சீதை சிறை வைக்கப்பட்ட இடம்

Advertisement

சீதை சிறை வைக்கப்பட்ட இடம்

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் சீதை சிறை வைக்கப்பட்ட இடம் (the place where sita was imprisoned in tamil) எது என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். இராமாயணம் கதை பற்றி நாம் அனைவருமே அறிந்து இருப்போம். இன்னும் ஒரு சிலர் அக்கதையினை பற்றி அறியாமல் இருப்பார்கள். மேலோட்டமாக அக்கதையில் வரும் ராமன், சீதை மற்றும் ராவணன் போன்ற பெயர்களை மட்டும் அறிந்து இருப்போம். எனவே, அவர்கள் இராமாயணத்தில் வரும் முக்கியமான நிகழ்வுகளை மட்டும் தெறிந்து கொள்ள விரும்புவார்கள். அப்படி அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமானவைகளில் ஒன்று தான் சீதை சிறை வைக்கப்பட்ட இடம். ஓகே வாருங்கள் சீதை சிறை வைக்கப்பட்ட இடம் பற்றி பார்க்கலாம்.

Seethai Sirai Vaikkapatta Idam:

 சீதை, இலங்கையின் மலையகத்தில் உள்ள நுவரெலியா என்னும் மாவட்டத்தில் அமைத்துள்ள அசோக மரங்கள் நிறைந்த அசோக வனத்தில் இராவணனால் சிறைவைக்கப்பட்டார்.   அதிகப்படியான அசோக மரங்கள் நிறைந்த இடமே அசோக வானம் என்றழைக்கப்படுகிறது. இராமாயண கதையின்படி, இராமனின் மனைவியான சீதாவை இராவணன் கவர்ந்து சென்று அசோக வனத்தில் சிறை வைத்தார். இந்த இடம் தற்போது சீதை அம்மன் கோவில் அறியப்படுகிறது.

இராவணனின் மகன் யார்.?

அசோக வனம் என்பது, சீதை ராமனை பிரிந்து தவக்கோலத்தில் வாழ்ந்த இடமாகும். சீதை தனக்கு நேர்ந்த வேறு எந்த பெண்ணுக்கும் நேர கூடாது என்பதற்காக சீதை இங்கு தவம் புரிந்திருக்கிறார். சீதை அம்மன் கோவிலுக்கு சீதா அருவி என்னும் அருவி உள்ளது. இந்த அருவி ராவண அருவியுடன் கலந்து ஓடுகிறது என்றும் கூறப்படுகிறது.

அசோக வனத்தில் அசோக மரத்தின் அடியில் சீதா தேவி தங்கியிருந்தார். அவர் தங்கிரியிருந்த இடத்தில் சீதா தேவிக்கென்று ஒரு பிரத்தியேக கோவில் ஒன்று கட்டப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த கோவிலில் அனுமனுக்கென்று ஒரு தனி சன்னதி உள்ளது. இக்கோவில் அடர்ந்த வனத்தில் மலைச் சரிவில் காணப்படுகிறது. இக்கோவிலுக்கு செல்லும் வழியில் சிகப்பு நிற பூக்கள் பூத்து குலுங்குகின்றன. இப்படி அசோக வனத்தில் உள்ள சீதையம்மன் கோயிலின் சிறப்பினை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.

நாம இராமாயணம் பாடல் வரிகள்

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil
Advertisement