தமிழ்நாட்டின் முதல் நகராட்சி எது? | Tamilnattin Muthal Nagaratchi in Tamil

Tamilnattin Muthal Nagaratchi in Tamil

தமிழ்நாட்டின் முதல் நகராட்சி | First Municipality of Tamil Nadu

நண்பர்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம்..! இன்றைய பொது அறிவு சார்ந்த பகுதியில் தமிழ்நாட்டின் முதல் நகராட்சி எது என்று தெரிந்துக்கொள்ளலாம். போட்டி தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருக்கும் அனைவரும் பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்துகொள்வது மிக அவசியம். சரி வாங்க இந்த பதிவில் தமிழ்நாட்டின் முதல் நகராட்சி எது என்று தெரிந்துக்கொள்ள போகிறோம் வாங்க..!

இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் யார்?

தமிழ்நாட்டின் முதல் நகராட்சி எது?:

விடை: தமிழ்நாட்டின் முதல் நகராட்சி இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜாபேட்டை நகராட்சியாகும்.

உருவான கதை:

ஆற்காடு நவாப்களின் கட்டுப்பாட்டில் இருந்து, இந்த வாலாஜாபேட்டை ஆங்கிலேயர் வசமானது. 1866-ஆம் ஆண்டு நவம்பர் 30-ஆம் தேதி வாலாஜாபேட்டை நகராட்சியை உருவாக்கினர்.

இந்தியாவின் முதல் பெண் சபாநாயகர் யார்?

நூற்றாண்டு விழா:

வாலாஜாபேட்டை நகராட்சிக்கு 1960-ஆம் ஆண்டு நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. அந்த நூற்றாண்டு விழாவில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா உட்பட பல பெருந்தலைவர்கள் வருகை தந்து விழாவை சிறப்பித்து வைத்தனர். 2020-ஆம் ஆண்டு நவம்பர் 30-ஆம் தேதி 154-ம் ஆண்டை தொடங்கியுள்ளது இந்நகராட்சி.

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil