தமிழகத்தின் அன்னிபெசன்ட் யார்? | Tamilnattin Annie Besant Yaar

Advertisement

தமிழ்நாட்டின் அன்னிபெசன்ட் யார்? | Tamilnadu Annipesant

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். தமிழகத்தின் அன்னிபெசன்ட் யார்.? (tamilnattin annie besant yaar) என்பதை இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம். தமிழ்நாட்டில் புகழ்பெற்றவர்கள் பலர் இருக்கிறார்கள். புகழ்பெற்ற ஒவ்வொருவருக்குமே ஒவ்வொரு மகுட பெயரும் வழங்கியுள்ளார்கள். நாம் இன்றைய பொது அறிவு பதிவில் தமிழ்நாட்டின் அன்னிபெசன்ட் என்று புகழப்பட்டவர் யார் என்று தெரிந்துக்கொள்ளலாம். இது மாதிரியான பொது அறிவு சார்ந்த கேள்விகளை எங்கள் பதிவில் தினமும் பதிவிட்டு வருகிறோம். படித்து பயன் பெறுங்கள்..

பதவியை ராஜினாமா செய்த முதல் இந்திய பிரதமர் யார்?

தமிழகத்தின் அன்னிபெசன்ட் யார்?

விடை: தமிழகத்தின் அன்னிபெசன்ட் என்று அழைக்கப்படுபவர்  ராமாமிர்தம் அம்மையார் அவர்கள். 

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் பிறப்பு:

ராமாமிர்தம் திருவாரூர் மாவட்டம் கீரனூர் என்ற இடத்திற்கு அருகில் உள்ள “பாலூர்” என்ற கிராமத்தில் பிறந்தார். இவர் வளர்ந்தது மூவலூர் கிராமம் இதனால் இவர் மூவலூர் இராமாமிர்தம் என்று அழைக்கப்படுகிறார்.

இந்தியாவின் முதல் பிரதமர் யார்?

ஆற்றிய பங்குகள்:

இவர் தமிழ்நாட்டினை சேர்ந்த பெண்மணி. இவர் ஒரு சமூக சீர்திருத்தவாதி, எழுத்தாளர், முன்னாள் தேவதாசி ஒழிப்பு இயக்கம் மற்றும் திராவிட இயக்கத்தைச் சேர்ந்த அரசியல் செயற்பாட்டாளர்.

சென்னை மாகாணத்தில் தேவதாசி முறையை ஒழிப்பதற்கு மிகவும் அரும்பாடுபட்டவர். 1930-ல் சென்னை மாகாணத்தில் தேவதாசிமுறை ஒழிப்பை சட்டமாகக் கொண்டுவர டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி முயன்றபோது அவருக்குத் துணை நின்றார்.

நினைவு:

கலைஞர் திரு.மு.கருணாநிதி தலைமையில் 1989-ஆம் ஆண்டு தமிழக அரசு 8-ம் வகுப்பு வரை படித்த இளம் பெண்களின் திருமண நிதி தொகை ரூபாய் 5000-த்தை 15000 பெண்களுக்கு வழங்க முடிவு செய்தார்கள். இந்த திட்டத்திற்கு அம்மையாரின் நினைவாக மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித்திட்டம் என்று பெயரிடப்பட்டது.

ராமாமிர்தம் அம்மையார் முதல் போராட்டத்தை தொடங்கிய ஆண்டு எது?

விடை: 1938

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil
Advertisement