சீக்கிய மதத்தை தோற்றுவித்தவர் | Seekiya Mathathai Thotruvithavar

சீக்கிய மதத்தை தோற்றுவித்தவர் யார்?

Seekiya Mathathai Thotruvithavar: சீக்கியம் அல்லது சீக் என்ற சொல்லிற்கு “சீடர்”, அல்லது “கற்பவர்” என்று பொருள். சீக்கிய மதமானது இந்தியத் துணைக் கண்டத்தின் பஞ்சாப் பகுதியில் 15-ஆம் நூற்றாண்டின் முடிவில் தோன்றிய சமயமாகும். முதல் நான்கு மதங்களானது கிறித்தவம், இசுலாம், இந்து, பௌத்தம் போன்ற மதங்களில் உலகிலையே ஐந்தாவது பெரிய சமயங்களில் சுமார் 30 மில்லியன் சீக்கியர்களைக் கொண்டது இந்த சீக்கிய மதம். இந்த பதிவில் சீக்கிய மதத்தை தோற்றுவித்தவர் யார்? என்பதன் பற்றியும், சீக்கிய மதத்தின் வரலாற்றினையும் படித்து அறிந்துக்கொள்ளுவோம்..!

லோக்சபாவிற்கு செல்லாத இந்திய பிரதமர் யார்?

சீக்கிய மதத்தை தோற்றுவித்தவர் யார்?

விடை: குருநானக்

குருநானக் வரலாறு:

சீக்கிய மதத்தை தோற்றுவித்தவர் யார்குருநானக் என்பவர் சீக்கிய மதத்தை தோற்றுவித்தவர். இவர் சீக்கிய மதத்தின் நிறுவனர் மற்றும் பத்து சீக்கிய குருக்களுள் முதல் குரு ஆவார். இறைவனை ஒளி வடிவத்தில் பார்த்தவர் குருநானக். கடவுள் இருப்பதை அறிந்த இவர் உருவத்தின் வழிபாடுகளை வணங்குவதை தவிர்த்துவிட்டார். குருநானக் வகுத்த வழிகளுக்கு சீக்கிய சமயம் என்று பெயர் வந்துள்ளது.

குருநானக் பாகிஸ்தானில் லாகூர் அருகில் டல்வண்டி என்ற கிராமத்தில் பிறந்தவர். சிறிய வயதிலிருந்தே இவர் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு உள்ளவர். பல மதங்களை கற்றுக்கொள்வதில் பெரும் ஆர்வமாய் இருந்தவர். குருநானக் தந்தை ஊரில் வசூல் செய்வதை தொழிலாக வைத்திருந்தவர். குருநானக்கும் சிறிது காலம் தந்தையுடன் வழித்தடத்தில் சென்று கொண்டிருந்தார். பாதியிலேயே அவர் தந்தையுடன் செல்வதை விட்டுவிட்டு ஆன்மீகத்தில் ஈடுபட தொடங்கிவிட்டார்.

குருநானக் நினைவாக:

Seekiya Mathathai Thotruvithavar

இவருடைய 550-வது பிறந்தநாளினை முன்னிட்டு பாகிஸ்தான் அரசனது இவருக்கு நினைவு நாணயத்தினை வெளியிட்டுள்ளது.

மரியாதை செலுத்தும் வகையில் ஏர் இந்தியா விமானத்தில் இவருடைய 550-வது பிறந்தநாள் கொண்டாட்டம் பற்றி எழுத்தப்பட்டுள்ளது.

தியானம்:

சீக்கிய மதத்தை தோற்றுவித்தவர் யார்

குருநானக் அவருடைய சகோதரியின் திருமணத்திற்கு பிறகு சுல்தான்பூர் சென்று தினமும் காலையில் நதிக்கரை ஓரம் தியானம் செய்வதை வழக்கமாக வைத்திருந்தார்.

சீக்கிய மதம்:

குருநானக் உருவ வழிபாடு, கபட வேடம், மந்திரம், மாயம் இது போன்ற மதம் குறித்து அவர் பேச ஆரம்பித்தார். அந்த மதத்தினை தான் சீக்கிய மதம் என்று அழைக்கப்பட்டது. இந்த மதத்தினை பின்பற்றுபவர்களை சீக்கியர்கள் என்று அழைக்கிறார்கள். உலகத்தில் உள்ள மக்கள் அனைவரும் ஒரே மாதிரியானவர்கள் என்று கூறியவர் குருநானக்.

1499-ஆம் ஆண்டு அவருடைய 30-ஆம் வயதில் ஞானத்தினை அடைந்து தெய்வீக நிலை பெற்றார். மக்களிடம் மதத்தினை நீக்கி ஒற்றுமையை புகழ்படுத்தியவர். குருநானக்கின் போதனைகள் அனைத்தும் அன்பு பற்றியே அமைந்துள்ளது.

இவரின் போதனைகள் அடங்கிய புனித நூல்தான் குரு க்ரந்த் சாஹிப். மேலும் குருநானக் மோசடி இல்லாத நேர்மையான வாழ்வு, ஆன்மீக வழிபாடு, முன்னோர்களை மதித்தல் போன்ற பல கடமைகளை உணர்த்தியவர்.

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>GK  in Tamil