தமிழ் எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்? | Tamil Eluthukkal Ethanai Avai Yavai?

tamil eluthukkal ethanai

தமிழ் எழுத்துக்கள் எத்தனை வகைப்படும் அவை யாவை?

“எவன் ஒருவன் தமிழின் சுவையை உணர்கிறானோ அவன் தாய் பாலின் சுவை அறிவான் என்று கருதலாம்” என்ற பாடலுக்கு ஏற்ப தமிழில் மொழி மட்டுமல்ல அதில் உபோயோகப்படுத்தப்படும் எழுத்துக்களும் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அப்படிப்பட்ட தமிழ் எழுத்துக்களின் வகைகள் என்ன என்பதையும் அதன் விளக்கத்தையும் தெரிந்துகொள்வது அவசியம் அல்லவா! தமிழ் எழுத்துக்களில் எத்தனை வகைகள் உள்ளன என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம் வாங்க.

Tamil Eluthukkal Ethanai Vagai Padum Avai Yavai – தமிழ் எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?

தமிழ் எழுத்துக்கள் மொத்தம் இரண்டு வகைப்படும். அவை

 1. முதல் எழுத்து
 2. சார்பு எழுத்து

முதல் எழுத்து:

 • முதல் எழுத்து என்பது மொழிக்கு முதலாகவும், பிற எழுத்துக்கள் உருவாவதற்கும், ஒலிக்கவும் காரணமாக இருக்கும் எழுத்துகள் முதல் எழுத்துகள் எனப்படும். அதாவது பன்னிரண்டு உயிர் எழுத்துகளும் பதினெட்டு மெய் எழுத்துகள் ஆகிய 30-ம் சேர்ந்தது முதல் எழுத்துக்களாகும்.

உயிரெழுத்து – தமிழ் எழுத்துக்கள் எத்தனை?

 • தமிழில் இருக்கக்கூடிய அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள, ஃ ஆகிய பன்னிரண்டு எழுத்துகளும் உயிரெழுத்துக்கள் ஆகும். இவை இயல்பாகவும், எளிமையாகவும் ஒலிக்கக்கூடியன. இதற்கு ஆவி என்ற மற்றொரு பெயரும் உண்டு. ஆவி என்பதற்கு உயிர் என்று பொருள்படும்.

Tamil Eluthukkal Ethanai – மெய் எழுத்துகள்:

 • க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் ஆகிய பதினெட்டு எழுத்துக்களும் மெய் எழுத்துகள் ஆகும்.
 • இந்த எழுத்துக்களை உச்சரிப்பது சற்று கடினம். உயிர் இல்லாமல் உடல் இருக்காததை போல மெய் எழுத்துகளும் உயிர் எழுத்துகளுடன் சேர்ந்தே இயங்கும். மே என்றல் உடம்பு என்று பொருள்.
 • இதனை ஒற்று எழுத்துகள் என்றும், புள்ளி இட்டு எழுதுவதனால் புள்ளி எழுத்து என்றும் அழைப்பார்கள்.
உயிர் மெய் எழுத்துக்கள்

சார்பு எழுத்து:

 • முதல் எழுத்துக்களை சார்ந்து வரக்கூடியவை சார்பு எழுத்து எனப்படும். உயிர்மெய் மற்றும் ஆய்த எழுத்துக்கள் சார்பு எழுத்துகள் ஆகும்.

உயிர்மெய் எழுத்துக்கள்:

 • உயிர் எழுத்துகளும் மெய் எழுத்துகளும் சேர்ந்து ஒலிப்பதனால் உயிர்மெய் எழுத்துகள் பிறக்கின்றன.

உதாரணம்:

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram, Youtube" சேனல Join" பண்ணுங்க: Pothunalam Telegram Pothunalam Youtube

 1. க் + இ = கி
 2. ச் + உ = சு
 3. ப் + உ = பு
 4. வ்  + அ = வ
 5. த் + ஏ = தே
 • மேற்கூறிய எழுத்துகள் உயிர் எழுத்துகளின் ஒலியும் மற்றும் மெய் எழுத்துகளின் ஒலியும் சேர்ந்து உருவானதால் இதற்கு உயிர்மெய் எழுத்து என்று பெயர்.
தமிழ் எழுத்துக்கள் அட்டவணை
தூய தமிழ் வார்த்தைகள்

Tamil Eluthukkal Ethanai Avai Yavai – ஆய்த எழுத்து:

 • இந்த எழுத்தை ஆய்த எழுத்து என்று அழைப்பர்.

உதாரணம்:

 • அஃது, எஃகு.
 • இதில் மூன்று புள்ளிகள் இருப்பதால்  முப்புள்ளி, முப்பாற்புள்ளி என்றும், உயிர் எழுத்து மற்றும் மெய் எழுத்துடன் சேராமல் இருப்பதால் இதனை தனிநிலை எழுத்து என்றும் அழைப்பர்.
 • ஆய்த எழுதும் மற்ற எழுத்துக்களை சார்ந்து வருவதால் இதனையும் சார்பு எழுத்து என்கிறோம்.

(மேலும் இதன் தொடர்ச்சியை அடுத்த பதிவில் காண்போம்)

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>GK  in Tamil