South Korea Information in Tamil
அனைவருக்கும் இனிய வணக்கங்கள் நண்பர்களே..! நாம் பயன்படுத்தும் பெரும்பாலான எலக்ட்ரானிக் பொருட்களின் தாயகமாக விளங்கும் தென் கொரியா பற்றி சில தகவல்களை தான் இந்த பதிவில் காண இருக்கின்றோம். பொதுவாக நம்மில் பலருக்கும் தென் கொரியா செல்லவேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அங்கு செல்வதற்கு முன் தென் கொரியா பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்துகொண்டு செல்லுங்கள். அப்படி உங்களுக்கு தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை, இந்த பதிவில் தென் கொரியா பற்றிய சில தகவல்களை காணலாம்.
தென் கொரியா பற்றிய தகவல்கள்:
- தென் கொரியா என்று அழைக்கப்படும் கொரியக்குடியரசு கிழக்கு ஆசியாவில் உள்ள ஒரு நாடு ஆகும்.
- தென் கொரியாவின் தலைநகரம் சியோல் ஆகும்.
- தென் கொரியாவின் குடியரசு தலைவர் யூன் சுக்-யோல் ஆவார்.
- தென் கொரியாவின் பிரதமர் ஹான் டக்-சூ ஆவார்.
- தென் கொரியாவின் பரப்பளவு 99,720 சதுர கி.மீ
- தென் கொரியாவின் தேசிய மொழி கொரிய மொழி ஆகும். இந்த கொரிய மொழியை ஹங்குல் என்றும் அழைக்கின்றனர்.
- பௌத்த மதமும் கிறித்தவ மதமும் இங்குப் பின்பற்றப்படும் இரு முக்கிய மதங்களாகும்.
- தென் கொரியா சியோல், பசன், இங்கியோன், தேகு, தேஜோன், குவங்க்சு, உல்சன், கியோங்கி, தெற்கு கியோங்சாங் மற்றும் கோயங் ஆகிய 10 மாகாணங்களை கொண்டுள்ளது.
- தென் கொரியாவில் குழந்தை பிறந்த உடனே 1 வயது நிரம்பியதாக கருதப்படுகிறது.
- உலக அளவில் அதிக அளவில் பிளாஸ்டிக் அறுவைசிகிச்சை தென் கொரியாவில் தான் நடத்தப்படுகிறது.
- உலகிலேயே அதிவேக இணைய சேவையை கொண்டுள்ள நாடு தென்கொரியா.
- உலகிலேயே முதன் முறையாக சிறைச்சாலையின் பாதுகாவலர் பணிக்கு ரோபோக்களை பயன்படுத்திய நாடு தென்கொரியா.
தெற்கு ஆப்பிரிக்கா பற்றிய 10 சுவாரசியமான தகவல்கள்
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |