தென்னிந்தியாவின் உயரமான சிகரம் எது?

தென்னிந்தியாவின் உயரமான சிகரம் எது? | Thenninthiyavin Uyarntha Sigaram

பொது அறிவு (GK in Tamil) சார்ந்த விஷயங்களை தெரிந்துகொள்ள விரும்பும் அனைவருக்கும் எங்களது அன்பான வணக்கங்கள். இன்றைய பதிவில் தென்னிந்தியாவின் மிக உயரமான சிகரம் என்று அழைக்கப்படுவது எது? அதன் சிற்பபு அம்சங்களைப் பற்றி இந்த தொகுப்பில் நாம் படித்து தெரிந்து கொள்வோம். இந்த பதிவு TNPSC போன்ற போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் ஆகவே படியுங்கள், படித்து பயன்பெறுங்கள்.

தென்னிந்தியாவின் உயரமான சிகரம் எது?

விடை: ஆனைமுடி

ஆனைமலை சிறப்புகள்:

தமிழ்நாட்டில் ஆனைமுடி என்னும் மலை முகடு தான் தென்னிந்தியாவின் மிகவும் உயரமான மலைச்சிகரம் ஆகும். ஆனைமுடி உயரம் 2,695 மீ (8,842 அடி). இது தென்னிந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள இடம். இம்மலை முகடு இரவிக்குளம் தேசிய பூங்காவின் தென் பகுதியிலே ஏலக்காய் மலைகள், ஆனை மலைகள், பழனி மலைகள் கூடுமிடத்தில் உள்ளது. இந்த ஆனைமுடி மலை கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது. மலை முகடு முன்னார் (மூனார்) நகராட்சியின் கீழ் உள்ளது.

இதையும் படியுங்கள்–> தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டம் எது?

 

மூணாறு அருகே, 97 சதுர கி.மீ., சுற்றளவைக் கொண்ட இந்த பூங்கா, ஆட்கள் நடமாட்டம் இல்லாத வனங்களாலும், 90% புல் மேடுகளாலும் சூழப்பட்டது. இதன் தாழ்வாரத்தில், பரந்து கிடக்கும் இரவிகுளம் தேசிய பூங்காவில், அக்காந்தேசியா இனத்தைச் சேர்ந்த, 46 வகை குறிஞ்சி செடிகளும், மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் காணப்படும், அபூர்வ இன, வரையாடுகளும் உள்ளன.

இதையும் படியுங்கள்–> ஆசியாவின் மிக உயரமான கோபுரம் எது?

மேலும் சில தகவல்கள்:

  1. தமிழ் நாடானது நில தோற்றத்தின் அடிபடையில் மேற்கு தொடர்ச்சி மலை, கிழக்கு தொடர்ச்சி மலை, கடற்கரை சமவெளி என பிரிக்கப்படுகிறது.
  2. மேற்கு தொடர்ச்சி மலை வடக்கே நீலகிரி முதல் தெற்கே கன்னியாகுமரி மாவட்ட சுவாமி தோப்பில் உள்ள மருதமலை வரை நீண்டு உள்ளது.
  3. இம்மலை தொடர் தொடர்ச்சியாக இருந்தாலும் சில கனவாய்கள் காணப்படுகின்றன. ஆனை மலை தமிழ் நாடு மற்றும் கேரள மாநில எல்லை பகுதியில் பாலக்காட்டு கணவாய்க்கு தெற்கே அமைந்துள்ளது.
  4. ஆனை மலை புலிகள் காப்பகம், ஆழியாறு பாதுகாக்க பட்ட காடுகள், வால்பாறை மலை வாழ்விடம், காடம்பாறை நீர்மின் நிலையங்கள் போன்றவை இம்மலை பகுதியில் அமைந்துள்ளன.
  5. ஆழியாறு மற்றும் திரு மூர்த்தி அணைகள் இம்மலையின் அடிவாரத்தில் கட்டப்பட்டுள்ளன.

 

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil