தாமிரபரணியின் இன்னொரு பெயர்

Advertisement

தாமிரபரணி ஆற்றின் வேறு பெயர்

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் தாமிரபரணி ஆற்றின் வேறு பெயர் (Thamirabarani River Another Name in Tamil) என்ன என்பதை தெரிந்துகொள்ளலாம் வாங்க. தாமிரபரணி ஆறு பற்றி அறியாதவர்கள் என்று யாருமே இருக்க முடியாது. அந்த அளவிற்கு சிறப்பு வாய்ந்தது தாமிரபரணி ஆறு. தாமிரபரணி ஆற்றிற்கு காரையாறு, சேர்வலாறு உள்ளிட்ட பல துணியாறுகள் உள்ளது. தாமிரபரணி ஆறு ஆனது, நெல்லை மாவட்டத்தில் உள்ள பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பழையகாயலில் சங்குமுகம் அருகே கடலில் கலக்கிறது. குறிப்பாக சொல்லப்போனால், நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது.

இவ்வாறாக, பல சிறப்பினை பெற்ற தாமிரபரணி ஆற்றிக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் என்ன என்று உங்களுக்கு தெரியுமா..? தெரியவில்லை என்றால் வாருங்கள் தெரிந்து கொள்ளலாம்.

தாமிரபரணி ஆற்றின் கிளை ஆறுகள் என்ன தெரியுமா?

Thamirabarani River Another Name in Tamil:

தாமிரபரணியின் இன்னொரு பெயர்

 தாமிரபரணி ஆற்றின் வேறு பெயர் பொருநை அல்லது தன்பொருனை ஆகும். அக்காலம் முதலே தாமிரபரணி ஆற்றினை பெரும்பாலும் பொருநை என்று தான் கூறி வந்தார்கள். பொருநை ஆறானது தாமிரபரணி ஆறு என பெயர் மாற்றம் செய்யப்பட்டதுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. தாமிரபரணி ஆறு தோன்றும் இடத்தில் இருந்து அது கடலில் கடக்கும் வரை ஆற்றின் நீளம் 125 கி.மீ. ஆகும். தாமிரபரணி ஆறு பொதிகை மலையிலிருந்து உருவாகி பாண தீர்த்தம், கலியாண தீர்த்தம், அகத்தியர் தீர்த்தம் முதலிய புண்ணிய தீர்த்தங்களைக் கடந்து பாபநாசம் என்ற ஊர் வழியாக வருகிறது.

வடமொழியில் தாமிர பரணி என்பதை பின்வருமாறு அர்த்தத்தில் கூறியுள்ளார்கள். அதாவது, ‘தாம்ர’ என்றால் செம்பு அல்லது சிவப்பு என்று பொருள்படும். ‘பர்ண’ என்றால் இலை என்று பொருள்படும். அதாவது, செம்பு நிற ஆறு அல்லது சிவப்பு இலைகளுடனான ஆறு என்று இருக்கலாம். அசோகர் கால கல்வெட்டுகளில் தாப்ரபோனி தாம்ரபரணி மற்றும் தாம்பபாணி என்ற பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தது என்று கூறுகிறார்கள்.

மணிமுத்தாறு அணை எந்த நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது?

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil
Advertisement