தமிழ்நாட்டின் நுழைவாயில் என்று அழைக்கப்படுவது எது?
நண்பர்களுக்கு வணக்கம் இந்த பதிவில் பொது அறிவு சார்ந்த விஷயமான தமிழ்நாட்டின் நுழைவுவாயில் எது? என்று தெரிந்துக்கொள்ள போகிறோம். நமது அன்றாட வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமான ஒன்று பொது அறிவு விஷயம் தான். பள்ளி பயிலும் மாணவர்கள் முதல் வேலைக்கு செல்பவர்கள், அரசு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு மிகவும் தேவைப்படுவது பொது அறிவு பற்றிய தகவல்கள் தான். தொடர்ந்து நமது பதிவில் பலவகையான பொது அறிவு (GK in Tamil) சார்ந்த விஷயங்களை பதிவு செய்து வருகின்றோம். அதனை தொடர்ந்து இந்த பதிவில் தமிழ்நாட்டின் நுழைவுவாயில் எது என்று தெரிந்துக்கொள்ளுவோம்..
ஆஸ்திரேலியா நாட்டின் தலைநகரம் எது? |
தமிழ்நாட்டின் நுழைவாயில் என்று அழைக்கப்படும் நகரம் எது?:
விடை: தமிழ்நாட்டின் நுழைவுவாயில் என்று அழைக்கப்படுவது “தூத்துக்குடி மாவட்டம்”.
தூத்துக்குடி இட சிறப்புகள்:
அய்யனார் சுணை | ![]() |
எட்டையாபுரம் | ![]() |
கழுகுமலை வைணவ கோவில் | ![]() |
குலசேகரபட்டிணம் | ![]() |
பனிமயமாதா ஆலயம் | ![]() |
ஆதிச்சநல்லூர் | ![]() |
நவ கைலாயம் | ![]() |
பாஞ்சாலங்குறிச்சி | ![]() |
இந்தியாவின் மிகப்பெரிய மாவட்டம் பெயர் என்ன? |
தூத்துக்குடி மாவட்ட சிறப்பு:
- தூத்துக்குடி மாவட்டமானது இந்தியாவின் தென் மாநிலமான தமிழகத்திலுள்ள ஒரு நகரமும் அதே பெயருடைய மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். இது ஒரு துறைமுக நகரத்தை சேர்ந்ததாகும். தூத்துக்குடி மாவட்டம் தமிழகத்தில் 10-வது மாநகராட்சி.
- தூத்துக்குடியில் தயாரிக்கும் உப்பு ஆசிய கண்டத்திலே மிக சிறந்த உப்பாகும்.
- தூத்துக்குடியில் மெக்ரூன் எனப்படும் இனிப்பு மிகவும் சுவையானது. அங்கு பேக்கரிகள் அதிகளவு காணப்படுகிறது.
- புரோட்டாவிற்கு பெயர் பெற்ற விருதுநகருக்கு அடுத்து தூத்துக்குடி இரண்டாமிடத்தில் இருக்கிறது.
- தூத்துக்குடியில் உள்ள பரதவர்கள் அங்குள்ள கடலில் ஆண்டுக்கு ஒருமுறை முத்துக்குளிக்கும் வழக்கம் இருந்திருக்கிறது.
- கி.பி. 7ம் நூற்றாண்டு (ம) 9ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னனின் அரசியல் இங்கு துறைமுகம் நிறுவப்பட்டது.
- கடல்சார் துறைமுகமாக தூத்துக்குடி உருவானது பயணிகளையும், சாகசங்களையும், இறுதியில் காலனித்துவவாதிகளையும் ஈர்த்தது.
- தூத்துக்குடி மாவட்டம் பல நூற்றாண்டுகளாக கடல் வழி வாணிபத்துக்கும் முத்துக் குளிப்புக்கும் சிறந்து விளங்குகிறது.
தூத்துக்குடிக்கு வழங்கும் வேறு பெயர்கள்:
தூத்துக்குடி மாவட்டத்திற்கு வேறு சிறப்பு பெயர்கள் உள்ளன, அவை:
- திருமந்திர நகர்
- முத்து நகர்
பெயர் வர காரணம்:
- திருமந்திர நகர்: ராமன் திருமந்திரங்களை உச்சரித்த இடம் என்பதால் திருமந்திர நகர் என்று பெயர் வந்தது.
- முத்து நகர்: முத்துக்கள் அதிகம் கிடைக்கும் என்பதால் முத்துநகர் என்று பெயர் வந்தது
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |