தந்தி அனுப்புவதை கண்டுபிடித்தவர் யார்..?
ஹலோ அன்பான நேயர்களே… தினமும் இந்த பதிவின் மூலம் ஏதவது ஒரு சிறந்த மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொண்டு வருகிறீர்கள்… அந்த வகையில் இன்று நம் பதிவில் தமிழில் தந்தி அனுப்புவதை யார் கண்டுபிடித்தது என்பதை பற்றி தெளிவாக தெரிந்து கொள்ளலாம். தினமும் எதாவது ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கும் உங்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். வாங்க நண்பர்களே இந்த பதிவை படித்து தெரிந்து கொள்ளலாம்.
இதையும் கிளிக் செய்து பாருங்கள் ⇒ ரயிலை கண்டுபிடித்தவர் யார்
தந்தி அனுப்புவதை கண்டுபிடித்தவர் யார்..?
இந்த தந்தி அனுப்பும் கருவியை 1837 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த சாமுவெல் மோர்சு என்பவர் கண்டுபிடித்தார். தந்தி எனப்படுவது ஓரிடத்திலிருந்து தொலைவில் இருக்கும் வேறு ஒரு இடத்திற்கு செய்திகளை அனுப்புவதற்காக பயன்படுத்தப்பட்ட கருவி ஆகும். 1792 ஆண்டில் ஐரோப்பாவில் தந்தி முறைகள் தீப்பந்தங்கள் மூலமாகவும், கொடிகள் மூலமாகவும் பயன்பட்டு வந்தன. இந்த கருவிகள் பார்வை கோட்டில் இருக்கும் பெறுநருக்கு குறுஞ்செய்திகள் அனுப்புவதற்காக பயன்படுத்தபட்டன.
சாமுவெல் மோர்சு என்பவர் தான் முதன் முதலில் வெற்றிகரமாக மின்சாரப் பதிவு மூலமாக தந்தி அனுப்புவதை கண்டுபிடித்தார். 1846 ஆம் ஆண்டு எலெக்ட்ரிக் டெலிகிராஃப் என்ற நிறுவனம் பொதுமக்களுக்காக தந்தி அனுப்பும் நிறுவனத்தை தொடங்கியது. அதேபோல, 1850 ஆம் ஆண்டு இந்தியாவில் மின்சாரத் தந்தி அனுப்பும் நிறுவனம் ஒன்றை நிறுவியது.
இந்தியாவில் தந்தி அனுப்பும் சேவை பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் பயன்பாட்டுக்காக 1851 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டது. அதேபோல் இந்தியாவில் 1902 ஆம் ஆண்டில் முதல் கம்பி இல்லா தந்தி சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சேவை இந்திய அஞ்சல் துறை சார்பில் வழங்கப்பட்டு வந்தது. அதன் பின் இந்த சேவை 1990 ஆம் ஆண்டு தொலைத் தொடர்பு துறைக்கு மாற்றப்பட்டது. அதன் பின் இந்த சேவை 2000 ஆம் ஆண்டு பி.எஸ்.என்.எல் என்ற நிறுவனத்திற்கு மாற்றப்பட்டது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் ⇒ கணினி கண்டுபிடித்தவர் யார்…
சாமுவெல் மோர்சு வாழ்க்கை வரலாறு:
ஒற்றைக் கம்பி தந்தி முறை மற்றும் மோர்ஸ் தந்திக் முறை ஆகியவற்றைக் கண்டுபிடித்த அமெரிக்கக் கண்டுபிடிப்பாளரும் வரலாற்றுக் காட்சிகளை வரையும் ஓவியரும் ஆன சாமுவெல் மோர்சு என்பவர் முதன் முதலில் தந்தி அனுப்பும் முறையை கண்டுபிடித்தார்.
இவர் “மாசாசூசெட்ஸ் அமைந்துள்ள சார்லஸ் நகரத்தில் புவியியலாளர் மற்றும் போதகரான ஜேடிடியா மோர்ஸ் மற்றும் எலிசபத் ஆன் ஃபின்லே பிரீஸ் என்ற தம்பதியினருக்கு முதல் மகனாக பிறந்தார்.
இவர் தனது மனைவி லுக் ரெடியா பிக்கரிங் வாக்கர் இறந்த செய்தி முன்பே இவரை வந்து அடையாததால் இறுதியாக அவரது முகத்தைப் பார்க்கும் வாய்ப்புகூட இவருக்குக் கிடைக்காமல் போனது. அதனால், தான் இவர் விரைவாகத் தகவல் பரிமாறிக் கொள்வதற்கான வழிமுறை ஒன்றைக் கண்டறிய வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்பட்டார். அவர் மனைவியின் முகத்தை பார்க்காத சோகத்தினால் கண்டுபிடிக்கப்பட்டது தான் இந்த தந்தி முறை.
26 ஆங்கில எழுத்துக்கள் மற்றும் 0-9 வரையிலான எண்களுக்கு நிகராக ‘புள்ளி’ மற்றும் ‘கோடு’ குறியீடுகளைப் பயன்படுத்தி தந்திக்குறிப்பு எழுத்துக்களை மோர்ஸ் உருவாக்கினார். இதில் அவர் வெற்றியும் அடைந்தார்.
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |