தமிழில் பயின்ற அறிவியல் அறிஞர்கள் பெயர்கள்- Tamil Nadu Scientist in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் அறிவியல் அறிஞர்கள் பெயர்கள் (Tamil Nadu Scientist in Tamil) பற்றி பின்வருமாறு விவரித்துள்ளோம். பொதுநலம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம்.. இந்த பதிவில் தமிழில் பயின்ற அறிவியல் அறிஞர்கள் பெயர்கள் பற்றி படித்து தெரிந்து கொள்வோம். இது போன்ற பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்வதினால் நீங்கள் பொது தேர்வுகளில் கலந்துகொள்ளும் போது பெரிதும் உதவியாக இருக்கும். சரி வாங்க தமிழகத்தை சேர்ந்த அறிவியல் அறிஞர்கள் பெயர்கள் மற்றும் அவர்களை பற்றி சில தகவல்களை இங்கு நாம் படித்தறியலாம் வாங்க.
தமிழ் அறிவியல் அறிஞர்கள் பெயர்கள்:
மயில்சாமி அண்ணாதுரை:
மயில்சாமி அண்ணாதுரை ஜூலை 02, 1958 ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் தமிழ்நாட்டை சேர்ந்த அறிவியலாளர். தற்போது தேசிய கட்டுமான ஆராய்ச்சி மன்றத்தின் தலைவராகவும், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் துணைத்தலைவராகவும் உள்ளார். இந்தப் பொறுப்பை ஏற்கும் முன் இவர் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் இயக்குனராகப் பணிபுரிந்தார். மேலும் முப்பதுக்கும் மேற்பட்ட செயற்கைக் கோள்களை உருவாக்கிய சாதனை இவரைச் சாரும்.
இவரே முதன்முதலில் இந்தியா நிலாவுக்கு ஆய்வுக்கலம் அனுப்பிய சந்திரயான்-1 திட்டத்தின் திட்ட இயக்குனர். இவர் கோயம்புத்தூர் அரசு பொறியியல் கல்லூரியில்[6] தனது பொறியியல் இளங்கலைக் கல்வியைக் கற்றார். கோயம்புத்தூர் பூ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரியில் பொறியியலில் முதுநிலைப் பட்டம் பெற்றார். அண்ணாதுரை இதுவரை ஐந்து முனைவர் பட்டங்களைப்பெற்றுள்ளார்.
கைலாசவடிவு சிவன்:
கைலாசவடிவு சிவன் என்பவர் இந்திய விண்வெளித் துறையின் அறிவியலாளர் ஆவார். விக்ரம் சாராபாய் விண்வெளி நடுவத்தின் இயக்குநராக 2015 ஆம் ஆண்டு ஜூன் முதல் நாளிலிருந்து பொறுப்பேற்றுள்ளார். அதேபோல் பி .எஸ். எல். வி திட்டத்தில் முக்கியப் பணி ஆற்றினார். கடந்த 33 ஆண்டுகளாக இந்தியாவிலிருந்து ஏவப்பட்ட செயற்கைக் கோள்களில் சிவனின் பங்களிப்பு பெரிதும் இருந்தது. ராக்கட்டின் அமைப்பு தொடர்பாக சித்தாரா என்னும் பெயரில் மென்பொருளை உருவாக்கினார். கைலாசவடிவு சிவன் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவராக 2018 சனவரி 12 ஆம் தேதியில் பதவியேற்றார்.
தாமசு எசு. அனந்தராமன்:
தாமசு எசு. அனந்தராமன் கணினி என்பவர் கணினி புள்ளி விவர நிபுணர் ஆவார். இவர் என்பி- முழுமையான சிக்கல்களுக்கான பேய்சியன் அனுமான அணுகுமுறைகளில் நிபுணத்துவம் பெற்றவர். 1985 ஆண்டு முதல் 1990 ஆண்டு வரை கார்னிகி மெல்லன் பல்கலைக்கழக பெங்-ஹிசியுங் ஹுசு உடன் இணைந்து சதுரங்கம் விளையாடும் கணினிகளில் சிப் சோதனை மற்றும் ஆழ்ந்த சிந்தனை ஆகியவற்றில் மேற்கொண்ட ஆய்விற்காக மிகவும் பிரபலமானவர். இந்த ஆய்வுகளினால் இவருக்கு 1990ஆம் ஆண்டு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. இவரது முனைவர் பட்ட ஆய்வின் தலைப்பு, “கணினி சதுரங்கத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட குறைந்தபட்ச-அதிகபட்ச தேடலின் புள்ளிவிவர ஆய்வு” என்பதாகும்.
ராகவன் அருணாச்சலம்:
ராகவன் அருணாச்சலம் (V. S. R. Arunachalam), என்பவர் பத்மபூஷண், பத்மவிபூஷண் ஆகிய விருதுகளைப் பெற்ற இந்திய அறிவியலாளர் ஆவார். இவர் பாபா அணு ஆராய்ச்சிக் கழகத்திலும், தேசிய வானூர்தி ஆய்வகத்திலும், இராணுவ ஆராய்ச்சி நிறுவனத்திலும் பணிபுரிந்தார். இந்திய அரசின் இராணுவ ஆராய்ச்சித் துறையில் ஆலோசகராகப் பணியாற்றியவர்.
எலகு வி. எலகுப்பிள்ளை:
எலகு வி. எலகுப்பிள்ளை (Elagu V. Elaguppillai) என்பவர் இலங்கைத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த கனடிய அணு விஞ்ஞானி, மருத்துவ ஆராய்ச்சியாளர் மற்றும் தொழிலதிபர் ஆவார்.
அறிவியல் அறிஞர்கள் பெயர்கள் மற்றும் கண்டுபிடிப்புகள்..! |
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |