இந்த நாடுகளில் சூரியன் மறையாதாம்..! உங்களுக்கு தெரியுமா..?

suriyan marayatha nadu ethu

சூரியனே மறையாத அதிசய நாடு

சூரியன் வந்தால் பகல், சூரியன் மறைந்தால் இரவு என்று அறிவோம். ஆனால் சூரியன் மறையாத நாடு இருக்கின்றது என்று நம்ப முடிகிறதா..! ஆனால் உண்மை தான். உலகில் உள்ள சில நாடுகளில் 70 நாட்களுக்கும் மேலாக சூரியன் மறையாமல் இருக்குமாம். அது என்னென்ன நாடுகள் என்று இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..!

நார்வே: 

 சூரியனே மறையாத அதிசய நாடு

நார்வேயில் 76 நாட்கள் தொடர்ந்து பகலை மட்டும் தான் பார்க்க முடியும். நார்வேயில் உள்ள Land Of Midnight Sun என்ற பகுதியில் மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை சூரியன் மறையாமல் இருக்கும்.

நுனாவுட் கனடா:
கனடா

கனடாவின் வடமேற்கு பகுதியில் ஆர்க்டிக் வட்டத்திற்கு மேலே இரண்டு டிகிரிக்கு மேலே நுனாவுட் என்ற இடம் உள்ளது. அந்த இடத்தில் இரண்டு மாதங்கள் தொடர்ந்து சூரியன் மறையாமல் இருக்குமாம்.

இதையும் படியுங்கள் ⇒ இந்த உலகில் நதிகள் இல்லாமல் நாடு உள்ளது..? இது யாருக்கு தெரியும்..!

ஐஸ்லாந்து:

சூரியனே மறையாத அதிசய நாடு

ஐரோப்பாவின் மிக பெரிய தீவு என்றால் அது ஐஸ்லாந்து தான். கொசுக்கள் இல்லாத நாடாகவும் ஐஸ்லாந்து தான் உள்ளது. இந்த நாட்டில் ஜூன் மாதத்தில் சூரியன் மறையாமல் காட்சியளிக்கிறது. 

பாரோ,அலாஸ்கா:

suriyan marayatha nadu ethu

அலஸ்காவில் உள்ள பாரோ என்ற இடத்தில் மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை சூரியன் மறையாமல் இருக்கும். இந்த நேரத்தை துருவ இரவு நேரம் என்று அழைக்கின்றனர்.

பின்லாந்து:

suriyan marayatha nadu ethu

ஆயிரம் ஏரிகள் மற்றும் தீவுகளின் நிலம் என்று பின்லாந்து அழைக்கப்படுகிறது. இந்த நாட்டில் கோடைகாலத்தில் தொடர்ந்து 73 நாட்களுக்கு சூரியனை மறையாமல் பகலாக காட்சியளிக்கிறது.

ஸ்வீடன்:

 சூரியனே மறையாத அதிசய நாடு

ஸ்வீடன் நாட்டில் மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை நள்ளிரவில் தான் சூரியன் மறையும். அதே போல் அதிகாலை 4 மணிக்கு சூரியன் உதிக்க ஆரம்பித்துவிடும்.

இதையும் படியுங்கள் ⇒ உலகில் காகம் இல்லாத நாடு எது உங்களுக்கு தெரியுமா..?

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK in Tamil