூட்டரி
Science General Knowledge in Tamil:
16. மனித மூளையில் 60% எவற்றால் ஆனது?
விடை: கொழுப்பால் ஆனது
17. நரம்பு மண்டலத்தின் அமைப்பு மற்றும் செயலின் அடிப்படை அலகு எது?
விடை: நியூரான்கள்
18. வைட்டமின் D குறைபாட்டால் ஏற்படும் நோய் எது?
விடை: ரிக்கெட்ஸ், ஆஸ்டியோமலாசியா
19. எந்த திரவத்தில் மூளை மிதந்த நிலையில் இருக்கும்
விடை: மூளை தண்டுவட திரவம்
20. வாந்தியெடுப்பதை கட்டுப்படுத்தும் மையம் எது?
விடை: முகுளம்
21. இரத்தத்தை எடுத்து செல்ல முடியாத பகுதிகளுக்கு ஊட்டச்சத்துக்களையும், ஆக்ஸிஜனையும் வழங்குவது எது?
விடை: நிணநீர்
22. இரத்த அழுத்தத்தை கண்டறிய உதவும் கருவி எது?
விடை: ஸ்பிக்மோமானோமீட்டர் (இரத்த அழுத்தமானி)
23. இதய சுழற்சி எத்தனை வினாடிகளில் முடிவடையும்?
விடை: 0.8 வினாடி
24. இரத்த சிவப்பணுக்களின் வாழ்நாள் எத்தனை நாட்கள்?
விடை: 120 நாட்கள்
25. வைட்டமின் சி குறைபாட்டால் ஏற்படும் நோய் எது?
விடை: ஸ்கர்வி
26. குளுகோஸ் எந்தப் பிரிவை சார்ந்தது?
விடை: மானோ சாக்ரைடு
27. டைபாய்டினால் எந்த உடல் உறுப்பு பாதிக்கப்படுகிறது?
விடை: குடல்
28. உடலில் நோயை எதிர்த்து செயல்படுவது எது?
விடை: வெள்ளை அணுக்கள்
29. கிரீன் ஹவுஸ் விளைவிற்கான ஒளி மண்டல வாயு எது?
விடை: கார்பன்டை ஆக்சைடு
30. செல்களைப் பற்றிய அறிவியல் பிரிவுக்கு என்ன பெயர்?
விடை: லைடாலஜி
பொது அறிவு வினா விடைகள் |
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |