இந்தியாவின் முதல் பெண் கவர்னர் யார்? | Tamilakathin Muthal Pen Governor Yaar

Tamilakathin Muthal Pen Governor Yaar

இந்தியா நாட்டின் முதல் பெண் கவர்னர் யார்?

வணக்கம் பொதுநலம் வாசகர்களே..! இந்த பதிவில் நாட்டின் முதல் பெண் கவர்னர் யார்? என்பதை தெரிந்துக்கொள்ளுவோம். நாட்டினை ஆள்வது என்பது சாதாரணமான விஷயம் இல்லை. அதிலும் நாட்டின் முதல் பெண் கவர்னராக இருந்தது பெருமைக்குரிய விஷயம். இது மாதிரியான பல பொது அறிவு கேள்விகள் படிக்கும் மாணவர்கள் முதல் போட்டி தேர்வுக்கு தயாராகும் அனைவருக்கும் மிகவும் பயன்படும். இது போன்ற பொது அறிவு சார்ந்த வினா விடைகளை தெரிந்து கொள்ள GK in Tamil இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள். சரி வாங்க நண்பர்களே நாட்டின் முதல் பெண் கவர்னர் யார்? என்பதை விரிவாக படித்து தெரிந்துக்கொள்ளுவோம்..!

இந்தியாவின் முதல் தலைமை தேர்தல் அதிகாரி

Tamilakathin Muthal Pen Governor Yaar:

நமது இந்திய திருநாட்டில் ஒரே நேரத்தில் பல பெண் ஆளுநர்கள் அதிகமாக பதவியில் இருப்பது இந்த முறைத்தான். இந்தியாவில் நீண்ட காலம் ஆளுநராக இருந்த பெண், பத்மஜா நாயுடு. 1956 நவம்பர் முதல் 1976 மே வரை மேற்கு வங்காள ஆளுநராக இவர் இருந்திருக்கிறார்.

நாட்டின் முதல் பெண் கவர்னர் யார்?

இந்திய நாட்டின் முதல் முதலில் பெண் கவர்னராக இருந்தவர்

விடை: சரோஜினி நாயுடு

இந்தியாவின் நைட்டிங்கேல் என்று அனைவராலும் அழைக்கப்பட்ட சுதந்திர இந்தியாவின் முதல் பெண் ஆளுநர் சரோஜினி நாயுடு. இந்திய நாடானது சுதந்திரம் அடைந்த 1947 ஆகஸ்ட் 15 அன்று உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஆளுநராக சரோஜினி நாயுடு அவர்கள் நியமிக்கப்பட்டார்.

சரோஜினி நாயுடு அவர்களுக்கு அடுத்து இதுவரை தமிழிசையோடு சேர்த்து மொத்தம் 24 பெண்கள் மட்டுமே மாநில ஆளுநர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

தமிழிசைக்கு முன்பு தமிழகத்தைச் சேர்ந்த ஜோதி வெங்கடாச்சலம் என்பவர் 1977-ம் ஆண்டு அக்டோபர் முதல் 1982 அக்டோபர் வரை கேரள ஆளுநராக இருந்திருக்கிறார். ஜோதி வெங்கடாச்சலம் பர்மாவில்பிறந்தார். இதற்கு முன்பு தமிழ்நாட்டில் எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். இவரின் தேசிய கட்சி காங்கிரஸ் ஆகும். இவருக்கு பிறகு 37 ஆண்டுகள் கழித்து தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பெண் ஆளுநர் ஆகியிருக்கிறார்.

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil