Somanathar Kovil Place in Tamil
இந்து மதங்களை பொறுத்தவரை பலவகையான கடவுள்களும், அந்த கடவுள்களுக்கு பல இடங்களில் பல கோயில்கள் அமைத்து வழிபடுவதும் வழக்கமான விஷயமாகும். அந்த வகையில் இந்த பதிவில் சோமநாதர் கோவில் அமைந்துள்ள இடம் எது என்பதை பற்றி படித்தறியலாம். இதுமாதிரியான கேள்விகளை போட்டி தேர்வுகளில் கேட்கப்படுகிறித்து. எனவே நீங்கள் அதனை தெரிந்து வைத்துக்கொள்வது மிகவும் சிறந்த விஷயமாகும். அதாவது பிற்காலத்தில் தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க சோமநாதர் கோவில் அமைந்துள்ள இடம் எது என்பதை பற்றி இப்பொழுது நாம் தெரிந்து கொள்வோம்.
சோமநாதர் கோயில் அமைந்துள்ள இடம்?
- விடை: குஜராத்
சோமநாதர் கோயில் பற்றிய சில தகவல்:
சோமநாதர் கோயில் என்பது ஒரு சிவன் கோவில் ஆகும்.
இந்தியாவின் குஜராத்து மாநிலத்தின் தென்மேற்குக் கரையில், கிர்சோம்நாத் மாவட்டத்தில், பிரபாச பட்டினக் கடற்கரையில் இந்த சோமநாதபுரம் சிவன் கோயில் அமைந்துள்ளது.
குறிப்பாக இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் முதன்மையானது இந்த சோமநாதர் கோவில் ஆகும்.
இங்கு ஜோதிர் லிங்கத்தின் நேர் பின் புறம் உள்ள சக்தி அம்மன், 51 சக்தி பீடங்களில் தேவியின் வயிற்றுப் பகுதி விழுந்த சக்தி பீடத்திற்குரியதாகும்.
இஸ்லாமிய படையெடுப்பின் போது இந்த கோவில் 6 முறை இடிக்கப்பட்டது. ஆனால் அந்த சர்வேஸ்வரனின் அருளால் மீண்டும் மீண்டும் இந்த கோவில் எழுப்பப்பட்டது.
பல சிறப்புக்கள் பெற்ற இந்த கோவிலின் சந்தன கதவுகள் கஜினி முகமதால் ஆப்கானிஸ்தானுக்கு கொண்டு செல்லப்பட்டது. அந்த கதவுகளை மீட்பதற்கான நடவடிக்கையை 1842 ஆம் ஆண்டில் இந்தியாவின் கவர்னர் ஜெனரல் லார்டு எல்லன்பரோ எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
காலத்தை கடந்து நிற்கும் சோம்நாத் கோவிலின் கடற்பகுதியில் அனைவரும் அதிசயிக்கும் வண்ணம் சில சிவ லிங்கங்கள் தானாக தோன்றியது. அது எப்படி எப்போது தோன்றியது என சரிவர தெரியவில்லை. ஆனால் அந்த லிங்கங்கள் மிகவும் பழைமையானதாக விளங்குவது குறிப்பிடத்தக்கது.
சூரிய கடவுளுக்கான கோவில் அமைந்துள்ள இடம் எது தெரியுமா? |
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |