தமிழ்விடு தூது எந்த இலக்கிய வகை?

Tamil Vidu Thoothu Entha Ilakkiyam

தமிழ்விடு தூது எந்த இலக்கிய வகை? | Tamil Vidu Thoothu Entha Ilakkiyam

தமிழ்விடு தூது என்று அழைக்கப்படும் நூல், மதுரையில் எழுந்தருளி உள்ள சோமசுந்தரக் கடவுளிடம் ஒரு பெண் தன் காதல் துன்பத்தைக் கூறித் தமிழ்மொழியைத் தூது அனுப்பியதாக அமைந்துள்ளது. இந்த தமிழ்விடு தூது நூலில் தூது பெறுவோர் கடவுள். அதாவது சோமசுந்தரக் கடவுள். தூது விடுவோர் ஒரு பெண். தூது செல்லும் பொருள் தமிழ்மொழி. இந்த நூல் 268 கண்ணிகளைக் கொண்டுள்ளது. இந்த நூலை இயற்றிய ஆசிரியரின் பெயர் தெரியவில்லை. சரி இந்த பதிவில் தமிழ்விடு தூது எந்த இலக்கிய வகையை சேர்த்தது என்பதை பற்றி இந்த பதிவில் நாம் படித்து தெரிந்து கொள்வோம். இது போன்ற விஷயங்களை நாம் தெரிந்து கொள்வதினால் பொது தேர்வுகளில் கலந்துகொள்ளும் போது அவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

தமிழ்விடு தூது எந்த இலக்கிய வகை?

1. தமிழ் சிற்றிலக்கிய வகைகளுள் தூது என்பதும் ஒருவகை இலக்கியமாகும். இது வாயில் இலக்கியம், சந்து இலக்கியம் என்று வேறுு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று ஆகும்.

2. ஆகவே தமிழ்விடு தூது சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது ஆகும்.

3. தமிழ்விடு தூது வில் இடம்பெறும் கண்ணி என்பதன் பொருள் இரண்டு கண்களை போல் இரண்டு பூக்களைக் கொண்டு தொடுக்கப்படும் மாலைக்கு கன்னி என்று பொருள்படும்.

4. வாயில் இலக்கியம் மற்றும் சந்து இலக்கியம் என்று அழைக்கப்படும் நூல் தமிழ்விடு தூது.

5. தூது இலக்கியத்திற்கு மற்றொரு பெயர் வாயில் இலக்கியம், சந்து இலக்கியம்.

6. தமிழ்விடு தூது வை முதல் முதலில் பதிப்பித்தவர் 1930 ஆம் ஆண்டு உ.வே.சா பதிப்பித்தார்.

7. இந்த தமிழ்விடு தூது நூலில் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்ற மூன்று பால்களுடன் ஆண்பால், பெண்பால் என்ற இரண்டு பால்களும் சேர்ந்து உனக்கு ஐந்து பால்கள் உண்டு என்று புகழ்கின்றாள்.

இதையும் கிளிக் செய்யுங்கள் 👉👉👉 தமிழ் இலக்கிய வினா விடைகள்

தமிழ்விடு  நூல் கூறும் பொருள்கள்

தூது செல்லும் தமிழ் மொழியின் பெருமைகளைக் கூறுதல். பிற பொருட்களைத் தூதாக அனுப்பாமைக்குரிய காரணங்களைத் தலைவி தூதுப் பொருளிடம் கூறுதல். தூது பெறும் தலைவன் ஆகிய சோமசுந்தரக் கடவுளைப் புகழ்ந்து கூறுதல்.

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>GK  in Tamil