GK Questions About Ilangai in Tamil | Sri Lanka GK Questions in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் இலங்கை பற்றிய பொது அறிவு வினா விடை (General Knowledge Questions and Answers in Tamil Sri Lanka Tamil) பற்றி கொடுத்துள்ளோம். இலங்கை என்பது, இந்தியப் பெருங்கடலில் ஏறத்தாழ 20 மில்லியன் மக்கள் வாழும் ஒரு தீவு நாடு ஆகும். இலங்கையை சிலோன் என்று கூறுவார்கள். 1972 ஆம் ஆண்டிற்கு பிறகு, உலகம் முழுவதும் சிலோன் என்ற பெயரால் இலங்கை அறியப்படுகிறது.
இலங்கையின் இயற்கை அலகினால் “இந்து சமுத்திரத்தின் முத்து” என்றும் அழைக்கப்ப்டுகிறது. ஆனால், இது நம்மில் பலருக்கும் தெரியாது. இதுபோன்ற இலங்கை பற்றி நமக்கு தெரியாத சில தகவல்களை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ள கேள்விகள் மூலம் படித்து தெரிந்துகொள்ளலாம் வாங்க.
இலங்கை பற்றிய பொது அறிவு வினாக்கள் | General Knowledge Questions and Answers in Tamil Sri Lanka Tamil Medium:
1.இலங்கையின் தேசிய சின்னங்கள்
- இலங்கையின் தேசிய மரம் – நாகமரம்
- இலங்கையின் தேசியப் பறவை – காட்டுக்கோழி
- இலங்கையின் தேசிய மிருகம் – யானை
- இலங்கையின் தேசிய மலர் – நீலஅல்லி
2.இலங்கையின் சிறப்பு பெயர்கள் என்ன?
விடை : இந்து சமுத்திரத்தின் முத்து இந்து சமுத்திரத்தின் நித்திலம்
3.இலங்கை மிகப் பழைய காலத்தில் அழைக்கப்பட்ட பெயர் என்ன?
விடை : தம்பபன்னி
4.இலங்கையின் முதலாவது வரைப்படத்தை வரைந்தவர் யார் ?
விடை : மார்க்கோபோலோ
5.இலங்கையின் ஆதிக் குடிகள் யார் ?
விடை : இயக்கர், நாகர் என்ற திராவிட பரம்பரையினர்
6.பூர்வீக மாகாணங்கள் எவை ?
விடை : ரஜரட்ட, மாயரட்ட, றுகுணுரட்ட
7.இலங்கையின் சிறப்பைக் கூறும் வகையில் உருவாக்கப்பட்ட கப்பல் எது ?
விடை : கிரியேட் சிப் ரோஹினி
8.தேசிய சின்னம் பயன்படுத்தப்படுவது எப்போதிருந்து ?
விடை : 1972 இல் குடியரசான பின்னர்.
9.தேசிய சின்னத்தை உருவாக்கியவர் யார் ?
விடை : தொல்பொருள் ஆய்வு சக்கரவர்த்தி எஸ்.எம். செனவிரத்ன
10.இலங்கையின் தேசிய சின்னம் வெளிப்படுத்தும் விடயங்களும், அடையாளங்களும்
- சிங்கம் – வீரம்
- கலசம் (பூரணகும்பம்) – சௌபாக்கியம்
- சந்திர சூரியர் – உலக நிலைப்பாடு
- நெற்கதிர் – சௌபாக்கியம்
- தர்ம சக்கரம் – தர்மமும் நீதியும்
- தாமரை மலர் – தூய்மை
11.இலங்கையின் தேசிய மரம் எது?
விடை : நாகமரம்
12.இலங்கையின் தேசிய விளையாட்டு எது?
விடை : கரப்பந்தாட்டம்
13.இலங்கையின் தேசிய மலர் எது?
விடை : நீலோற்பலம் / நீல அல்லி
14.தேசிய பறவை
விடை : காட்டுக்கோழி
15.தேசிய இரத்தினக்கல்
விடை : நீல மாணிக்கம்
உருவாக்கமும் ஆண்டுகளும்:
- முதலாவது தொழிநுட்ப கல்லூரி – 1893
- லண்டன் பல்கலைகழக கல்லூரியுடன் இணைந்த வகையில் இலங்கை பல்கலைகழக கல்லூரி உருவாக்கப்பட்டது – 1921
- இலங்கை பல்கலைகழக கல்லூரியையும், கொழும்பு மருத்துவ கல்லூரியும் இணைத்து இலங்கை பல்கலைகழகம் உருவாக்கப்பட்டது – 1942
- இலங்கை பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு உருவாக்கப்பட்டது – 1978
- இலங்கையில் திறந்த பல்கலைகழகம் உருவாக்கப்பட்டது – 1980
- மகாபொல புலமை பரீசில் திட்டம் உருவாக்கப்பட்டது – 1981
- இலவச கல்வி ஆரம்பிக்கபட்டது – 1945
- புலமை பரீசில் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது – 1952
- சுய மொழிகள் போதனா மொழியாக்கப்பட்து – 1956
- பாடசாலைகள் தேசிய மயமாக்கப்பட்டது – 1960
- இலவச பாடநூல்கள் வழங்கப்பட்டது – 1980
- இலவச சீறுடை வினியோகம் – 1993
- பாடசாலை கல்வி அமைச்சு உருவாக்கப்பட்டது – 2001
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |