சமூக அறிவியல் பொது அறிவு வினா விடை/Social Science General Knowledge In Tamil
இன்றைய பதிவில் நாம் சமூக அறிவியல் பற்றிய பொது அறிவு வினா விடைகளை பற்றி தான் பார்க்க போகின்றோம்.பொதுவாக பொது அறிவு சம்பந்தப்பட்ட தேர்வுகள் வரும் போது மட்டும்தான் நாம் பொதுஅறிவு வினாக்களை படிப்போம். அப்படி பார்த்தால் நீங்கள் படிக்கும் பொதுஅறிவு வினாக்கள் தேர்வு எழுதும் வரையில்தான் நியாபகம் இருக்கும். அதன் பிறகு மறந்து விடுவீர்கள். ஆகையால் நீங்கள் தேர்விற்கு தினமும் படித்து கொண்டிருந்தால் தான் நீங்கள் பயமின்றி தேர்வு எழுதுவீர்கள் நீங்கள் பொது அறிவு வினாக்களை தினமும் படிப்பதன் மூலம் நல்ல மதிப்பெண்களை பெற முடியும்.அதனால் உங்களுக்காக இன்றைய பதிவில் சமூக அறிவியல் பற்றிய பொது அறிவு வினாவிடைகளை பற்றி பார்க்கலாம்.
1. 1940 ல் வெளியிடப்பட்ட யாருடைய அறிக்கை ஆகஸ்ட் நன்கொடை என்று அழைக்கப்படுகிறது?
விடை : லின்லித்தோ
2. விக்ரமாதித்யன் என்ற பட்ட பெயர் உடைய மன்னர் யார் ?
விடை :சமுத்திர குப்தர்
3. இரண்டாவது பானிபட் போர் நடந்த ஆண்டு எது ?
விடை :1556
4. இந்தியாவில் குடியரசு தலைவர் ஆட்சி முதன் முதலில் அமல்படுத்தப்பட்ட மாநிலம்?
விடை :கேரளா
5. இமயமலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை :பனி உறைவிடம்
6. இந்தியாவிற்கு எந்த திசையில் வங்காள விரிகுடா அமைந்துள்ளது?
விடை :தென் கிழக்கு திசை
7. இந்தியாவின் மிக உயரமான சிகரம் எது ?
விடை :காட்வின் ஆஸ்டின்
8. இந்திய பாராளுமன்றத்தில் இந்திய குடியுரிமை சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
விடை :1947
9. 1915 ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசால் “KNIGHT -HOOD” என்ற பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டவர் யார் ?
விடை :இரவீந்தரநாத் தாகூர்
10. சர்வதேச நீதிமன்றம் எத்தனை நீதிபதிகளை கொண்டுள்ளது?
விடை :15 நீதிபதிகள்
11. நீதிபதிகளின் சம்பளம் எவ்வாறு வழங்கப்படுகிறது?
விடை :தொகுப்பு நிதியிலிருந்து வழங்கப்படுகிறது
12. சார்க் அமைப்பின் முதல் பொது செயலாளர் யார் ?
விடை :ஆஷான்
13. நேரடி மக்களாட்சி பழங்காலத்தில் எந்த நாட்டில் நடைமுறையில் இருந்தது?
கிரீஸ்
14. தேர்தல் ஆணையரின் அதிகாரம் யாருக்கு சமம்
விடை :உச்ச நீதிமன்ற நீதிபதி
15. தகவல் அறியும் உரிமை சட்டம் பாராளுமன்றத்தில் எப்போது நிறைவேற்றப்பட்டது?
விடை :அக்டோபர் 12- 2005
16. சுயமரியாதை இயக்கத்தை நடத்தியவர் யார்?
விடை :பெரியார்
17. உலக நுகர்வோர் தினம் ?
விடை :மார்ச் 15
18. ஹரிஜன் என்ற வார்த்தையை முதல் முறையாக பயன்படுத்தியவர் ?
விடை :காந்தியடிகள்
19. ஆளுநரை நியமிப்பவர் யார் ?
விடை :குடியரசு தலைவர்
20. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறும் வயது?
விடை :65 வயது
21. ஐ.நா. சபையின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது ?
விடை :நியூயார்க்
22. தேசிய கீதம் முதன் முதலாக எப்போது பாடப்பட்டது ?
விடை :டிசம்பர் 27- 1911
23. தொட்டில் குழந்தை திட்டம் தமிழக அரசால் எப்போது அறிமுகப்படுத்தபட்டது?
விடை :1997
24. பூரண சுயராஜ்ஜிய தீர்மானம் எப்போது நிறைவேற்றபட்டது?
விடை :1930
25. இந்திய தேசிய பாடல் எந்த மொழியில் எழுதப்பட்டது ?
விடை :சமஷ்கிருதம்
அறிவியல் பொது அறிவு வினா விடைகள்
Social Science Gk Question :
26. அரசியலமைப்பின் பாதுகாவலனாக இருப்பது ?
விடை :உச்ச நீதிமன்றம்
27. நாடு முழுவதும் ஒரே மாதிரியான கல்வி முறை எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?
விடை :1968
28. சர்வதேச மனித உரிமை தினம் ?
விடை :டிசம்பர் 10
29. உலக எழுத்தறிவு தினம்?
விடை :செப்டம்பர் 08
30. இந்தியாவில் மொழியின் அடிப்படையில் பல மாநிலங்கள் எப்போது உருவாகின ?
விடை :1956
31. இந்திய அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் யார் தலைமையில் நடைபெற்றது?
விடை :சச்சிதானந்த சிங்கா
32. தேசிய பாடல் வந்தே மாதரம் பாடலை இயற்றியவர்?
விடை :பக்கிம் சந்திர சாட்டோபதி
33. லோக்சபா உறுப்பினர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கபடுகிறார்கள்?
விடை :நேரடி தேர்தல் முறை
34. பன்னாட்டு எழுத்தறிவு ஆண்டாக ஐ நா வினால் அறிவிக்கப்பட்ட ஆண்டு ?
விடை :1990
35. ஐ நா சபையில் எத்தனை நாடுகள் வீட்டோ அதிகாரத்தை பெற்றுள்ளன?
விடை :5 நாடுகள்
36. இந்திய அரசியலமைப்பு வரைக்குழு தலைவர் யார் ?
விடை :அம்பேத்கர்
37. மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களின் குறைந்த பட்ச அளவு எண்ணிக்கை ?
விடை :60
38. கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டம் எவ்வாறு இயற்றப்பட்டது?
விடை :1976 ஆம் ஆண்டு
39. இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளின் எண்ணிக்கை ?
விடை :22 மொழிகள்
40. ஐ. நா. சபை எப்போது தொடங்கப்பட்டது ?
விடை :1945
41. இந்திய அரசியல் நிர்ணய சபை எப்போது அமைக்கப்பட்டது?
விடை :1946
42. கிபி 1526 இல் கிருஷ்ண தேவராயர் யாரை மதுரைக்கு ஆளுநராக நியமித்தார் ?
விடை :விஸ்வநாத’நாயக்கர்
43. விஜயநகர பேரரசு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு?
விடை :கிபி 1336
44. “நீதி சங்கிலி மணி” என்ற புதிய நீதி வழங்கும் முறையினை எந்த அரசர் கொண்டுவந்தார்?
விடை :ஜஹாங்கீர்
45. இந்திய கிளி என்று அழைக்கப்பட்ட கவிஞர்?
அமிர்குஸ்ரு
46. வாஸ்கோடகாமா எந்த நாட்டை சேர்ந்த மாலுமி?
போர்ச்சுக்கல்
47. தமிழ்நாட்டில் உள்ள ராஜ்யசபா உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை ?
விடை :18
48. இந்தியாவின் துணை ஜனாதிபதியாக இரண்டு முறை பொறுப்பேற்றவர் ?
விடை :முகமது ஹமீத் ஹன்சாரி
49. இந்தியாவில் முதல் விமானப்படை சீப் மார்ஷல் ?
விடை :ஏர் சீப் மார்ஷல் அர்ஜுன் சிங்
50. ஜைன மதத்தை தோற்றுவித்தவர் ?
விடை :ரிஷபர்
| இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |














