உலகிலேயே மிகச்சிறிய பறவை எது உங்களுக்கு தெரியுமா..?

Advertisement

Smallest Bird In The World

இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு பயனுள்ள தகவலை பற்றி தான் பார்க்க போகிறோம். தினமும் இந்த பதிவின் மூலம் ஒரு பயனுள்ள தகவலை பற்றி தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அந்த வகையில் இன்று உலகிலேயே மிகச்சிறிய பறவை எது என்று தெரிந்து கொள்ளப் போகிறோம். சரி இதற்கான விடை உங்களுக்கு தெரியுமா..? விடை தெரியாதவர்கள் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்.

மிக நீண்ட தொலைவு பறக்கும் பறவை எது?

Smallest Bird In The World in Tamil:

Smallest Bird In The World

உலகிலேயே மிகச்சிறிய பறவை எது தெரியுமா..?

விடை: Bee Humming Bird  .

ஹம்மிங் பறவை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்:

Smallest Bird

ஆங்கிலத்தில் Bee Humming Bird என்று அழைக்கப்படும் இந்த பறவை தான் உலகிலேயே மிகச்சிறிய பறவையாகும். இது கின்னஸ் உலக சாதனை படைத்த ஒரு பறவை என்றே சொல்லலாம். 

இந்த ஹம்மிங் பறவை 5 சென்டிமீட்டர் நீளம் மற்றும் 2 கிராம் எடையை கொண்ட ஒரு ஓசனிச்சிட்டு என்று அழைக்கக்கூடிய ஒரு பறவையாகும்.

கியூபா என்ற நாட்டில் காணப்படும் இந்தப் பறவை உலகின் மிகச் சிறிய பறவை என்ற உலக சாதனையைப் படைத்தது மட்டுமில்லாமல், உலகில் மிகச் சிறிய முட்டை இடும் பறவை என்ற சாதனையையும் படைத்துள்ளது.

இது மற்ற பறவைகளை போல முன்னே பறக்கும் திறன் மட்டுமில்லாமல் பின்னே பறக்கும் திறனும் கொண்ட ஒரு பறவை ஆகும்.

 இந்த பறவை தண்ணீரில் நின்ற நிலையிலேயே மிதக்கும் திறன் கொண்ட பறவை ஆகும். அதாவது, இந்தப் பறவை அதன் இறக்கைகளை ஒரே நொடியில் ஏறத்தாழ 80 தடவைகள் அடித்து அதிவேகத்தில் தண்ணீரில் நின்ற நிலையிலேயே மிதக்கும் திறனை கொண்டுள்ளது. அப்படி அதிவேகத்தில் மிதக்கும் போது அதன் இறக்கைகளை மனித கண்களால் பார்க்கவே முடியாது.  

இந்த ஹம்மிங் பறவையானது ஒரு பூவில் இருந்து இன்னொரு பூவிற்கு மகரந்தத்தை எடுத்துச் செல்கிறது. இந்த பறவை அதன் பறக்கும் திறன் காரணமாக ஒரு நாளில் மட்டுமே 1,500 பூக்களைத் தொட்டு விடுகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

இறக்கை இல்லாத பறவை இனம்

 

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil
Advertisement