தமிழ்த்தென்றல் என அழைக்கப்படுபவர் யார்? | Tamil Thendral Yaar

Tamil Thendral Yaar

தமிழ்த்தென்றல் என்று அழைக்கப்படுபவர்  யார்?

நண்பர்களுக்கு வணக்கம் இன்றைய பொது அறிவு சார்ந்த பகுதியில் தமிழ்த்தென்றால் யார் என்று தெரிந்துக்கொள்ளலாம். பொது அறிவு பிரிவில் உள்ள அனைத்து விஷயங்களும் அனைவர்க்கும் தெரிந்திருக்கும் என்று சொல்லிட முடியாது. தெரியாத விஷத்தை தெரிந்துக்கொள்வதில் அதிக ஆர்வம் நம்மிடம் இருக்க வேண்டும். பொது அறிவு கேள்வியானது பள்ளி மாணவர்கள் முதல் போட்டி தேர்வுகளுக்குத் தயாராகி கொண்டிருக்கும் அனைவர்க்கும் மிகவும் பயன்பட கூடிய ஒன்றுதான். இந்த பதிவில் தமிழ்த்தென்றல் என்று அழைக்கப்படுபவர் யார் என்று கீழ் காண்போம்..

இந்தியாவின் பறவை மனிதர் யார்?

தமிழ்த்தென்றல் என அழைக்கப்படுபவர் யார்?

விடை: திரு வி.கல்யாண சுந்தர முதலியார். இதன் சுருக்கம் தான் திரு வி.க என்பதாகும். 

திரு வி.க குடும்பம்:

இவர் 1883 ஆம் ஆண்டு துள்ளம் என்ற ஊரில் பிறந்தார். இவருடைய தந்தை பெயர் விருத்தாசலம். இவருக்கு இரண்டு மனைவி. முதல் மனைவி இறந்த பிறகு இரண்டாம் மனைவியான சின்னம்மாள் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு நான்கு ஆண் குழந்தைகள், நான்கு பெண் குழந்தைகள் பிறந்தனர். இவற்றில் ஆறாவது குழந்தை தான் திரு வி.க அவர்கள்.

கல்வி:

துள்ளம் என்ற ஊரில் பிறந்த இவர் அந்த ஊரில் பள்ளிகள் இல்லாத காரணத்தால் திரு வி.க வின் ஆரம்ப கல்வியை இவருடைய தந்தையே கற்றுக்கொடுத்தார். அதன் பிறகு இவருடைய குடும்பம் சென்னைக்கு குடியேறினார்கள். சென்னையில் இவரது கல்வி தொடர்ந்தது. சிறிது நாளிலே குடும்ப சூழல் காரணமாக பத்தாம் வகுப்போடு கல்வி இவருக்கு நின்றுவிட்டது. ஆனால் இவரது முயற்சியால் ஆங்கிலம் தேவானந்தம் போன்ற பல துறைகளில் இவர் கற்றுத்தேர்ந்தார்.

தொழில்:

கல்வி கற்பது ஒரு புறம் இருந்தாலும் வாழ்க்கையை வாழ்வதற்கு கையில் ஒரு தொழில் இருக்க வேண்டும் என்று நினைத்தார். அதனால் இவர் ஸ்பென்சர் நிறுவனத்தில் சிறிது காலம் பணியாற்றி வந்தார். இவரிடம் இருந்த தேசிய பற்று உணர்வு அங்கிருந்த வெள்ளை முதலாளிக்கு பிடிக்காமல் இவருக்கு இந்த வேலையும் கைகொடுக்கவில்லை.

சொல்லின் செல்வர் யார்?

 

தன்னுடைய வேலை போன பிறகு தனது தமையனார் நடத்திய அச்சகம் வாயிலாக பெரிய புராணக் குறிப்புரை எழுதி வெளியிட்டார். திருமந்திரத்துக்கும் விளக்கம் எழுதி வெளியிட்டார். பிறகு சில காலம் வெஸ்லியன் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். காங்கிரஸ் இயக்கத்தில் இவர் தம்மை இணைத்துகொண்டு பணியாற்றத் தொடங்கினார். ‘தேசபக்தன்’ எனும் பத்திரிகையில் ஆசிரியப் பொறுப்பை ஏற்று நடத்தினார். பிறகு அதிலிருந்தும் வெளியேறி “நவசக்தி” பத்திரிகையின் ஆசிரியரானார். 1941-யில் இந்த பத்திரிகையும் நின்று போயிற்று. 1917-யில் காங்கிரசில் தீவிரமாக ஈடுபட்ட திரு வி.க. 1934 வரை அதில் முழுமையாக பங்கேற்றார்.

இறப்பு:

இத்தகைய பெயரும் புகழும் உடைய திரு வி.க. சொந்தமாக வீடு இல்லாமல், வங்கிக் கணக்கு இன்றி, காலிற்கு அணிய காலனி இல்லாமல், எளிய கதராடையில் நான்கு முழ வேட்டி, சட்டை, அல்லது சில சமயங்களில் மேல் துண்டு மட்டும் என்று இப்படி மிக எளியவராகவே இருந்தார். இறுதி நாட்களில் சர்க்கரை வியாதியால் கண் பார்வை இழந்து முதுமை வாட்ட தனது எழுபதாவது வயதில் ஒரு வாடகை வீட்டில் 1953 செப்டம்பர் 17-யில் இறந்து விட்டார்.

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>GK  in Tamil