தமிழகத்தில் மாங்குரோவ் காடுகள் உள்ள இடம் பெயர் என்ன?
வணக்கம் நண்பர்களே. இந்த பதிவில் தமிழகத்தில் மாங்குரோவ் காடுகள் உள்ள இடம்? எது என்பதை தெரிந்துக்கொள்வோம். மலாய், எசுப்பானியம், போர்ச், சுவிசு மொழிகள் இணைந்த சிறுமரங்கள் எனப் பொருள்படும் மாங்கு என்ற சொல்லில் இருந்தே மாங்குரோவ் காடுகள் என்ற பெயர் ஏற்பட்டது. இது மாதிரியான பல பொது அறிவு கேள்விகள் படிக்கும் மாணவர்கள் முதல் போட்டி தேர்வுக்கு தயாராகும் அனைவருக்கும் மிகவும் பயன்படும். இது போன்ற பொது அறிவு சார்ந்த வினா விடைகளை தெரிந்து கொள்ள GK in Tamil இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள். சரி வாங்க நண்பர்களே தமிழகத்தில் மாங்குரோவ் காடுகள் உள்ள இடங்களை விரிவாக படித்து தெரிந்துக்கொள்ளுவோம்..!
இந்தியாவின் ஆரஞ்சு நகரம் எது? |
தமிழகத்தில் மாங்குரோவ் காடுகள் உள்ள இடம் பெயர்?
விடை: பிச்சாவரம்
பித்தர்புரம் என்ற பெயரே பிச்சாவரம் என்ற பெயராகி விட்டது. பிச்சாவரம் தமிழ்நாட்டில் சிதம்பரத்துக்கு அருகே வங்கக் கடலை ஒட்டிய ஒரு பகுதி.
பிச்சாவரம் காட்டுப்பகுதியின் பரப்பளவு 2800 ஏக்கர் அளவிற்கு உள்ளன. இந்த பகுதியில் சிறு சிறு தீவுகள் காணப்படுகிறது. இந்த காடுகளுக்கு மொத்தம் 41 குடும்பங்களைச் சேர்ந்த 177 வகையான (சிற்றினங்கள்) பறவைகள் வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மேலும் உள்ள மாங்குரோவ் காடுகள்:
இதில் 70-க்கும் மேற்பட்ட தாவர இனங்கள் உள்ளது .மேலும் இது பிராணவாயு குறைவாக இருக்கும் நிலத்தில் வளரும் தன்மை கொண்டவை .
பிதர்கனிகா சதுப்பு நிலங்கள் | ஒடிஷா |
சுந்தர்பன் காடுகள் | மேற்கு வங்கம் |
கோதாவரி, கிருஷ்ணா சதுப்பு காடுகள் | ஆந்திர பிரதேசம் |
பரடாங் தீவு சதுப்பு நிலங்கள் | அந்தமான் |
இந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் நகரம் எது? |
பிச்சாவரம் காட்டின் சிறப்புகள்:
பிச்சாவரம் காடு கடலை ஒட்டி அமைந்திருக்கிறது. வருடம் முழுவதும் ஈரப்பதத்துடன் இருக்கக்கூடிய நிலம். இந்த மரத்தினுடைய காய்கள் முருங்கைக்காய் போல்நீண்ட வாக்கில் இருக்கும். மரத்தின் காய்கள் சேற்றில் விழுந்து செடியாகி, சில ஆண்டுகளில் மரமாக வளர்ந்து விடும். பழுத்த இலைகள் நீரில் விழுந்து அழுகி, உணவாகக் கிடைப்பதால், இங்கு மீன், இறால்கள் அதிகமாக கிடைக்கும். முக்கியமாக பிச்சாவரத்தில் நவம்பர் முதல் ஜனவரி வரை பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும்.
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |