தமிழ்விடு தூது ஆசிரியர்
தமிழ் விடு தூது என்பது கலிவெண்பா வடிவில் எழுதப்பட்ட ஒரு தூதுவகை தமிழ்ச் சிற்றிலக்கியம் ஆகும். இது மதுரையில் கோவில் கொண்டிருந்த சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி தன் காதலை கூறி வருமாறு தமிழ் மொழியை தூது விடுவதாக அமைந்துள்ளது. ஆனால் இந்த நூலை இயற்றிய ஆசிரியர் பெயர் தெரியவில்லை. இதனை 1930 ஆம் ஆண்டு உ.வே.சாமிநாதையர் பதிப்பித்தார். அரசர்களின் காலத்தில் அரசர்கள் தனது காதலை தூதுவின் மூலம் செய்திகளை தெரிவித்தார்கள். சங்ககாலத்தில் தமிழ் மொழியை தூதாக அனுப்பிய நூல் தான் தமிழ் விடு தூது ஆகும். தூது என்பது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று. இந்த தூது இலக்கியத்தை வாயில் இலக்கியம் என்றும், சந்து இலக்கியம் என்றும் அழைப்பார்கள். தலைவி தலைவனிடம் தன்னுடைய அன்பை உணர்த்தி அதற்கு பரிசா மாலை வாங்கி வர சொல்லி அதற்கு பதிலாக அன்னம், மயில், குயில், கிளி, வண்டு, நெஞ்சம், முகில், தென்றல், மான், தமிழ் ஆகிய பத்தில் ஏதாவது ஒன்றை தூதாக அனுப்புவது தான் தூது இலக்கியம் ஆகும். தலைவி தன்னுடைய அன்பை தூது அனுப்பும் பொழுது தூதாக எதை அனுப்புறங்கலோ அதனுடைய பெருமைகளை பேசி அதன் பிறகு செய்தி சொல்வது தான் தூது இலக்கியம் ஆகும்.
தமிழ்விடு தூது எந்த இலக்கிய வகை |
தமிழ்விடு தூது கண்ணிகள்:
- இந்த நூலானது 268 கண்ணிகைகளைக் கொண்டுள்ளது.
- கண்ணிகை என்பது இரண்டு கண்கள் மாதிரி இரண்டு பூக்கள் வைத்து தொடுக்கப்படும் மாலைக்கு பெயர்தான் கண்ணி.
- அதே மாதிரி தமிழ் மொழியில் இரண்டு இரண்டு அடிகளில் எதுகையாக தொடங்கப்படும் செய்திதான் கண்ணி.
- எதுகை என்றால் இரண்டாவது எழுத்து ஒன்றி வந்தால் அது எதுகை. முதல் எழுத்து ஒன்றி வந்தால் அது மோனை.
- இது கலிவெண்பாவால் பாடப்பெறும் சிற்றிலக்கியம் தான் தூது இலக்கியம் ஆகும்.
தூது வந்துள்ள நூல்:
- தூது வந்த நூல் தேவாரம், திருவாய்மொழி, திருவாசகம், போன்ற தூது பாடல்களிலும் சிற்றின்பப் பகுதியமைந்து தூது விடுக்கும் நூல் ஆகும்.
- மக்களைப் பாட்டுடைய தலைவர்ராக கொண்ட நூல் ஆகும்.
- தெய்வத்தை பாட்டுடைய தலைவனாக கொண்ட நூல் ஆகும்.
- நூலின் பொருட்சுவையும், சொற்சுவையும் ஆசிரியர் புலமை திறத்தை விளக்குகின்றது.
தமிழ் விடு தூது கூறும் தமிழின் சிறப்புகள்:
- தூது அனுப்புவோர் தூதுப் பொருளிடம் அதன் பெருமைகளை கூறித் தூது செல்ல வேண்டுவதை, எல்லாத் தூது நூல்களிலும் காணலாம்.
- இந்த நூலில் தூது விடும் தலைவி, தூது பொருளான தமிழை பல்வேறு பெருமைகளுடன் புகழ்ந்து கூறுகிறாள்.
- தமிழை புகழ காரணம் சிவபெருமான், தடாதகைப் பிராட்டியார், விநாயகர், முருகன், திருநாவுக்கரசர், சுந்தரர், தொல்காப்பியர், மாணிக்கவாசகர், திருமூலர், கபிலர், பரணர், நக்கீரர், போன்ற கல்வி வடிவில் எல்லாருமாக நீ இருக்கின்றாய் என்று தமிழை புகழ்கின்றாள்.
- தமிழை கனியாகவும் உருவகம் செய்தால்.
- அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்ற மூன்று பால்களுடன் ஆண்பால், பெண்பால், சேர்த்து உனக்கு ஐந்துப்பால் உண்டு என்று புகழ்கின்றாள்.
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |